(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 928 – 947 இன் தொடர்ச்சி)
948. நன்னியல் agathós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நல்ல. நன்மைதரும் நல்லன பற்றிய இயல் என்பதால் நன்னிலை எனப்பட்டது. | Agathology |
949. நன்னீருயிரியல் limno என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் ஏரி, குளம் என்பன. புதுநீர் உள்ள நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களைப் பற்றிய இயல். எனவே நன்னீருயிரியல் எனப்பட்டது. | Limnobiology |
950. நன்னீர் வளைசலியல் Fresh Water Ecology – நன்னீர்ச் சுற்றுப்புறவியல், நன்னீர்ச் சூழலியல், புதிய நீர்ச் சூழலியல் எனக் கூறப்படுகிறது. Ecology வளைசலியல் என வரையறுத்துள்ளதால், நன்னீர் வளைசலியல் – Fresh Water Ecology எனலாம். | Fresh Water Ecology |
951. நாக்கியல் காண்க: அருஞ்சொல்லியல் – Glossology(1) | Glossology(2) |
952. நாடி இயல் artēria என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நாடி/சிரை. Phléps என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நாடி. இருவகையாகவும் நாடியியல் குறிக்கப்படுகிறது. | Arteriology / Phlebology |
953. நாடித்துடிப்பியல் sphugmós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நாடித் துடிப்பு. | Sphygmology |
954. நாட்காட்டியியல் hēmérā என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நாள். பின் இது நாள்களைக் குறிப்பிட்டுக் காட்டும் நாட்காட்டியைக் குறித்தது. | Hemerology |
955. நாட்டுப்புற மொழியியல் | Folk Linguistics |
956. நாட்டுப்புறக் கதையியல் story என்றால் கதை என்பதை அறிவோம். எனினும் தொடக் கத்தில் சமக்கால கதை களைவிட நாட்டுப் புறக் கதைகளே சொல்லப்பட்டன. எனவே, நாட்டுப் புறக் கதைகளைக் கூறும் இயல் என்னும் பொருளில் Storiology எனக் கையாண்டுள்ளனர். | Storiology |
957. நாட்பட்ட நோய்த் தொற்றியல் | Chronic diseaseepidemiology |
958. காசியல் Numismatology/Numismatics – காசியல், நாணயம், பதக்கம் முதலியவற்றின் ஆராய்ச்சித் துறை, நாணயவியல், நாணயம் பற்றிய ஆய்வு நூல் எனப்படுகின்றது. இவ்வியல் நாணயங் களையும் நாணயங்களாகப் பயன்பட்ட பொருள்களையும் பணத்தாள்களையும் பதக்கங்கள், தாள் பணங் களையும் பற்றிய ஆய்வு nomisma என்னும் இலத்தீன் / கிரேக்கச்சொல்லிற்குக் காசு/நாணயம் எனப் பொருள்கள். எனவே, சுருக்கமாகக் காசியல் – Numismatology / Numismatics எனலாம். காசு என்றால் சில்லறைக்காசு என எண்ணாமல் நாணயமாகக் கருதப்படும் அனைத்தையும் கருதவேண்டும். | Numismatology / Numismatics |
959. நாயியல் kúōn என்னும் இலத்தீன் / பழங் கிரேக்கச்சொல்லின் பொருள் நாய். இதன் வழி வந்த சொல்லே cyno. | Cynology |
960. நாயினவியல் | Ethnocynology |
961. நாவாய்ப்பூச்சி யியல் hemipterus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அரை இறக்கைகள். நாவாய்ப் பூச்சிகளைக் குறிக்கிறது. | Hemipterology |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
No comments:
Post a Comment