03 January 2022 No Comment
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 21-43 இன் தொடர்ச்சி)
44. அலையியல் | Tidology |
45. அல்பேனியரியல் | Albanology |
46. அழகெழுத்து வரைவியல் பிரெஞ்சுச் சொல்லின் மூலமான kállos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அழகு. + gráphō என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் எழுத்து. எனவே, kalligraphía என்பது அழகான எழுத்தைக் குறிக்கிறது. | Calligraphic graphics |
47. அழிப்புநுட்பியல் | Terminator Technology |
48. அழுத்த இயங்கியல் | Barodynamics |
49. அளபுரு நீரியல் | Parametric Hydrology |
50. அளவறிபுவிவடிவியல் | Quantitative Geomorphology |
51. அலகியல்
Metrology – அலகியல், அளவியல், எடை அளவுகள் ஆய்வியல், எடை அளவுகள் இயல், எடை அளவியல், அளவீட்டியல் எனப்படுகின்றது. métron என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் அளவிடு. எனினும் ஐரோப்பிய அகராதி குறிப்பிடும் அலகியல் என்பதே சுருக்கமாக உள்ளது. | Metrology(1) |
52. அளவையியல்(2)
அளவை இயல் அறிவைப் பெறுவதற்கான வாதங்களை அடிப்படையாகக் கொண்ட தருக்கக்கலையைக் குறிப்பிடும். ஆதலின், அளவையியல் என்பது ஏரணவியல்/ தருக்கவியல்/logic என்னும் பொருளையும் குறிக்கும். எனவே, எடை அளவியல் என்னும் பொருளில் இச்சொல்லைக் கையாள்வது குழப்பத்தைத் தரும். | Metrology(2)
|
53. அளவைப்பொருளியல் | Econometrics |
54. அளவியல்
Mensuration – அளத்தல், அளவியல், அளவையியல், வடிவ அளவியல் எனப்படுகின்றது. அளவையியல் என்றால் தருக்கவியல் எனத் தவறாகப் பொருள் கொள்ள நேரிடும். எனவே, அதனைப் பயன்படுத்த வேண்டா. Mensuration என்னும் பிரெஞ்சு / இலத்தீன் சொல்லின் பொருள் அளத்தல். Mensuration-மாதவிடாய்/ மாதவிலக்கு என்னும் பொருள்கள் இருப்பினும் இங்கு அளப்பதையும் கணக்கியலில் வடிவ அளவையை யும் குறிக்கிறது. அளப்பது குறித்த / அளவு குறித்த இயல் என்பதால் அளவியல் – Mensuration எனலாம். காண்க: அலகியல்– Metrology(1) | Mensuration |
55. அறக்கருத்தாய்வியல் | Meta Ethics |
56. அறவியல்
Ethics- அறவியல், ஒழுக்கவியல், அற இயல், அறநெறி, அறநெறியியல், அறமுறை, அறவியல், ஒழுகலாறு, ஒழுக்கமுறை, ஒழுக்காற்றியல், ஒழுக்காறு, நன்னெறி, நன்னெறி யியல், நன்னெறி யுடைமை எனப் பலவாறாகக் கூறப்படுகிறது. சுருக்கமான அறவியல் – Ethics என்பதே குறிக்கப்பட்டுள்ளது. | Ethics |
57. அறிகைஉளவியல் Cognitive Psychology – அறிகை உளவியல், அறிதல்சார் உளவியல், அறிதிற உளவியல், அறிதிறன் உளவியல், அறிவாற்றல் உளவியல் எனப்படுகிறது. Cognitive – அறிதகு, அறிதல்சார், அறிதிற, அறிவாற்றலுடைய, தெரிவுசார், புரிந்துகொள்ளும் எனப்படுகின்றது. cognitive என்னும் இலத்தீன்சொல்லிற்கு “நான் அறிவேன்” எனப் பொருள். இவற்றுள் சுருக்கமான அறிகை உளவியல் இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது. | Cognitive Psychology |
58. அறிதிறன் மரபியல் | Intelligence Genetics |
59. அறிதுயிலியல் | Hypnotic |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
No comments:
Post a Comment