Saturday, February 19, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 803 – 819 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல







(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  780 – 802 இன் தொடர்ச்சி)

803. தாங்குட்டியல்                                                                       

தாங்குட்டு(Tangut) மக்களின் மொழி, கலை,

பண்பாடு, வரலாறு முதலியன குறித்து

 ஆராயும் துறை தாங்குட்டியல் எனப்படுகிறது.


804. தாசியா இயல்        

தாசியா இயல்(Dacology) என்பது திரேசியலின்(Thracology ) ஒரு பிரிவாகும். பழைய உரோமானியப் பேரரசின் தாசியா நாட்டு மக்களின்  மொழி, இலக்கியம், வரலாறு, சமயம், கலை, பண்பாடு, பொருளியல், நெறிமுறைகள் குறித்து ஆராயும் துறையே தாசியா இயல்.

Tangutology


Dacology

805. தாடைஎலும்பியல்

தாடை எலும்பு என்னும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லின் அடிப்படையில்  Siagonology சொல் உருவானது.

Siagonology

806. தாதுசார் நோயியல்

Humoral Pathology

807. தாந்தே இயல்

Dantology

808. தாமிரக் குளவியியல்

Chalcidology – தாமிரநிறக் குளவியியல் > தாமிரக் குளவி யியல்

 khalkos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தாமிரம் / செம்பு. இதன் நிறம் உடைய குளவி இதே பொருளில் Chalcid என அழைக்கப்பெறுகிறது.

தாமிரக் குளவி யியல் – Chalcidology எனலாம்.

Chalcidology

809. தாவர உயிர்மி யியல்

Plant Cytology

810. தாவர உள்ளியல்

Phytotomy

811. தாவர நுண்ணுயிரி வகை

Spirogyra

812. தாவர நோயியல்

Phytopathology

813. தாவர வடிவியல்

Plant morphology

814. தாவர வரைவியல்

Phytography

815. தாவரக் குமுகவியல்

Phytosociology

816. தாவர வளைசலியல்

Plant Ecology

817. தாவரத் தொல்லியல்

Palynology (2)

818.தாவர நோய்ம யியல்

Phytobacteriology

819. தாவரப் புவி யியல்

Phyto என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் தாவரம்.

Geographia என்னும் இலத்தீன், பழங்கிரேக்கச் சொற்களின் பொருள் புவி.

எனவே, தாவரப் புவியியல். ஆனால், அச்சுப்பிழையாகக் கருதும் வகையில் ஓர் அகராதியில் உடற்பண்டுவ இயல் எனக் குறிக்கப்பெற்று மற்றொரு தொகுப்பு அகராதி யிலும் இடம் பெற்றுவிட்டது. முதலில் நான்  ஆராயாமல் இதைக் குறித்து விட்டேன். பின்னர்த் தவற்றினை உணர்ந்து திருத்தியுள்ளேன்.

சிலர் புவித்தாவர இயல் என்கின்றனர்.அதனினும் தாவரப்புவியியல் என்பதே ஏற்றது.

Phytogeography

 

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Friday, February 18, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 780 – 802 : இலக்குவனார் திருவள்ளுவன்

 

அகரமுதல





(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  759 –  779  இன் தொடர்ச்சி)
780. தண்டனை யியல்                        781. தண்டூர்திக் கணிப்பியல்Penology / Poenology 781. Sporalogy
782. தணிப்பக உளவியல் Clinical psychology
783. தமிழியல்Tamilology
784. தரப் பொறியியல்Quality Engineering
785. தர மும்மைQuality Trilogy
786. தரவரிசைப் புள்ளியியல்Rank order statistics
787. தரவு வனைம நுட்பியல்Data Processing Technology
788. தரவுக் கட்டமைப்பியல்Stringology
789. தரவுப் புள்ளியியல்Data Statistics
790. தருக்க உருவாக்கவியல்Mereology
791. தரைக்காட்டு வளைசலியல் அடுக்கம், அடுக்கல், அணி, ஆவலி, ஆவளி, இடைவெளி, இராசி, எல்லை, ஏற்ற இறக்க எல்லை, ஏற்ற-இறக்க நெடுக்கம், களம், காட்டு (மேய்ச்சல்) சரகம், காட்டுச் சரகம், சஞ்சரி, சரகம், சுற்றளவு, சுற்று, தரைக்காடு, தாரை , திரிதல், தொடர் எல்லை, தொடர், தொடர்ச்சி, நெடுக்கம், பத்ததி, பத்தி, பரப்பு எல்லை, பரப்பு, பவுஞ்சு , பெளஞ்சு , மட்டு, வரம்பளவு,  வரிசை, வீச்சு, வீச்செல்லை,  வேறுபாட் டெல்லை என range  என்பதற்குப் பொருள்கள் உள்ளன. மலைப்பகுதிக் காட்டினை மலைக்காடு என்றும் தரைப்பகுதிக் காட்டினைத் தரைக்காடு என்றும் பகுத்துள்ளனர். இங்கே தரைக்காடு என்பதைக் குறிக்கிறது.Range Ecology
792. தலைக்காலி யியல்Teuthology
793. தலை யியல்Cephalology
794. தழலியல் /  வெப்ப இயல்Pyrology / Thermology
795. தளர்வுஇயக்க இயல்Relaxation Kinetics
796.தற்கட்டுப்பாட்டமைப்பியல், தன்னாள்வியல்Cybernetics
797. தற்கொலை யியல்Suicidology
798. தனி உயிரியியல்Idiobiology
799. தனிஉரிம எண்ணியல்Autonumerology
800. தனியர் உளவியல்Individual Psychology
801. தன் வளைசலியல்Autecology
802. தன்னியல் Autology – தன்னியல், தன்னைப் பற்றி ஆயும் கலை, தன்னாய்வியல் எனப்படுகின்றது. சுருக்கமாகத் தன்னியல் – Autology என இங்கே தரப்பட்டுள்ளது.Autology
                  

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Thursday, February 17, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 759 – 779 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  746 – 758  இன் தொடர்ச்சி)

759. தகவலியல்

Informatics

760. தகவல் தொடர்புப் பொறியியல்

Communication Engineering

761. தகவல் நுட்பியல்

Information Technology

762. தகவல் முறைமைப் பொறியியல்

Information Systems Engineering

763. தகைமையியல்

Timology என்பது மேன்மை, மாண்பு, சிறப்பு, தகுநிலை முதலியவை பற்றிய இயல். இதனை விழுமியம் என்னும் பொருளிலேயே ஆங்கிலத்தில் பெரும்பாலும் குறிப்பிடு கின்றனர். தமிழிலும் அவ்வாறே குறிக்கின்றனர்.   தகைமை என்பது பொருத்தமான சொல்லாக இருக்கும்.  Axiology  என்பதை விழுமியம் என்பதால் இதனைத் தகைமையியல் எனலாம்.

Timology

764. தசைநாணியல்

Tenontology / Syndesmology

765. தசையியல்

Myology

766. தடய இயற்பியல்

Forensic physics

767. தடய மானிடவியல்

Forensic Anthropology

768. தடயவியல்

Forensic Science

769. தடயக் கதிரியல்

Forensic Radiology

770. தடுப்பு இனமேம்பாட்டியல்

Preventive eugenics

771. தடுப்பூசியியல்

vaccine – பகைப்பால், அம்மைப் பால், அம்மைப்பால், ஆவைன், ஊசியேற்றம், தடுப்பாற்றல் மருந்து, தடுப்பு ஊனீர், தடுப்பு மருந்து, தடுப்புநிரல், தடுப்பூசி, தடுப்பூசி மருந்து, பாலேற்றம், வேக்சின் பகைப்பில் எனப்படுகிறது.

வேக்சின் பகைப்பில் என்பதில் பகைப்பால் என்பது தான் தட்டச்சுப் பிழை யாகப் பகைப்பில் எனக் குறிக்கப் பட்டுள்ளதா எனத் தெரிய வில்லை. அல்லது இது சரி என்றால் விளக்கம் தெரிய வில்லை. எப்படியாயினும் ஒலிபெயர்ப்புச் சொல்லையும் கலந்து கியூ வரிசை என்பதுபோல் சொல்லப் பட்டுள்ள இச்சொல் விலக்கப்பட வேண்டும். ஒலி பெயர்ப்பிலும் வேக்குசின் என்றுதான் குறிக்க வேண்டும்.

மாட்டம்மைப் பாலை எடுத்து மனிதர்களுக்குப் போடும் முறை என்பதால், இலத்தீனில் பசு என்னும் பொருளுடைய vacca என்னும் சொல்லில் இருந்து vaccīnus  உருவானது.

தொடக்கத்தில் அம்மைக் கான அம்மைப்பால் ஏற்றப் பட்டிருந்தாலும் பிறகு எல்லா நோய்க்குமான தடுப்பூசி களையும் குறிப்பதாக அமைகிறது. எனவே, சுருக்கமாகத் தடுப்பூசி எனலாம். தடுப்பூசிகள் ஆக்கம், மேம்பாடு குறித்த அறிவியல் இது.

எனவே,

தடுப்பூசியியல் -Vaccinology  என்பதையே பயன்படுத்தலாம்.

Vaccinology

772. வளைசலியத்  தட்பியல்

Ecological Climatology

773. தட்பியல்

Climatology–காலநிலை ஆய்வியல், காலவியல், கால நிலை யியல், தட்பவெப்ப நிலை இயல், தட்பவெப்ப நிலை நூல், தட்பவெப்ப நிலையியல், தட்பவெப்பவியல், வெதண நிலையியல் எனப் பலவாறாகக் கூறப்படுகின்றது. வெதணம் என்பது வெப்ப தட்பம் என்பதன் முதல் எழுத்துகளைக் கொண்டு உட்ணம் என்பதில் அணம் சேர்த்து உருவாக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.

Chronology காலவியல் எனக் கூறப்படுவதால், Climatology என்பதற்கு ஈடாகக் கூறமுடியாது.

Weather காலநிலை எனப்படுவதால் இங்கும் அதையே பயன்படுத்துவது சரியல்ல. எனவே, தட்ப வெப்பவியல் என்பதே சரியாக உள்ளது. இதனையும் நாம் சுருக்கமாகத் தட்பவியல் எனலாம். தட்பம் குறையக் குறைய வெப்பம் மிகுகிறது. எனவே வெப்பம் என்பது தட்பமின்மையக் குறிக்கிறது. ஆதலின் பொதுவாகச் சுருக்கமாகத் தட்பவியல் எனலாம். தண்> தட்பு> தட்பம் என ஆகியுள்ளது.  வழக்கத்தில் தட்பம் என்றால் குளிர்ச்சியை மட்டும் கருதலாம் என்பதால் தட்பு  + இயல் = தட்பியல்  எனக் குறிப்போம். விளக்கத்தில் தட்பம் வெப்பம் குறித்த இயல் என அறிவோம்.

Climatology

 

774.  தணிப்பகம்

Clinic– மருந்தகம், பண்டுவமனை, செய்மருத்துவம், நோய், மருந்து, மருத்துவகம், பிணியாய் நிலையம், சிகிச்சை நிலையம், சிகிச்சை நிலையம், மருத்துவ நிலையம் எனப்படுகின்றது.

பண்டுவம் என்பது treatment என்பதற்குரிய நல்ல சொல்தான். எனவே, பண்டுவமனை என்பதும் சரிதான். எனினும் therapy என்பதற்குப் பயன்படுத்தப்படுவதால் இங்கே பயன்படுத்தவில்லை.

Clinical பிணிஆய்வுக்குரிய, மருத்துவத்திற்குரிய, சிகிச்சைசார், சாய்ச்சாலை (இலங்கை வழக்கு), சாய்வுற்ற, மருத்துவப் பயிற்சி சார்ந்த, நோய்ப்படுக்கைத் தொடர்புடைய, படுக்கை மருத்துவப் பயிற்சியைச் சார்ந்த, மனைசார், மருத்துவமனைசார் எனப் படுகின்றது.

Clinic என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பொருள் படுக்கைக்குரிய.

Clinic தணிப்பறை என ஆறாவது உலகத்தமிழ் மாநாட்டுக் கட்டுரையிலேயே குறித்திருந்தேன்.

நோயைத் தணிப்பதற்குத் தொடக்க நிலையில் மருத்துவர் அறை நாடிச் செல்கிறோம். அடுத்த நிலை  தேவைப்படும் பொழுதுதான் மருத்துவமனை செல்கிறோம். எனவே, Clinic என்பதை மருத்துவமனை என்று சொல்வதைவிடத் (நோய்த்) தணிப்பறை என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இருப்பினும் சொற்சீர்மை கருதி இப்போது தணிப்பகம் எனக் குறித்துள்ளேன்.

தணிப்பகம்  – Clinic

775. தணிப்பகம் சார் > தணிப்பக – Clinical

எனலாம்.

Clinic

776. தணிப்பக மரபணுவியல்

Clinical Genetics

777. தணிப்பகத் தொற்றியல்

Clinical epidemiology

778. தணிப்பக நோயியல்

Clinical Pathology

779. தணிப்பக மருந்தியல்

Clinical pharmacology

குறிப்பு : தணிப்பக என மேலே குறிப்பிட்ட இடங்களில் (தணிப்பு >) தணி என்றே குறிக்கலாம்.

 

 

 

 

 

 

 

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
  

Wednesday, February 16, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 722 – 745 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  706 – 721 இன் தொடர்ச்சி)
722. செலவுப் பொருளியல்Cost Economics
723. செலவுப் பொறியியல்Cost Engineering
724. செல்வ உற்பத்தியியல்Chrysology
725. செல்வ வியல் இலத்தீன், கிரேக்கச்சொற்கள் செல்வம் என்று குறிக்கும் சொற்கள் அடிப்படையில் இச் சொற்கள் உருவாகின.Aphnology / Plutology(1)
726. செவி மூக்கு மிடற்றியல்.   காது, மூக்கு, தொண்டை நோயியல் என்றும் கூறுவர்.Oto Rhino Laryngology / Otolaryngology
727. செவியியல்Otology
728. செவ்வறைக்கனவு நூலியல் காவுசூய்கின்(Cao Xueqin)     என்னும் சீன எழுத்தாளரின் செவ்வறைக்கனவு(Dream of the Red Chamber) என்பது சீனாவின் நான்கு செவ்வியல் புதினங்களில் ஒன்றாகும். இந்நூல் குறித்து மிகுதியாக ஆராய்ச்சி யாளர்கள் உள்ளனர். இந்நூல் குறித்த ஆராய்ச்சித் துறையே ‘செவ்வறைக்கனவு’ நூலியல் ஆகும்.Redology
729. செவ்வாயியல் Árēs என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் செவ்வாய்க் கோள்.Areology
730. செவ்வியற்பியல் செம்மை எனக் குறித்திருந்தைச் சுருக்கிச் செம்/செவ் என புணர்ச்சி விதிக்கிணங்க மாற்றியுள்ளேன். எ.கா. செம்மை+பொருள் =செம் பொருள்; செம்மை + தமிழ் = செந்தமிழ்.Classical physics
731. செவ்விசையியல் காண்க:  செவ்வியற்பியல்Classical Mechanics
732. செறிபொருள் இயற்பியல்Condensed Matter Physics
733. சொந்த மனவியல் idio- என்றால் ஒருவருக்குச் சொந்தமான எனப் பொருள்.Idiopsychology
734. சொல்லாடலியல்   Pun என்பது சிலேடை முதலிய சொல்லாடல்களைக் குறிக் கிறது.Punnology
735. சொற்களியல்Onomasiology
736. சேர்மானவியல்Combinatorics
737. சேர்வுசார் திணையியல்Combinatorial Topology
738. சோவியத்தியல் காண்க: கிரெம்லினியல்Sovietology
739. சொல்திரிபு உருபனியல் infectional morphology
740. சொல்லியல் Lexicology / Semantology
741. சொல்லிலக்கண வியல்Accidence 
742. சொற்கிளைமொழியியல்Lexical Dialectology
743. சொற்கோவைப்புள்ளியியல்Lexico statistics
744. சொற்பொருளியல்Semasiology       
745. ஞாயஏரணவியல் Alethiology என்பது ஏரணவியலில்(Science of Logic) ஞாயஏரணவியல் என்றும் சரி தவறு ஆய்வியல் என்றும் குறிக்கப் பெறுகிறது. எது சரி, எது தவறு என்பதைக் குறிப்பிடுவதுதானே ஞாயம். ஏரணவியலில் உண்மை குறித்த ஆய்வுத்துறை என்பதால் ஞாயஏரணவியல் என்கிறோம்.  ஞாயம் என்றால் உண்மை என்று பொருள். alḗtheia என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் உண்மை. இதனால் ஆங்கிலத்தில் Truthology-உண்மையியல் என்கின்றனர். ஞாயஏரணவியலும் உண்மையியலும் வெவ்வேறு என எண்ணப்படக் கூடாது.Alethiology / Alethology/ Truthology

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000