(வெருளி நோய்கள் 236 – 240  தொடர்ச்சி)

241. அன்னையர் நாள் வெருளி-Natredemphobia

அன்னையர் நாள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அன்னையர் நாள் வெருளி.

தாய்மார்களைப் போற்றவும் சிறப்பிக்கவும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நாளில் அன்னையர் நாள் கொண்டாடப்படுகிறது.

00

242. ‘ஆ’ நிலை வெருளி – Beephobia (2)

தரநிலையில் ‘ஆ’ (B) பெறுவது குறித்த பேரச்சம் Beephobia

 காண்க: தேனீ வெருளி – Beephobia (1)

00

243. ஆகத்து வெருளி – Bayuephobia 

ஆகத்து (August) மாதம் குறித்த வரம்பில்லாப் பேரச்சம் ஆகத்து  வெருளி.

ba என்னும் சீனச் சொல்லிற்கு எட்டு எனப் பொருள். yue என்னும் சீனச்சொல்லிற்கு மாதம் எனப் பொருள். எனவே, qiyue எட்டாம் மாதமாகிய  ஆகத்து மாதத்தைக் குறிக்கிறது.

00

244. ஆங்கிலேய வெருளி-Anglophobia

ஆங்கிலேயர் தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் ஆங்கிலேய வெருளி.

இங்கிலாந்து, இங்கிலாந்து மக்கள், அவர்கள் மொழியான ஆங்கிலம் மீதான வெறுப்பு, அச்சம் ஆகியனவற்றை இது குறிப்பிடும். முதலில் அயர்லாந்து, வேல்சு, காட்லாந்து, பிரான்சு, சீனா, ஆத்திரேலியா,ஈரான் மக்களிடையே ஆங்கில வெருளி  ஏற்பட்டது.  பின்னர்ப் பிற நாட்டு மக்களிடமும் பரவியுள்ளது. 

Anglo  என்பது  இங்கிலீசு என்பதைக் குறிக்கும் இலத்தீன் முன் னொட்டு. இங்கிலாந்தைக் குறிக்கும் இலத்தீன் பெயரான ஆங்கிலியா என்பதிலிருந்து இது வந்தது. தமிழில் நாம் மூலச் சொல் அடிப்படையில் சரியாக ஆங்கிலம், ஆங்கில, ஆங்கிலேயர் என்று குறிக்கின்றோம்.

00

245. ஆசிய வெருளி – Asianophobia

ஆசியா(Asia) தொடர்பான அனைத்திலும் அல்லது சிலவற்றில் காரணமற்ற வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் கொள்வதே ஆசிய வெருளி.

செருமானியரை மட்டுமே உயர்த்திய அடால்ஃபு இட்லரால் (Adolf Hitler) ஏற்படடதே ஆசிய வெருளி என்பர்.

00