(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  962 – 975 இன் தொடர்ச்சி)
976. நிலஅமைவு வளைசலியல் Landscape – நிலத்தோற்றம், நிலைபரப்பு, இயற்கை நிலத்தோற்றம், அகண்மை, அகன்மை, அகலவாக்கு, இயற்கை நிலக்காட்சி, இயற்கைக்காட்சி, நில அமைவு, நிலப்படம், நிலவடிவம், கிராமம், இயற்கை நிலத்தோற்றம், கிடைப்பரப்பு, அகலவாக்கு, அகண்மை, இயற்கை வனப்பு, நிலக்காட்சி,  நிலத் தோற்றம், நிலவெளி எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. நில அமைவு என்பதையே நாம் பயன் படுத்தலாம். எனவே, நிலஅமைவு வளைசலியல் – Landscape ecology எனலாம்.Landscape ecology
977. நிலக்கரிப் பாறையியல்Coal petrology
978. நிலத்தடி நீரியல்Hydrology of ground water
979. நிலத்தடிப் புவியியல்Subsurface Geology
980. நிலநடுக்க வியல்Seismology
981. நிலப்படக் கலையியல்Cartology
982. நிலப்பரப்பு மொழியியல்Areal Linguistics
983. நில வானிலையியல்   Surface Meteorology
984. நிலா வடிவியல் Selenomorphology– என்றால் நிலா வடிவியல் என்றும் நிலவு நில அமைப்பியல் என்றும் குறிப்பிடுகின்றனர். இரண்டும் சரிதான். எனினும் சுருக்கமான நிலா வடிவியல் – Selenomorphology இங்கே குறிக்கப் பெற்றுள்ளது.  உண்மையில் நிலா அல்லது நிலவு என்பது வான்மதியின் ஒளியைத்தான் குறிக்கின்றது. வழக்கத்தில் அவ்வொளி தரும் திங்களையும் நிலா என்கின்றோம்.Selenomorphology
985. நிலாத் திணையியல்Lunar topology
986. நிலாவியல்Selenology
987. நிலைத்த நுட்பியல்Sustainable technology
988. நிலை மின்னியல்Electrostatics
989. நிறவியல்Chromatics
990. நிறவியங்கியல்Chromodynamics
991. நிறுத்தற்குறி யியல்Stigmeology
992. நீத்தாரியல்Martyrology
993. நீராடல் இயல்  balaneîon என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் குளித்தல்.Balneology  
994. நீராவியியல் atmo- என்பது பழங்கிரேக்கத்தில் நீராவியைக் குறிக்கும்.Atmology

(தொடரும்

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000