(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 44-59 இன் தொடர்ச்சி)

60. அறியாப்பறப்பியல்

பறக்கும் தட்டு ஆய்வியல், அறியா பறக்கும் பொருளியல், அறியாப் பறப்பியல்   எனப்படுகிறது.

Ufo என்பது unidentified flying object என்பதன் தலைப் பெழுத்துச் சொல்லாகும். இதன் பொருள் அடையாளம் அறியாத பறக்கும் பொருள் என்பதாகும். இதனைச் சுருக்கமாக

அறியாப் பறப்பியியல்  – Ufology எனலாம்.

Ufology

61. அறிவீட்டவியல்

Gnoseology

62. அறுவடை பிந்திய நுட்பியல்

Post Harvest Technology

63. அறை ஒலியியல்

Room Acoustics

64. அற்பச் செய்தியியல்

 

leptós என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு மெல்லிய, குறுகிய, அற்ப எனப்பொருள்கள்.

அற்பச்செய்திகள் குறித்த இயல் என்பதால் அற்பச்செய்தியியல் எனலாம்.

Leptology(2)

65. அற்பத் திணைஇயல்

 

lepto என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மெல்லிய, குறுகிய என்று பொருள்கள். அற்பம் என்னும்  பொருளில் பயன்படுத்தியுள்ளனர்.

Trivial Topology

66. அனைத்துச் சமயவியல்

 

Pan என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் அனைத்து.

Pantheology

67. ஆக்கப் பொறியியல்

 

உருவாக்கம், செய்பொருள் ஆக்கம் ஆகியவற்றின் சுருக்கமாக ஆக்கம் எனப் படுகிறது. உற்பத்தி என்பதை production எனச் சொல்லலாம்.

Manufacturing Engineering

68. ஆசானியல்

 

Pedagogy – ஆசிரியரியல், போதனைமுறை, ஆசானியல், போதனைமுறை, கல்வியியல், ஆசிரியரியல் போதனை முறை, கற்பிக்கும் கலை, கற்பித்தல் முறை எனப் பல வகையாகக் குறிப்பிடுகின்றனர்.

போதனை தமிழ்ச் சொல்லன்று.  Patrology என்பதைக் கற்பிப்பியல் என்பதால் இங்கே கற்பித்தல் தொடர்பான சொற்கள் தவிர்க்கப்பட்டன. ஆசிரியப் பயிற்சிக்குரிய கல்வியியல் என்பதால்

ஆசானியல் – Pedagogy என்பது ஏற்கப்பட்டுள்ளது.

paidagōgía என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து ஃபிரெஞ்சு மொழி வழியாக இச்சொல் இடம் பெற்றுள்ளது.

Pedagogy

69. ஆடல் தொற்றுஇயல்

Dance Epidemics

70. ஆடவர் நோயியல்

Andro என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் ஆண்.

Andrology

71. ஆடிஒளியியல்

Mirror Optics

72. ஆட்சிமாற்றஇயல்

Transitology

73. ஆமையியல்

Testudinology /  Chelonology /  Cheloniology

74. ஆயுதவியல்

Hoplology

75. ஆய்திட்டவியல்

Projectiology

76. ஆய்வு வினையியல்

Sakanology

77. ஆர்மீனியரியல்

Armenology

78. ஆவணவியல்

Anagraphy 

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000