(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  948 – 961 இன் தொடர்ச்சி)
962. நாள நோயியல் angeîon பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் குருதி நாளம்.Angiopathology
963. நாளவியல் angeîon பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் குருதி நாளம்.Angiology 
964. நிகழ்வுச் சங்கிலி வயண இயல்Event Chain Methodology
965. நிகழ்வுத் தாக்கவியல்Hedonology
966. நிண நீரியல்Lymphology
967. நிதி நுட்பியல் Engineering என்றால் பொதுவாகப் பொறியியல் என்று தான் பொருள். Engineer என்றால் பொறியாளர் என்பது தவிர வகுத்தமை, கட்டமை, செயலாற்று, கடமையாற்று, திட்டமியற்று முதலிய பல பொருள்களும் உள்ளன. இந்த இடத்தில் நிதி சார் வகுத்தமைத்தலைக் குறிப்பிடும் நுட்ப இயல் சார்ந்தது எனப் பொருளாகும். எனவே, நிதி நுட்பியல் எனப்படுகிறது.Financial Engineering
968. நிதிப் பொருளியல்Financial Economics
969. நியூட்டனிய விசையியல்Newtonian mechanics
970. நொதுமி ஒளியியல்Neutron optics
971. நிரப்பியல்Complementology
972. நிகழி மொழியியல் Programming Linguistics செய்நிரலாக்க மொழியியல், நிரலாக்க மொழியியல் எனக் கூறப்படுகின்றது. ஐந்தாவது இணையத்தமிழ் மாநாட்டில் அளித்த கட்டுரையில் Programming நிகழி எனக் குறிப்பிட்டிருந்தேன். அதற்கிணங்க, நிகழி மொழியியல் – Programming Linguistics எனலாம்.Programming Linguistics
973. நிலநீர்வாழி யியல்Amphibiology
974. மேற்பரப்புப் புவியியல் நில மேற்பரப்பு புவியியல், நில மேற்பரப்புப் புவியியல், மேற்பரப்புப்படிவு – நிலத்தியல், நில மேற்பரப்புச் சூழியல்  எனப்படுகிறது. முதற்சொல் ஒற்றுப்பிழையுடன் உள்ளது. இறுதித் சொல் புவியியல் என்பது சூழியல் எனத் தவறாகக் கருதி ஆக்கப்பட்டுள்ளது. எனவே, சுருக்கமாக மேற்பரப்புப் புவியியல் – Surficial Geology எனலாம்.Surficial Geology
975. நிலஅதிர்வியல் Engysseosmology– நிலஅதிர்ச்சி பதிவியல் / நிலஅதிர்வியல்,  பதிவுசார் நிலநடுக்கவியல், நிலவியல் எனக் குறிப்பிடுகின்றனர். Seosmo என்றால் நில அதிர்ச்சி சார்ந்த, நில அதிர்ச்சியிலாய எனப் பொருள்கள். நில நடுக்கம் என்பது இயற்கையான பேரிடர். அதைப் பதிவது அதன் தன்மை, விளைவு முதலியவற்றை அறிய உதவும் அறிவியல் முறை. பதிவுசார்ந்து நில நடுக்கம் ஏற்படுவதில்லை. எனவே, பதிவுசார் நிலநடுக்க வியல் என்பது பொருத்தமாக இல்லை. நிலவியல் என்றால் நிலவு இயல் எனத் தவறானபுரிதலுக்கு வழி வகுக்கும். எனவே, அதுவும் ஏற்றதல்ல. நிலம் + இயல்  என்னும் பொழுது அத்துச் சாரியை பெற்று நிலத்துஇயல் > நிலத்தியல் என வரும். எனினும் நில அதிர்வை ஆராயும் பொழுதே அதைப் பதிவது குறித்த  ஆராய்ச்சியும் இடம் பெற்று விடுவதால் சுருக்கமாக, நில அதிர்வியல் – Engysseosmology எனலாம்.Engysseosmology                                                                             

(தொடரும்

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000