(வெருளி நோய்கள் 251 – 255 தொடர்ச்சி)

256. ஆண் வெருளி-Androphobia/Arrhenphobia/Hominophobia

ஆண்களைக் கண்டால் ஏற்படும் அச்சம் ஆண் வெருளி.

ஆண்களைக் கண்டு அஞ்சுவது குறித்துக் கூறுவதால் இது பெண்களுக்கு வரும் எனப் புரிந்து கொள்ளலாம். ஆடவர் தங்களை அடக்கி ஒடுக்குவார்கள், துன்பம் இழைப்பார்கள், தவறாக  நடந்து கொள்வார்கள், தவறான முறையில் பழகி அவப்பெயர் ஏற்படுத்துவார்கள் என்று பல வகைகளில் ஆண்கள் மீது வரும் பேரச்சம். இத்தகையோர் ஆண்கள் மீதுள்ள அச்சத்தால் பொது வண்டிகளில் ஏறாமல் பெண்கள் வண்டிகளில் மட்டும் ஏறுவார்கள், ஆண் வெருளியால் பணிக்குச் செல்ல அஞ்சுவோரும் உள்ளனர். ஆண்கள் மிகுதியாகப் பணியாற்றும் இடங்களில் வேலை பார்க்க விரும்ப மாட்டார்கள்.

ஆண் வெருளி உள்ளவர்களுக்குத் திருமண வெருளியும் வர வாய்ப்புண்டு.

arrhen என்றால் கிரேக்க மொழியில் ஆண் எனப் பொருள்.

Andro என்றால் பழம்கிரேக்கத்தில் ஆண் எனப் பொருள். Androphobia/Arrhenphobia என்பது ஆண் வெருளி.

Homino என்பது தற்பாலினரைக் குறித்தாலும் ஆடவருக்கு ஏற்படும் ஆடவர் விருப்பு வெறுப்பைக் குறிக்கிறது. தற்பாலின வெருளி என்று சொன்னால் பெண்களுக்குப் பெண்கள் மீது ஏற்படும் ஈர்ப்பினால் ஏற்படும் அச்சத்தையும் குறிக்கும். எனவே Hominophobia என்றாலும் ஆண் வெருளிதான்.

00

257. ஆண்டேட்டு வெருளி –  Nijoongphobia

ஆண்டு ஏடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆண்டேட்டு வெருளி

பஞ்சாஞ்கம் எனப்படும் ஐந்தியம் குறித்த அளவுகடந்த பேரச்சத்தையும் இது குறிக்கிறது.

00

258. ஆதன் இசை வெருளி – Animophobia

உயிர்நல / ஆதன் இசை (soul music) குறித்த வரம்பற்ற பேரச்சம் உயிர்நல ஆதன் இசை வெருளி.

00

259. ஆதன் வெருளி – Animaphobia

ஆதன் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆதன் வெருளி.

ஆத்மா என்றும் ஆன்மா என்றும் சொல்லப்படுவதன் பழந்தமிழ்ச்சொல் ஆதன். அகம்,மனம் என்ற இரண்டுச் சொற்களின் கூட்டாக … ‘உள்மனசு’ என்ற பொருள்பட அமைக்கப்பட்டதே ‘அகத்துமன்’ ஆகும். அகத்துமன் – என்ற தமிழ்சொல்லே திரிந்து “ஆத்மா” ஆனது. என்றும் சொலலப்படுகிறது. எனினும் ஆதன் கற்பனையே என்பது பலர் கருத்து. உயிர்த்தத்துவம்தான் ஆதன் அல்லது ஆத்மா எனக் கருதி உயிரிழந்தபின் ஆதன் இயங்குவதாக எண்ணி அஞ்சுவோர் உள்ளனர்.

00

260. ஆந்தை வெருளி – Noctuaphobia / Strigiformophobia

ஆந்தை, கோட்டான், கூகை முதலியனமீதான அளவுகடந்த பேரச்சம் ஆந்தை வெருளி.

ஆந்தையின் அலறல் அச்சமூட்டுவதாக இருந்தாலும எப்போதும் அலறிக்கொண்டிருக்காது. முதலல் அச்சம் தருவது தோற்றமே. தோற்றத்தில் முதுன்மைப் பங்கு கண்களே. பொதுவாகவே, கண் வெருளி(Ommetaphobia/Ommatophobia), பறவை வெருளி(Ornithophobia) உடையவர்களுக்கு ஆந்தை வெருளியும் வருகின்றது.

strix என்றால் அலறும் ஆந்தை எனப் பொருள்.

00