Monday, March 7, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 995 -1017: இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  976 – 994 இன் தொடர்ச்சி)

995. நீரியவானிலை யியல்

Hydrometerology

996.  நீரியங்கியல்

Hydro Dynamics

997. நீர்மப் பொறியியல்

Hydraulic Engineering

998. நீர்ம இயல்

Hydrology

999. நீரிழிவியல்

Diabetology

1000. நீர் உயிரியல்

Hydrobiology  / Aquatic Biology

1001. நீர் நச்சியல்

Aquatic toxicology

1002. நீர்நில வாழியியல்

bátrakhos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் தவளை. தவளை முதலான ஈரிட வாழ்வி – நீர்நில வாழி குறித்த ஆராய்ச்சியியலை  Batrachology என்கின்றனர்.

Batrachology

1003. நீர்நுட்பியல்

Water Technology

1004. நீர்நுண்ணுயிரியல்  

Aquatic Microbiology

1005. நீர்வழங்கல் பொறியியல்

Water-Supply Engineering

1006. நீர் வேளாணியல்

நீர்ப்பயிரீடு, நீர்மத் தாவர வளர்ப்பு, நீர் வளர்ப்பியல், நீர் வேளாண்மை, மண்ணிலி வேளாண்மை, மண்ணில்லாச் செடிவளர்ப்பு எனப் பல வகையாகக் குறிக்கப் படுகின்றது. நீர் வளர்ப்பு என்றால் நீரை வளர்ப்பதாகப் பொருள் கொள்ளக் கூடாது. அதுபோல் நீர் வேளாண்மை என்றால் நீரில் வேளாண்பணி மேற்கொள்வது. மண்ணில்லாமல் நீரில் பயிரிடும் முறைபற்றிய இயல் என்பதால் எல்லாம் சரிதான். எனினும் சுருக்கமாக hydroponics-நீர் வேளாணியல் எனலாம். 

கிரேக்கத்தில் hydro என்றால் நீர் என்றும் ponos என்றால் வேளாண்மை என்றும் பொருள்.

Hydroponics 

1007. நீர் வானிலையியல்

நீர்வெளி இயல்/நீரியல்சார் வானிலையியல்/நீர் வானியல் எனக் குறிப்பிடுகின்றனர்.

Hudro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நீர். இங்கே நீரியலைக் குறிக்கிறது. எனவே, நீரிய  வானிலையியல்  எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

Hydrometeorology

 

1008. நீர் வளைசலியல்

Ecohydrology / Hydroecology

1009. நீர்ப் புவியியல்

Hydrogeology/Geohydrology– நிலத்தடி நீரியல், நீர்ப்புவியியல், புவிநீர் அமைப்பியல், நீரிய நிலத்தியல், நீர்ப்புறவியியல், நீர்சார் நிலவியல், நீர்நிலப் பொதியியல், நீர் நிலவியல், நிலநீரியல், புவிநீரியல் எனப் படுகிறது.

Hydro என்றால் நீர் எனப்பொருள். எனினும் நிலத்தடி நீரை இங்கே குறிக்கிறது. Geology என்பதைப் புவியியல் என்றே குறிப்பிடு கிறோம். எனவே,

நீர்ப்புவியியல் – Hydrogeology/  Geohydrology எனலாம்.

Hydrogeology / Geohydrology

 

1010. நீர்ப் பொருளியல்

Hydroeconomics

1011. நீர்ம இயக்க இயல்

Hydrokinetics

1012. நீர்ம ஒலியியல்

Hydroacoustics

1013. நீர்ம விசையியல்

Hydromechanics

1014. நீர்மக் கட்டியியல்

Cystology

1015. நீர்மக் காந்தவியல்

Hydromagnetics

1016. நீர்மநிலை ஒப்புமையியல்

Hydrostatic analogy

1017. நீர்ம யியல்

Hydraulics– நீர்ம விசையியல், நீர்மவியல், நீர்ம யியல்,  நீர் விசையியல், நீரியல், நீர்ப்பாயவியல், பாய்பொருளியல், நீர்ப்பாசனவியல், நீரழுத்தவியல், நீரியல் ஆய்வுத்துறை,  நீரியக்க இயல் எனப் பலவாறாகப் பயன்படுத்து கின்றனர்.

அதே நேரம் Hydromechanics என்பதும் நீர்ம விசையியல் எனப்படுகிறது. நீர்ப்பாசனவியல் என்றால் Irrigation எனத் தவறாகப் புரிந்து கொள்ள நேரிடும். நீரழுத்த வியல் என்பதை Hydrostatics எனச் சிலர் குறிப்பிடுவதால் இங்கே பயன்படுத்த வேண்டா.

ஆனால், இவ்வறிவியல் நீரின் பயன்பற்றி மட்டு மல்லாமல் திரவ/நீர்ம வடிவிலுள்ள எதன் பயனையும் பற்றியது. எனவே, நீர்மம் அல்லது பாய்பொருள் என்ற குறிப்பில் உள்ளனவே சரியானவை.

இவற்றில் சுருக்கமான

நீர்மயியல் – Hydraulics இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

Hydraulics

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Sunday, March 6, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 976 – 994 இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  962 – 975 இன் தொடர்ச்சி)
976. நிலஅமைவு வளைசலியல் Landscape – நிலத்தோற்றம், நிலைபரப்பு, இயற்கை நிலத்தோற்றம், அகண்மை, அகன்மை, அகலவாக்கு, இயற்கை நிலக்காட்சி, இயற்கைக்காட்சி, நில அமைவு, நிலப்படம், நிலவடிவம், கிராமம், இயற்கை நிலத்தோற்றம், கிடைப்பரப்பு, அகலவாக்கு, அகண்மை, இயற்கை வனப்பு, நிலக்காட்சி,  நிலத் தோற்றம், நிலவெளி எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. நில அமைவு என்பதையே நாம் பயன் படுத்தலாம். எனவே, நிலஅமைவு வளைசலியல் – Landscape ecology எனலாம்.Landscape ecology
977. நிலக்கரிப் பாறையியல்Coal petrology
978. நிலத்தடி நீரியல்Hydrology of ground water
979. நிலத்தடிப் புவியியல்Subsurface Geology
980. நிலநடுக்க வியல்Seismology
981. நிலப்படக் கலையியல்Cartology
982. நிலப்பரப்பு மொழியியல்Areal Linguistics
983. நில வானிலையியல்   Surface Meteorology
984. நிலா வடிவியல் Selenomorphology– என்றால் நிலா வடிவியல் என்றும் நிலவு நில அமைப்பியல் என்றும் குறிப்பிடுகின்றனர். இரண்டும் சரிதான். எனினும் சுருக்கமான நிலா வடிவியல் – Selenomorphology இங்கே குறிக்கப் பெற்றுள்ளது.  உண்மையில் நிலா அல்லது நிலவு என்பது வான்மதியின் ஒளியைத்தான் குறிக்கின்றது. வழக்கத்தில் அவ்வொளி தரும் திங்களையும் நிலா என்கின்றோம்.Selenomorphology
985. நிலாத் திணையியல்Lunar topology
986. நிலாவியல்Selenology
987. நிலைத்த நுட்பியல்Sustainable technology
988. நிலை மின்னியல்Electrostatics
989. நிறவியல்Chromatics
990. நிறவியங்கியல்Chromodynamics
991. நிறுத்தற்குறி யியல்Stigmeology
992. நீத்தாரியல்Martyrology
993. நீராடல் இயல்  balaneîon என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் குளித்தல்.Balneology  
994. நீராவியியல் atmo- என்பது பழங்கிரேக்கத்தில் நீராவியைக் குறிக்கும்.Atmology

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Saturday, March 5, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 962 – 975 இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  948 – 961 இன் தொடர்ச்சி)
962. நாள நோயியல் angeîon பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் குருதி நாளம்.Angiopathology
963. நாளவியல் angeîon பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் குருதி நாளம்.Angiology 
964. நிகழ்வுச் சங்கிலி வயண இயல்Event Chain Methodology
965. நிகழ்வுத் தாக்கவியல்Hedonology
966. நிண நீரியல்Lymphology
967. நிதி நுட்பியல் Engineering என்றால் பொதுவாகப் பொறியியல் என்று தான் பொருள். Engineer என்றால் பொறியாளர் என்பது தவிர வகுத்தமை, கட்டமை, செயலாற்று, கடமையாற்று, திட்டமியற்று முதலிய பல பொருள்களும் உள்ளன. இந்த இடத்தில் நிதி சார் வகுத்தமைத்தலைக் குறிப்பிடும் நுட்ப இயல் சார்ந்தது எனப் பொருளாகும். எனவே, நிதி நுட்பியல் எனப்படுகிறது.Financial Engineering
968. நிதிப் பொருளியல்Financial Economics
969. நியூட்டனிய விசையியல்Newtonian mechanics
970. நொதுமி ஒளியியல்Neutron optics
971. நிரப்பியல்Complementology
972. நிகழி மொழியியல் Programming Linguistics– செய்நிரலாக்க மொழியியல், நிரலாக்க மொழியியல் எனக் கூறப்படுகின்றது. ஐந்தாவது இணையத்தமிழ் மாநாட்டில் அளித்த கட்டுரையில் Programming நிகழி எனக் குறிப்பிட்டிருந்தேன். அதற்கிணங்க, நிகழி மொழியியல் – Programming Linguistics எனலாம்.Programming Linguistics
973. நிலநீர்வாழி யியல்Amphibiology
974. மேற்பரப்புப் புவியியல் நில மேற்பரப்பு புவியியல், நில மேற்பரப்புப் புவியியல், மேற்பரப்புப்படிவு – நிலத்தியல், நில மேற்பரப்புச் சூழியல்  எனப்படுகிறது. முதற்சொல் ஒற்றுப்பிழையுடன் உள்ளது. இறுதித் சொல் புவியியல் என்பது சூழியல் எனத் தவறாகக் கருதி ஆக்கப்பட்டுள்ளது. எனவே, சுருக்கமாக மேற்பரப்புப் புவியியல் – Surficial Geology எனலாம்.Surficial Geology
975. நிலஅதிர்வியல் Engysseosmology– நிலஅதிர்ச்சி பதிவியல் / நிலஅதிர்வியல்,  பதிவுசார் நிலநடுக்கவியல், நிலவியல் எனக் குறிப்பிடுகின்றனர். Seosmo என்றால் நில அதிர்ச்சி சார்ந்த, நில அதிர்ச்சியிலாய எனப் பொருள்கள். நில நடுக்கம் என்பது இயற்கையான பேரிடர். அதைப் பதிவது அதன் தன்மை, விளைவு முதலியவற்றை அறிய உதவும் அறிவியல் முறை. பதிவுசார்ந்து நில நடுக்கம் ஏற்படுவதில்லை. எனவே, பதிவுசார் நிலநடுக்க வியல் என்பது பொருத்தமாக இல்லை. நிலவியல் என்றால் நிலவு இயல் எனத் தவறானபுரிதலுக்கு வழி வகுக்கும். எனவே, அதுவும் ஏற்றதல்ல. நிலம் + இயல்  என்னும் பொழுது அத்துச் சாரியை பெற்று நிலத்துஇயல் > நிலத்தியல் என வரும். எனினும் நில அதிர்வை ஆராயும் பொழுதே அதைப் பதிவது குறித்த  ஆராய்ச்சியும் இடம் பெற்று விடுவதால் சுருக்கமாக, நில அதிர்வியல் – Engysseosmology எனலாம்.Engysseosmology                                                                             

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Friday, March 4, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 948 – 961 இலக்குவனார் திருவள்ளுவன்

 

அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  928 – 947 இன் தொடர்ச்சி)
948. நன்னியல் agathós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நல்ல.  நன்மைதரும் நல்லன பற்றிய இயல் என்பதால் நன்னிலை எனப்பட்டது.Agathology
949. நன்னீருயிரியல்   limno என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் ஏரி, குளம் என்பன. புதுநீர் உள்ள நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களைப் பற்றிய இயல். எனவே நன்னீருயிரியல் எனப்பட்டது.Limnobiology
950. நன்னீர் வளைசலியல்   Fresh Water Ecology – நன்னீர்ச் சுற்றுப்புறவியல், நன்னீர்ச் சூழலியல், புதிய நீர்ச் சூழலியல் எனக் கூறப்படுகிறது. Ecology வளைசலியல் என வரையறுத்துள்ளதால், நன்னீர் வளைசலியல் – Fresh Water Ecology எனலாம்.Fresh Water Ecology
951. நாக்கியல்   காண்க: அருஞ்சொல்லியல்  – Glossology(1)Glossology(2)
952. நாடி இயல் artēria  என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நாடி/சிரை. Phléps என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நாடி. இருவகையாகவும் நாடியியல் குறிக்கப்படுகிறது.Arteriology / Phlebology
953. நாடித்துடிப்பியல் sphugmós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நாடித் துடிப்பு.Sphygmology
954. நாட்காட்டியியல் hēmérā என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நாள். பின் இது நாள்களைக் குறிப்பிட்டுக் காட்டும் நாட்காட்டியைக் குறித்தது.Hemerology
955. நாட்டுப்புற மொழியியல்Folk Linguistics
956. நாட்டுப்புறக் கதையியல் story என்றால் கதை என்பதை அறிவோம். எனினும் தொடக் கத்தில் சமக்கால கதை களைவிட நாட்டுப் புறக் கதைகளே சொல்லப்பட்டன. எனவே, நாட்டுப் புறக் கதைகளைக் கூறும் இயல் என்னும் பொருளில்   Storiology எனக் கையாண்டுள்ளனர்.Storiology
957. நாட்பட்ட  நோய்த் தொற்றியல்Chronic diseaseepidemiology
958. காசியல் Numismatology/Numismatics – காசியல், நாணயம், பதக்கம் முதலியவற்றின் ஆராய்ச்சித் துறை, நாணயவியல், நாணயம் பற்றிய ஆய்வு நூல் எனப்படுகின்றது. இவ்வியல் நாணயங் களையும் நாணயங்களாகப் பயன்பட்ட பொருள்களையும் பணத்தாள்களையும் பதக்கங்கள், தாள் பணங் களையும் பற்றிய ஆய்வு nomisma என்னும் இலத்தீன் / கிரேக்கச்சொல்லிற்குக் காசு/நாணயம் எனப் பொருள்கள். எனவே, சுருக்கமாகக் காசியல் – Numismatology / Numismatics எனலாம். காசு என்றால் சில்லறைக்காசு என எண்ணாமல் நாணயமாகக் கருதப்படும் அனைத்தையும் கருதவேண்டும்.Numismatology / Numismatics
959. நாயியல்   kúōn என்னும் இலத்தீன் / பழங் கிரேக்கச்சொல்லின் பொருள் நாய். இதன் வழி வந்த சொல்லே cyno.Cynology
960. நாயினவியல்Ethnocynology
961. நாவாய்ப்பூச்சி யியல்   hemipterus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அரை இறக்கைகள். நாவாய்ப் பூச்சிகளைக் குறிக்கிறது.Hemipterology

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000