Wednesday, August 13, 2025

வெருளி நோய்கள் 256 – 260 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 251 – 255 தொடர்ச்சி)

256. ஆண் வெருளி-Androphobia/Arrhenphobia/Hominophobia

ஆண்களைக் கண்டால் ஏற்படும் அச்சம் ஆண் வெருளி.

ஆண்களைக் கண்டு அஞ்சுவது குறித்துக் கூறுவதால் இது பெண்களுக்கு வரும் எனப் புரிந்து கொள்ளலாம். ஆடவர் தங்களை அடக்கி ஒடுக்குவார்கள், துன்பம் இழைப்பார்கள், தவறாக  நடந்து கொள்வார்கள், தவறான முறையில் பழகி அவப்பெயர் ஏற்படுத்துவார்கள் என்று பல வகைகளில் ஆண்கள் மீது வரும் பேரச்சம். இத்தகையோர் ஆண்கள் மீதுள்ள அச்சத்தால் பொது வண்டிகளில் ஏறாமல் பெண்கள் வண்டிகளில் மட்டும் ஏறுவார்கள், ஆண் வெருளியால் பணிக்குச் செல்ல அஞ்சுவோரும் உள்ளனர். ஆண்கள் மிகுதியாகப் பணியாற்றும் இடங்களில் வேலை பார்க்க விரும்ப மாட்டார்கள்.

ஆண் வெருளி உள்ளவர்களுக்குத் திருமண வெருளியும் வர வாய்ப்புண்டு.

arrhen என்றால் கிரேக்க மொழியில் ஆண் எனப் பொருள்.

Andro என்றால் பழம்கிரேக்கத்தில் ஆண் எனப் பொருள். Androphobia/Arrhenphobia என்பது ஆண் வெருளி.

Homino என்பது தற்பாலினரைக் குறித்தாலும் ஆடவருக்கு ஏற்படும் ஆடவர் விருப்பு வெறுப்பைக் குறிக்கிறது. தற்பாலின வெருளி என்று சொன்னால் பெண்களுக்குப் பெண்கள் மீது ஏற்படும் ஈர்ப்பினால் ஏற்படும் அச்சத்தையும் குறிக்கும். எனவே Hominophobia என்றாலும் ஆண் வெருளிதான்.

00

257. ஆண்டேட்டு வெருளி –  Nijoongphobia

ஆண்டு ஏடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆண்டேட்டு வெருளி

பஞ்சாஞ்கம் எனப்படும் ஐந்தியம் குறித்த அளவுகடந்த பேரச்சத்தையும் இது குறிக்கிறது.

00

258. ஆதன் இசை வெருளி – Animophobia

உயிர்நல / ஆதன் இசை (soul music) குறித்த வரம்பற்ற பேரச்சம் உயிர்நல ஆதன் இசை வெருளி.

00

259. ஆதன் வெருளி – Animaphobia

ஆதன் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆதன் வெருளி.

ஆத்மா என்றும் ஆன்மா என்றும் சொல்லப்படுவதன் பழந்தமிழ்ச்சொல் ஆதன். அகம்,மனம் என்ற இரண்டுச் சொற்களின் கூட்டாக … ‘உள்மனசு’ என்ற பொருள்பட அமைக்கப்பட்டதே ‘அகத்துமன்’ ஆகும். அகத்துமன் – என்ற தமிழ்சொல்லே திரிந்து “ஆத்மா” ஆனது. என்றும் சொலலப்படுகிறது. எனினும் ஆதன் கற்பனையே என்பது பலர் கருத்து. உயிர்த்தத்துவம்தான் ஆதன் அல்லது ஆத்மா எனக் கருதி உயிரிழந்தபின் ஆதன் இயங்குவதாக எண்ணி அஞ்சுவோர் உள்ளனர்.

00

260. ஆந்தை வெருளி – Noctuaphobia / Strigiformophobia

ஆந்தை, கோட்டான், கூகை முதலியனமீதான அளவுகடந்த பேரச்சம் ஆந்தை வெருளி.

ஆந்தையின் அலறல் அச்சமூட்டுவதாக இருந்தாலும எப்போதும் அலறிக்கொண்டிருக்காது. முதலல் அச்சம் தருவது தோற்றமே. தோற்றத்தில் முதுன்மைப் பங்கு கண்களே. பொதுவாகவே, கண் வெருளி(Ommetaphobia/Ommatophobia), பறவை வெருளி(Ornithophobia) உடையவர்களுக்கு ஆந்தை வெருளியும் வருகின்றது.

strix என்றால் அலறும் ஆந்தை எனப் பொருள்.

00

Tuesday, August 12, 2025

வெருளி நோய்கள் 251 – 255 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 246 – 250 தொடர்ச்சி)

251. ஆட்ட ஊர்தி வெருளி – Gelandelimophobia

விளையாட்டுப்பயன்பாட்டு ஊர்தி(SUV) மீதான அளவுகடந்த பேரச்சம் ஆட்ட ஊர்தி வெருளி.

விளையாட்டுப் பயன்பாட்டு ஊர்தி என்பதை வி.ப.ஊ. எனச் சுருக்கமாகக் கூறலாம். [Sport utility vehicle (SUV)]

00

252. ஆட்ட வெருளி –  Ludophobia / Athlemaphobia/ Athlematophobia

ஆட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆட்டவெருளி

விளையாடும் பொழுது ஏற்படும் சிக்கல்கள் தோல்வி மீதான பயம் போன்றவற்றால் விளையாட்டு வெருளிக்கு – ஆட்டவெருளிக்கு ஆளாகின்றனர். தோல்வியுறும் பொழுது மனம் தளர்தல், ஆட்டத்தில் தவறு செய்துவிட்டால் படபடப்பிற்கு ஆளாதல் போன்றவற்றால் இவ்வெருளி வளர்கிறது. சிறு பருவத்தில் ஏற்படும் இத்தகைய போக்கு வளர்ந்து முற்றுவதும் உண்டு.

பொதுவாக விளையாட்டு வெருளி எலலா விளையாட்டுகள் மீதும் வரலாம். குறிப்பிட்ட விளையாட்டுக்ள மீது மட்டும் வெருளி ஏற்படலாம். ஆட்டம்(game), விளையாட்டு(sport) இரண்டும் வெவ்வேறு எனத் தனித்தனியாகக் குறிப்பிடுகின்றனர். எனினும், விளையாட்டு வெருளி(Athlemaphobia/ Athlematophobia)ஐ இதனுடன் இணைத்துள்ளேன்.

ludus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஆட்டம் /விளையாட்டு.

áthlēma என்னும் கிரேக்கச் சொல்லிற்கு விளையாட்டு என்று பொருள்.

00

253. ஆண வெருளி – Ketsapphobia

ஆணம்(ketchup)குறித்த அளவுகடந்த பேரச்சம் ஆணவெருளி.

00

254. ஆணியல் பெண் வெருளி – Androgynophobia, Agorocoritsophobia

ஆணியல் பெண்(tomboy) மீதான அளவுகடந்த பேரச்சம் ஆணியல் பெண் வெருளி.

tomboy என்பது 16 ஆம் நூற்றாண்டு நடுவில் முரட்டுத்தனமும் மூர்க்கததனமும் கொண்ட சிறுவனைக் குறித்தது. 1590இல் காட்டுத்தனமாகத் துள்ளியாடும் சிறுவனைப்போல் செயல்படும் சிறுமியைக்(boyish girl) குறித்தது.

ஆணாகக் கருதிக்கொள்ளும் பெண்களைப் பெண்களாகக் கருதி ஆண்கள் பழகும் பொழுது சிக்கல் வருகிறது. இதனால் பேரச்சமும் வருகிறது.

00

255. ஆணுறுப்பு வெருளி – Phallophobia / Ithyphallophobia / Medorthophobia

ஆண் உறுப்பைப் பார்த்தால் அல்லது ஆண் உறுப்பு குறித்து எண்ணினால் விறைப்புத் தன்மை குறித்துக் கவலைப்படுவதால் ஏற்படக்கூடிய அச்சமே ஆணுறுப்பு வெருளி.

விரிந்த பொருளில் சொல்வதானால் ஆண்மை மீதான பேரச்சமே இது. விறைப்பு வெருளி என்பதும் ஆணுறுப்பு சார்ந்ததே என்பதால் அதனையும் இதனுடன் இணைத்துள்ளேன்.

தாழ்வு மனப்பான்மை, இயலாமை இருப்பதாக எண்ணி வருந்துதல், பாலுறவு வெறுப்பு போன்றவற்றாலும் ஆணுறுப்பு வெருளி வரலாம்.

phallo என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் ஆண் குறி.

Ithy என்னும் பழம்கிரேக்கச் சொல்லிற்கு நேரான என்று பொருள்.

00

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன், 

வெருளி அறிவியல் தொகுதி 1/5

Monday, August 11, 2025

வெருளி நோய்கள் 246 – 250 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 241 – 245 தொடர்ச்சி)

246. ஆசிரியர் வெருளி – Lusuophobia

தன் ஆசிரியர் குறித்த அளவு கடந்த பேரச்சம் ஆசிரியர் வெருளி.

சிலருக்கு வகுப்பிற்கு வரும் ஆசிரியர் அனைவர் மீதும் பேரச்சம் இருக்கும். சிலருக்கு வகுப்பாசிரியர், ஆங்கில ஆசிரியர், கணக்கு ஆசிரியர், தமிழாசிரியர், அறிவியல் ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர் என்பனபோன்று குறிப்பிட்ட ஓர் ஆசிரியர் அல்லது சில ஆசிரியர் மீது மட்டும் வெறுப்பும் பேரச்சமும் வரும். தன்னை இதற்கு முன்னர் தன்னையோ பிறரையோ கண்டிததிருந்தால் தண்டித்திருந்தால் அச்சம் வளர்ந்து அளவு கடந்த பேரச்சமாக மாறுகிறது. இதன் விளைவாகப் பள்ளிக்கூட வெருளியும் உருவாகிறது.  ஆசிரியர்கள் மாணாக்கர்களிடையே நம்பிக்கைய ஏற்படுத்திக் கனிவுடன் நடந்து கொண்டாலே இவ்வெருளி மறையும். ஆனால், இக்காலத்தில் மாணாக்கர்களைக்கண்டுதான் ஆசிரியர்கள் பெரிதும் அஞ்சும் சூழல் உள்ளது.

00

.247. ஆடி உரு வெருளி – Spectrophobia / Catoptrophobia

கண்ணாடியில் பார்க்கும் பொழுது தன் உருவம் பேயுருவாகத் தோற்றமளிப்பதாகத் தேவையற்றுப் பேரச்சம் கொள்வது ஆடி உரு வெருளி.

உருவம் பார்க்கும் ஆடியாகிய கண்ணாடியைக் கண்டு ஏற்படும் அளவு கடந்த  அச்சம் இது.

ஆடி வெருளி என்பது கண்ணாடியில் தன் உருவத்தை மட்டும் பார்ப்பது. ஆனால் பேய்க்கதைகள், நாடகங்கள், திரைப்படங்களில் கண்ணாடியில் பார்க்கும் பொழுது பேய் உருவமாகத் தெரிவதாக அஞ்சத்தகு காட்சிகளைப் பார்த்து அஞ்சிக் கண்ணாடியில் பேயுரு தெரிவதாக அஞ்சுவது ஆடி உரு வெருளி.

ஊன வெருளி / உருத்திரிபு வெருளி(Dysmorphophobia) உள்ளவர்களில் பெரும்பான்மையர் தங்கள் உருவத்தைக் கண்ணாடியில் பார்க்க விரும்புவதில்லை.

spectrum / specio என்னும் இலத்தீன் சொற்களுக்குத் தோற்றம் / உருவம் என்பன பொருள்கள்.

catoptro என்னும் சொல் கண்ணாடி என்னும் பொருள் உள்ள kátoptron என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது. மூக்குக் கண்ணாடி எனப் பெறும் பார்வைக் கண்ணாடியிலிருந்து வேறுபடுத்தவே ஆடி உருவம் என இங்குக் குறிக்கப் பெறுகிறது.

00

248. ஆடி வெருளி-Eisoptrophobia

கண்ணாடியைப் பார்த்தால் அல்லது கண்ணாடியில் காணும் தன் உருவத்தைப் பார்த்தால் ஒருவருக்கு ஏற்படும் தேவையற்ற அச்சம்  ஆடி வெருளி.

தொடக்கத்தில் கண்ணாடி போல் எதிரொளிக்கும் நீர்நிலைகளில் தன் உருவத்தைப் பார்த்து ஏற்படும் அச்சமே  ஆடி வெருளியாக அல்லது ஆடிப்பார்வை வெருளியாக அல்லது ஆடிப் பிம்பம் வெருளியாக உருவானது.

பொன்னின் ஆடியிற் பொருந்துபு நிற்போர்

(மணிமேகலை 19.91) எனச் சாத்தனார் பொன் வளையத்தினுள் பதிக்கப்பட்ட கண்ணாடியில் தம் உருவம் காண்பதைக் குறிப்பிடுகிறார். அப்பொழுதெல்லாம் ஆடி வெருளி இல்லை போலும்.

கண்ணாடி உடைந்தால் தீயூழ் நேரும் என்னும் மூடநம்பிக்கை உள்ளவர்கள், கண்ணாடி உடைந்துவிடும் என்ற அச்சத்தால்  அதைப் பயன்படுத்தாமல் கண்ணாடி வெருளிக்கு ஆளாவர்.

‘Eisoptro’ என்றால் கிரேக்க மொழியில் கண்ணாடி என்று பொருள். eis(உள்ளே), optikos(பார்வை) என்பதன் இணைப்பிலிருந்து இச்சொல் உருவானது.

ஆடி வெருளி(Eisoptrophobia)  என்பதைக் கரையான் வெருளியான ஐசோப்பிடிரோபோபியா(Isopterophobia) உடன் தொடர்பு படுத்திக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

00

249. ஆடை அடுக்கம் வெருளி – Kr♥kuphobia

ஆடை அடுக்கம்(clothing rack) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆடை அடுக்கம் வெருளி

இத்தகையோர் ஆடை அடுக்கத்தில் ஆடைகள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்படவில்லை என்பதுபோன்ற கவலையும் பேரச்சமும் கொள்கின்றனர்.

00

250. ஆடை வெருளி – Vestiphobia / Foremaphobia

ஆடை குறித்த அளவுகடந்த பேரச்சம் ஆடை வெருளி.

குழந்தைப்பருவத்தில் உடை உடுத்துவது குறித்த எரிச்சல் விருப்பமின்மை முதலியன வளர்ந்து இத்தகைய பேரச்சத்தை உருவாக்குவதும் உண்டு.

படைத்துறை முதலான சீருடைத் துறைகளில் பணியாற்றுவோருக்கு ஆடை வெருளி உள்ளது.

தாய் அல்லது தந்தைக்கு ஆடை வெருளி இருந்தால் பிள்ளைகளுக்கும் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர்.

புதுவகை ஆடைகளைக் கண்டு எரிச்சலுற்று ஆடை வெருளிக்கு ஆளாவோரும் உள்ளனர்.

vestis என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஆடை அல்லது மேலுடை என்பதாகும்.

Forema என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடை எனப் பொருள்.

00

Sunday, August 10, 2025

வெருளி நோய்கள் 241 – 245 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 236 – 240  தொடர்ச்சி)

241. அன்னையர் நாள் வெருளி-Natredemphobia

அன்னையர் நாள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அன்னையர் நாள் வெருளி.

தாய்மார்களைப் போற்றவும் சிறப்பிக்கவும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நாளில் அன்னையர் நாள் கொண்டாடப்படுகிறது.

00

242. ‘ஆ’ நிலை வெருளி – Beephobia (2)

தரநிலையில் ‘ஆ’ (B) பெறுவது குறித்த பேரச்சம் Beephobia

 காண்க: தேனீ வெருளி – Beephobia (1)

00

243. ஆகத்து வெருளி – Bayuephobia 

ஆகத்து (August) மாதம் குறித்த வரம்பில்லாப் பேரச்சம் ஆகத்து  வெருளி.

ba என்னும் சீனச் சொல்லிற்கு எட்டு எனப் பொருள். yue என்னும் சீனச்சொல்லிற்கு மாதம் எனப் பொருள். எனவே, qiyue எட்டாம் மாதமாகிய  ஆகத்து மாதத்தைக் குறிக்கிறது.

00

244. ஆங்கிலேய வெருளி-Anglophobia

ஆங்கிலேயர் தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் ஆங்கிலேய வெருளி.

இங்கிலாந்து, இங்கிலாந்து மக்கள், அவர்கள் மொழியான ஆங்கிலம் மீதான வெறுப்பு, அச்சம் ஆகியனவற்றை இது குறிப்பிடும். முதலில் அயர்லாந்து, வேல்சு, காட்லாந்து, பிரான்சு, சீனா, ஆத்திரேலியா,ஈரான் மக்களிடையே ஆங்கில வெருளி  ஏற்பட்டது.  பின்னர்ப் பிற நாட்டு மக்களிடமும் பரவியுள்ளது. 

Anglo  என்பது  இங்கிலீசு என்பதைக் குறிக்கும் இலத்தீன் முன் னொட்டு. இங்கிலாந்தைக் குறிக்கும் இலத்தீன் பெயரான ஆங்கிலியா என்பதிலிருந்து இது வந்தது. தமிழில் நாம் மூலச் சொல் அடிப்படையில் சரியாக ஆங்கிலம், ஆங்கில, ஆங்கிலேயர் என்று குறிக்கின்றோம்.

00

245. ஆசிய வெருளி – Asianophobia

ஆசியா(Asia) தொடர்பான அனைத்திலும் அல்லது சிலவற்றில் காரணமற்ற வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் கொள்வதே ஆசிய வெருளி.

செருமானியரை மட்டுமே உயர்த்திய அடால்ஃபு இட்லரால் (Adolf Hitler) ஏற்படடதே ஆசிய வெருளி என்பர்.

00

Saturday, August 9, 2025

வெருளி நோய்கள் 236 – 240 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 231 – 235 தொடர்ச்சி)

236. அற்புத எண் வெருளி  – Centummegaphobia

அற்புத எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் அற்புத எண் வெருளி.

அற்புதம் என்பது பத்து கோடி (10,00,00,000) ஐக் குறிக்கும். 

00

237. அனல் கக்கி வெருளி – H8pophobia 

அனல் கக்கி(flame throwers) குறித்த வரம்பற்ற பேரச்சம் அனல் கக்கி வெருளி.

பதுங்கு குழிகள், சுரங்கங்கள், ஆழமான அகழிகள், கோட்டைகள் ஆகியவற்றிற்கு எதிராக அனல் கக்கிகளைப் பயன்படுத்துகின்றனர். அந்த இடங்களில் இருப்பவர்கள் தீப்பிழம்புகளால் காயமடையலாம், உயிரிழக்கலாம், புகை உள்ளிழுக்கப்பட்டுக் கொல்லப்படலாம். இவற்றின் காரணமாக அனல்கக்கிகள் மீது பேரச்சம் வருகிறது. இக்காலப்போர் முறையில் இஃது ஏற்றதல்ல என 1978இல் அமெரிக்கப் படைத்துறையில்  அனல்கக்கிகள் பயன்பாடு நிறுத்தப்பட்டது. இருப்பினும் வேறு வகையில் இது போர்களில் பயன்படுத்தப்படுகிறது. சான்றாக 1987 இல இந்திய அமைதிக் காப்புப்படை(Indian Peace keeping force) இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது.

00

238. அனைத்து வெருளி – Panophobia/Pantophobia/ Panphobia/ Omniphobia

பார்க்கும் ஒவ்வொன்றைப்பற்றியும் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் அனைத்து வெருளி.

அனைத்து என்பது இத்தன்மையது என்னும் பொருளில்தான் சங்கப்பாடல்களில் வருகிறது.

எல்லாவற்றையும் குறிக்க அனைத்தும் என்றுதான் பயன்படுத்தி உள்ளனர்.

அனைத்தும்,

புணர்ந்து உடன் ஆடும் இசையே; அனைத்தும், (மதுரைக் காஞ்சி : 266)

கடிப்பகை அனைத்தும், கேள்வி போகா (மலைபடுகடாம் : 22)

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின், (பரிபாடல் : 3:68)

அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, (அகநானூறு : 378:16)

இனைத்து என்போரும் உளரே; அனைத்தும்       

அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி, (புறநானூறு : 30:7-8)

எனினும் தற்போது அனைத்து என்பதே அனைத்தும் என்னும் பொருள் மாற்றத்தைப் பெற்றுள்ளதால் அனைத்து என்பதையே இங்கே பயன்படுத்தலாம். அதற்கிணங்க அனைத்து வெருளி 

pan என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அனைத்து.

Omni என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எல்லாம்.

pant என்னும் கிரேக்கச் சொல்லிற்கு ஒவ்வொன்றும் என்று பொருள்..

ஒவ்வொரு பொருள்/தனித்தனிப் பொருள் தொடர்பான அளவுகடந்த பேரச்சமும் இவையே!

00

239. ‘அனைவரும் நட்சத்திர’ப் பாடல் வெருளி -Quisadmestatimvolvuntmeaorbisterrarumsitametnonestinstrumentumutipsiacutissimisintugurioquæeratapudbrutaquaedamvultuseiusdigitoetpolliceetsimilitudosupercaputanimaliumphobia

அனைவரும் நட்சத்திரம்(All stars) பாடல் மீதான அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் அனைவரும் நட்சத்திரப் பாடல் வெருளி

00

240. அன்ன(ம்) வெருளி – Kyknophobia / Cygnophobia

அன்னம் மீதான அளவுகடந்த பேரச்சம் அன்ன(ம்) வெருளி.

Kykno என்னும் கிரேக்கச் இலத்தீன் சொல்லின் பொருள் அன்னம்.

00

Friday, August 8, 2025

வெருளி நோய்கள் 231 – 235 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 226 -230 தொடர்ச்சி)

231. அறிவுவெருளி-Epistemophobia/Gnosiophobia

அறிவு தொடர்பில் எழும் தேவையற்ற மிகையான பேரச்சமே அறிவுவெருளி. 

சிலருக்குப் புதியதாக எதைக் கற்க / அறிய வேண்டுமென்றாலும் பேரச்சம் வரும். சிலருக்குக் குறிப்பிட்ட ஒன்றைக் கற்க அல்லது அறிய மட்டும் பேரச்சம் வரும்.

பள்ளிக்கூடம் செல்ல, பிள்ளைகள் அடம்பிடித்து மறுப்பதும் அறிவு வெருளிதான். பலர் படிப்படியாக இதிலிருந்து விடுபட்டு விடுகின்றனர். சிலர் இதிலிருந்து விடுபடாமல் முழுமையான அறிவு வெருளிக்கு ஆட்பட்டுவிடுகின்றனர்.

gnos  / epistemo ஆகிய கிரேக்கச்சொற்களின் பொருள் அறிவு. 

00

232. அறுவை மருத்துவ வெருளி – Tomophobia 

அறுவை மருத்துவம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அறுவை மருத்துவ வெருளி.

அறுவை மருத்துவம் பல முன்னேற்றங்களையும் எளிய முறைகைளயும் கண்டு வருகிறது. எனினும் அறுவை என்றாலேயே உயிருக்கு முடிவு கட்டுமோ, பக்க விளைவுகள் வருமோ, முழு நலன் கிட்டுமோ, என்றெல்லாம் பல வகை அச்சங்களுக்கு ஆளாகின்றனர். நோயர்களுக்கு மட்டுமல்ல நோயரின் குடும்பத்தினருக்கும் இத்தகைய அச்சங்கள் வருவது இயற்கையே. அறுவை மருத்துவம் தோல்வியுற்று இறந்தவர்கள்பற்றிய செய்திகளை அறிந்ததாலும் எல்லாமே அப்படித்தான் ஆகுமோ என்ற அச்சத்திற்கு ஆளாவோர் உள்ளனர். அறுவை மருத்துவம் என்னும் பொழுது கண் புரை அறுவை முதலான உடல் உறுப்புகள் அறுவை, உடல்உறுப்பு மாற்று அறுவை, எனப் பலவகை உள்ளன. அறுவை மருத்துவத்தில் சிக்கல் கூடக்கூட அதன் மீதான பேரச்சம் வளர்வதாக உள்ளது.

Ergasiophobia/ Ergophobia என்பனவற்றையும் அறுவை வெருளி என்கின்றனர். அவற்றைப் பணி வெருளி என்று சொன்னால் போதும்.

00

233. அறை வெருளி-Koinoniphobia

அறைகளைப்பற்றியும் அறைகளில் நிறைந்துள்ள கூட்டம் குறித்தும் அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் கொள்வது அறை வெருளி.

அறை நிறைந்த மக்களைப் பார்க்கும் பொழுது ஏற்படும் பேரச்சம் என்பதால் அறை நிறைவு வெருளி/நிறைஅறை வெருளி எனலாம். சுருக்கமாக அறை வெருளி என்கிறோம்.

தனித்தனியாக அல்லது குழுக்களாக ஒரே அறையில் இருக்கும் பொழுது அல்லது அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பொழுது வசதிக்குறைபாடு, பாதுகாப்பின்மை போன்ற எண்ணங்களால் பேரச்சத்திற்கு உள்ளாகின்றனர்.

அடைப்பிட வெருளி(Claustrophobia) யுடன் ஒப்புமை உடையது.

koini என்னும் கிரேக்கச் சொல், பொது அல்லது பகிர்வு என்பனற்றைக் குறிக்கும்.

00

234. அறைகலன் வெருளி – Epiplaphobia 

அறைகலன் வெருளி குறித்த வரம்பற்ற பேரச்சம் அறைகலன் வெருளி.

அறைக்கு அணி செய்வதால் நாற்காலி முதலிய அறைகலன்கள் அறையணி என்றும் அழைக்கப்பெறுகின்றன.

எல்லா அறைகலன் மீதும் சிலருக்குப் பேரச்சம் இருக்கலாம். சிலருக்கு ஒன்று அல்லது சில, அல்லது பல அறைகலன்கள்மீது பேரச்சம் வரலாம். சிலருக்குத் பழமையான அறைகலன்கள் மிது பெரு வெறுப்பு வரலாம். 

00

235. அற்பி  வெருளி – Dodophobia 

அற்பி (Dodo) என்னும் பறவை மீதான அளவுகடந்த பேரச்சம் அற்பி  வெருளி.

அற்பி (தோடோ)   என்பது மரபழிந்துபோன மோரிசு தீவுகளுக்குரிய பெரிய பறவை.பறக்க இயலாத அருவருப்பான தோற்றமுடைய வான்கோழி அளவுள்ள பறவை.

அற்பி (தோடோ)   பறவைபோன்று அருவருப்பான தோற்றம் உள்ளதாகக் கருதப்படுபவர்கள் மீது வரும் காரணமற்ற பேரச்சத்தையும் அற்பி வெருளி என்கின்றனர்.

00