(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 510 – 527 இன் தொடர்ச்சி)
528. காய்ச்சல் இயல் pyretic என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காய்ச்சல். | Pyretology |
529. கால நிரலியல் பழங்கிரேக்கத்தில் chrono என்றால் காலம், காலத்துடன் தொடர்புடையது எனப் பொருள்கள். நிகழ்வுகள் நிகழ்ந்த கால வரிசையை நிரல்படக் கூறும் அறிவியல். எனவே, கால நிரலியல் எனலாம். | Chronology |
530. காலத் தீங்கியல் | Catachronobiology |
531. காலநிலை நோயியல் | Climatopathology |
532. காலவரிசை மருந்தியல் | Chronopharmacology |
533. கால வுயிரியல் | Chronobiology |
534. கால்நடை நச்சூட்டவியல் | Veterinary Toxicology |
535. பூஞ்சையியல்/ பூசணவியல்/ காளானியல் Mycology – கவகவியல், காளானியல், பூசணவியல், பூசண இயல், பூஞ்சை இயல், நோயியல், பங்கசியல் எனப்படுகிறது. fungus என்பதை ஒலி பெயர்ப்பாகப் பங்கசியல் என்று கூறியுள்ளனர். ஆதலின் இதைப் பயன்படுத்த வேண்டா. நோயியல் என்பது பொதுவான நோய்கள்பற்றிய இயல். எனவே, அதுவும் ஏற்ற சொல்லல்ல. கவகவியல் என்பதன் விளக்கம் தெரியவில்லை. தமிழ் அகராதிகளில் இச்சொல் இடம் பெறவில்லை. எனினும் ஐரோப்பிய அகராதியில் கவகம் – fungus எனப்பொருள் தரப்பட்டுள்ளது. எனவே, இதனடிப்படையில் இங்கே கவகம் தரப்பட்டிருக்கலாம். புறநானூற்றுப் பாடல் 393 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடியது. இதில் எட்டாம் அடியாகச் சில பதிப்புகளிலும் இணையப் பக்கங்களிலும் “……………….. கவகம் எல்லாம் ஒருபால் பட்டென” என வந்துள்ளது. உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி அவர்களின் புறநானூற்று உரையில் “உலக மெல்லா மொருபாற் பட்டென” வந்துள்ளது. கவகம் என வரும் நூல்களில் அதற்கான உரை வழங்கப்படவில்லை. எனவே, முன்சொல் விடுபட்ட இவ்வடியில் கவகம் தவறுதலாக இடம் பெற்றிருக்கலாம். எனினும் நன்கறிந்த பூஞ்சை முதலான சொற்கள் இருக்கையில் இதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம் என இங்கே குறிக்கவில்லை. fungus எனப்படுவதே இங்கே குறிப்பிடும் காளான். ஆனால் உண்ணத்தகும் mushroom எனத் தவறாகப் புரிந்து கொள்ளலாம். பிற எல்லாம் ஒத்த பொருள் உடையன. இவற்றுள் பூசணவியல் ஏற்கப்பெற்று இங்கே குறிக்கப் பெற்றுள்ளது. | Mycology /Ethnomycology / Mycetology |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
No comments:
Post a Comment