(வெருளி நோய்கள் 231 – 235 தொடர்ச்சி)

236. அற்புத எண் வெருளி  – Centummegaphobia

அற்புத எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் அற்புத எண் வெருளி.

அற்புதம் என்பது பத்து கோடி (10,00,00,000) ஐக் குறிக்கும். 

00

237. அனல் கக்கி வெருளி – H8pophobia 

அனல் கக்கி(flame throwers) குறித்த வரம்பற்ற பேரச்சம் அனல் கக்கி வெருளி.

பதுங்கு குழிகள், சுரங்கங்கள், ஆழமான அகழிகள், கோட்டைகள் ஆகியவற்றிற்கு எதிராக அனல் கக்கிகளைப் பயன்படுத்துகின்றனர். அந்த இடங்களில் இருப்பவர்கள் தீப்பிழம்புகளால் காயமடையலாம், உயிரிழக்கலாம், புகை உள்ளிழுக்கப்பட்டுக் கொல்லப்படலாம். இவற்றின் காரணமாக அனல்கக்கிகள் மீது பேரச்சம் வருகிறது. இக்காலப்போர் முறையில் இஃது ஏற்றதல்ல என 1978இல் அமெரிக்கப் படைத்துறையில்  அனல்கக்கிகள் பயன்பாடு நிறுத்தப்பட்டது. இருப்பினும் வேறு வகையில் இது போர்களில் பயன்படுத்தப்படுகிறது. சான்றாக 1987 இல இந்திய அமைதிக் காப்புப்படை(Indian Peace keeping force) இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது.

00

238. அனைத்து வெருளி – Panophobia/Pantophobia/ Panphobia/ Omniphobia

பார்க்கும் ஒவ்வொன்றைப்பற்றியும் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் அனைத்து வெருளி.

அனைத்து என்பது இத்தன்மையது என்னும் பொருளில்தான் சங்கப்பாடல்களில் வருகிறது.

எல்லாவற்றையும் குறிக்க அனைத்தும் என்றுதான் பயன்படுத்தி உள்ளனர்.

அனைத்தும்,

புணர்ந்து உடன் ஆடும் இசையே; அனைத்தும், (மதுரைக் காஞ்சி : 266)

கடிப்பகை அனைத்தும், கேள்வி போகா (மலைபடுகடாம் : 22)

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின், (பரிபாடல் : 3:68)

அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, (அகநானூறு : 378:16)

இனைத்து என்போரும் உளரே; அனைத்தும்       

அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி, (புறநானூறு : 30:7-8)

எனினும் தற்போது அனைத்து என்பதே அனைத்தும் என்னும் பொருள் மாற்றத்தைப் பெற்றுள்ளதால் அனைத்து என்பதையே இங்கே பயன்படுத்தலாம். அதற்கிணங்க அனைத்து வெருளி 

pan என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அனைத்து.

Omni என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எல்லாம்.

pant என்னும் கிரேக்கச் சொல்லிற்கு ஒவ்வொன்றும் என்று பொருள்..

ஒவ்வொரு பொருள்/தனித்தனிப் பொருள் தொடர்பான அளவுகடந்த பேரச்சமும் இவையே!

00

239. ‘அனைவரும் நட்சத்திர’ப் பாடல் வெருளி -Quisadmestatimvolvuntmeaorbisterrarumsitametnonestinstrumentumutipsiacutissimisintugurioquæeratapudbrutaquaedamvultuseiusdigitoetpolliceetsimilitudosupercaputanimaliumphobia

அனைவரும் நட்சத்திரம்(All stars) பாடல் மீதான அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் அனைவரும் நட்சத்திரப் பாடல் வெருளி

00

240. அன்ன(ம்) வெருளி – Kyknophobia / Cygnophobia

அன்னம் மீதான அளவுகடந்த பேரச்சம் அன்ன(ம்) வெருளி.

Kykno என்னும் கிரேக்கச் இலத்தீன் சொல்லின் பொருள் அன்னம்.

00