(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 291 – 313 இன் தொடர்ச்சி)
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 314 – 331
315. உற்பத்தி நுட்பியல் | Production Technology |
316. ஊடறு நுட்பியல் | Disruptive Technology |
317. ஊடாடு வரைவியல் | Interactive Graphics |
318. ஊடுருவு ஏவியல் | Ballistics of Penetration |
319. ஊட்ட உணவியல் | Sitology / Sitiology/ Dietetics / Nutrition Dietetics |
320. ஊட்ட உணவு மானிடவியல் | Nutritional Anthropology |
321. ஊட்டணுவியல் மின்னூட்டம் பெற்றிடும் அணு அல்லது அணுக்கள் குறித்த இயல். சுருக்கமாக ஊட்டணுவியல் எனப்படுகிறது. முதலில் அகராதிகளில் இடம் பெற்ற ஒலிபெயர்ப்புச் சொல்லான அயனியியல் என்பதையே குறித்திருந்தேன். இப்பொழுது தவற்றினைத் திருத்திக் கொண்டு தமிழ்ச் சொல்லாகக் குறித்துள்ளேன். | Ionics |
322. ஊட்டவியல் உடலூட்டவியல், ஊட்ட வியல், ஊட்டவியல், சத்துணவு யியல் எனப்படுகின்றது. சுருக்கமான ஊட்டவியல் – Trophology என்பதையே நாம் பயன்படுத்தலாம். | Trophology |
323. ஊணியல் | Alimentology |
324. ஊரக அரசியல் | Rural politics |
325. ஊரக உளவியல் Folk என்பது நாட்டார், நாட்டுப்புறம் என்னும் பொருள்களைத் தரும் சொல். எனினும் இங்கேயும் வேறு சில இடங்களிலும் ஊரகம் என்று குறிக்கப் பெறுகிறது. | Folk Psychology |
326. ஊரக விலங்கியல் | Folk Zoology |
327. ஊரகக் குமுகவியல் | Rural Sociology |
328. ஊரகச் சொற் பிறப்பியல் Folk என்பது நாட்டார், நாட்டுப்புறம் என்னும் பொருள்களைத் தரும் சொல். எனினும் இங்கேயும் வேறு சில இடங்களிலும் ஊரகம் என்று குறிக்கப் பெறுகிறது. | Folk Etymology |
329. ஊரகப் பொருளியல் | Rural Economics |
330. நகரவியல் | Urbanology |
331. ஊர்தி ஆய உரிம வியல் ஐக்கிய இங்கிலாந்தில் 1921 முதல் வழங்கப் பெற்ற ஊர்தி வரிச் சீட்டுகளை ஆராயும் துறை என்பதால் ஊர்திவரிச் சீட்டியல் எனக் குறித்திருந்தேன். Vehicle Excise Licence என்பதன் தலைப்பெழுத்துச் சொல்லே VEL. Excise-வழியாயம், ஆயம், தீர்வை, உல்கு எனப் பொருள்கள். பயணத்திடையே பெறும் ஆயம் என்பதால் வழியாயம் என்பது சரிதான். licence உரிமம் ஆகும். எனவே, ஊர்தி ஆய உரிம வியல் – vehicle excise licence எனலாம். | Velology |
(தொடரும்)
No comments:
Post a Comment