(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 976 – 994 இன் தொடர்ச்சி)
995. நீரியவானிலை யியல் | Hydrometerology |
996. நீரியங்கியல் | Hydro Dynamics |
997. நீர்மப் பொறியியல் | Hydraulic Engineering |
998. நீர்ம இயல் | Hydrology |
999. நீரிழிவியல் | Diabetology |
1000. நீர் உயிரியல் | Hydrobiology / Aquatic Biology |
1001. நீர் நச்சியல் | Aquatic toxicology |
1002. நீர்நில வாழியியல் bátrakhos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் தவளை. தவளை முதலான ஈரிட வாழ்வி – நீர்நில வாழி குறித்த ஆராய்ச்சியியலை Batrachology என்கின்றனர். | Batrachology |
1003. நீர்நுட்பியல் | Water Technology |
1004. நீர்நுண்ணுயிரியல் | Aquatic Microbiology |
1005. நீர்வழங்கல் பொறியியல் | Water-Supply Engineering |
1006. நீர் வேளாணியல் நீர்ப்பயிரீடு, நீர்மத் தாவர வளர்ப்பு, நீர் வளர்ப்பியல், நீர் வேளாண்மை, மண்ணிலி வேளாண்மை, மண்ணில்லாச் செடிவளர்ப்பு எனப் பல வகையாகக் குறிக்கப் படுகின்றது. நீர் வளர்ப்பு என்றால் நீரை வளர்ப்பதாகப் பொருள் கொள்ளக் கூடாது. அதுபோல் நீர் வேளாண்மை என்றால் நீரில் வேளாண்பணி மேற்கொள்வது. மண்ணில்லாமல் நீரில் பயிரிடும் முறைபற்றிய இயல் என்பதால் எல்லாம் சரிதான். எனினும் சுருக்கமாக hydroponics-நீர் வேளாணியல் எனலாம். கிரேக்கத்தில் hydro என்றால் நீர் என்றும் ponos என்றால் வேளாண்மை என்றும் பொருள். | Hydroponics |
1007. நீர் வானிலையியல் நீர்வெளி இயல்/நீரியல்சார் வானிலையியல்/நீர் வானியல் எனக் குறிப்பிடுகின்றனர். Hudro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நீர். இங்கே நீரியலைக் குறிக்கிறது. எனவே, நீரிய வானிலையியல் எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும். | Hydrometeorology
|
1008. நீர் வளைசலியல் | Ecohydrology / Hydroecology |
1009. நீர்ப் புவியியல் Hydrogeology/Geohydrology– நிலத்தடி நீரியல், நீர்ப்புவியியல், புவிநீர் அமைப்பியல், நீரிய நிலத்தியல், நீர்ப்புறவியியல், நீர்சார் நிலவியல், நீர்நிலப் பொதியியல், நீர் நிலவியல், நிலநீரியல், புவிநீரியல் எனப் படுகிறது. Hydro என்றால் நீர் எனப்பொருள். எனினும் நிலத்தடி நீரை இங்கே குறிக்கிறது. Geology என்பதைப் புவியியல் என்றே குறிப்பிடு கிறோம். எனவே, நீர்ப்புவியியல் – Hydrogeology/ Geohydrology எனலாம். | Hydrogeology / Geohydrology
|
1010. நீர்ப் பொருளியல் | Hydroeconomics |
1011. நீர்ம இயக்க இயல் | Hydrokinetics |
1012. நீர்ம ஒலியியல் | Hydroacoustics |
1013. நீர்ம விசையியல் | Hydromechanics |
1014. நீர்மக் கட்டியியல் | Cystology |
1015. நீர்மக் காந்தவியல் | Hydromagnetics |
1016. நீர்மநிலை ஒப்புமையியல் | Hydrostatic analogy |
1017. நீர்ம யியல் Hydraulics– நீர்ம விசையியல், நீர்மவியல், நீர்ம யியல், நீர் விசையியல், நீரியல், நீர்ப்பாயவியல், பாய்பொருளியல், நீர்ப்பாசனவியல், நீரழுத்தவியல், நீரியல் ஆய்வுத்துறை, நீரியக்க இயல் எனப் பலவாறாகப் பயன்படுத்து கின்றனர். அதே நேரம் Hydromechanics என்பதும் நீர்ம விசையியல் எனப்படுகிறது. நீர்ப்பாசனவியல் என்றால் Irrigation எனத் தவறாகப் புரிந்து கொள்ள நேரிடும். நீரழுத்த வியல் என்பதை Hydrostatics எனச் சிலர் குறிப்பிடுவதால் இங்கே பயன்படுத்த வேண்டா. ஆனால், இவ்வறிவியல் நீரின் பயன்பற்றி மட்டு மல்லாமல் திரவ/நீர்ம வடிவிலுள்ள எதன் பயனையும் பற்றியது. எனவே, நீர்மம் அல்லது பாய்பொருள் என்ற குறிப்பில் உள்ளனவே சரியானவை. இவற்றில் சுருக்கமான நீர்மயியல் – Hydraulics இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. | Hydraulics |
(தொடரும்)
No comments:
Post a Comment