அகரமுதல
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 759 – 779 இன் தொடர்ச்சி)
780. தண்டனை யியல் 781. தண்டூர்திக் கணிப்பியல் | Penology / Poenology 781. Sporalogy |
782. தணிப்பக உளவியல் | Clinical psychology |
783. தமிழியல் | Tamilology |
784. தரப் பொறியியல் | Quality Engineering |
785. தர மும்மை | Quality Trilogy |
786. தரவரிசைப் புள்ளியியல் | Rank order statistics |
787. தரவு வனைம நுட்பியல் | Data Processing Technology |
788. தரவுக் கட்டமைப்பியல் | Stringology |
789. தரவுப் புள்ளியியல் | Data Statistics |
790. தருக்க உருவாக்கவியல் | Mereology |
791. தரைக்காட்டு வளைசலியல் அடுக்கம், அடுக்கல், அணி, ஆவலி, ஆவளி, இடைவெளி, இராசி, எல்லை, ஏற்ற இறக்க எல்லை, ஏற்ற-இறக்க நெடுக்கம், களம், காட்டு (மேய்ச்சல்) சரகம், காட்டுச் சரகம், சஞ்சரி, சரகம், சுற்றளவு, சுற்று, தரைக்காடு, தாரை , திரிதல், தொடர் எல்லை, தொடர், தொடர்ச்சி, நெடுக்கம், பத்ததி, பத்தி, பரப்பு எல்லை, பரப்பு, பவுஞ்சு , பெளஞ்சு , மட்டு, வரம்பளவு, வரிசை, வீச்சு, வீச்செல்லை, வேறுபாட் டெல்லை என range என்பதற்குப் பொருள்கள் உள்ளன. மலைப்பகுதிக் காட்டினை மலைக்காடு என்றும் தரைப்பகுதிக் காட்டினைத் தரைக்காடு என்றும் பகுத்துள்ளனர். இங்கே தரைக்காடு என்பதைக் குறிக்கிறது. | Range Ecology |
792. தலைக்காலி யியல் | Teuthology |
793. தலை யியல் | Cephalology |
794. தழலியல் / வெப்ப இயல் | Pyrology / Thermology |
795. தளர்வுஇயக்க இயல் | Relaxation Kinetics |
796.தற்கட்டுப்பாட்டமைப்பியல், தன்னாள்வியல் | Cybernetics |
797. தற்கொலை யியல் | Suicidology |
798. தனி உயிரியியல் | Idiobiology |
799. தனிஉரிம எண்ணியல் | Autonumerology |
800. தனியர் உளவியல் | Individual Psychology |
801. தன் வளைசலியல் | Autecology |
802. தன்னியல் Autology – தன்னியல், தன்னைப் பற்றி ஆயும் கலை, தன்னாய்வியல் எனப்படுகின்றது. சுருக்கமாகத் தன்னியல் – Autology என இங்கே தரப்பட்டுள்ளது. | Autology |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
No comments:
Post a Comment