(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 706 – 721 இன் தொடர்ச்சி)
722. செலவுப் பொருளியல் | Cost Economics |
723. செலவுப் பொறியியல் | Cost Engineering |
724. செல்வ உற்பத்தியியல் | Chrysology |
725. செல்வ வியல் இலத்தீன், கிரேக்கச்சொற்கள் செல்வம் என்று குறிக்கும் சொற்கள் அடிப்படையில் இச் சொற்கள் உருவாகின. | Aphnology / Plutology(1) |
726. செவி மூக்கு மிடற்றியல். காது, மூக்கு, தொண்டை நோயியல் என்றும் கூறுவர். | Oto Rhino Laryngology / Otolaryngology |
727. செவியியல் | Otology |
728. செவ்வறைக்கனவு நூலியல் காவுசூய்கின்(Cao Xueqin) என்னும் சீன எழுத்தாளரின் செவ்வறைக்கனவு(Dream of the Red Chamber) என்பது சீனாவின் நான்கு செவ்வியல் புதினங்களில் ஒன்றாகும். இந்நூல் குறித்து மிகுதியாக ஆராய்ச்சி யாளர்கள் உள்ளனர். இந்நூல் குறித்த ஆராய்ச்சித் துறையே ‘செவ்வறைக்கனவு’ நூலியல் ஆகும். | Redology |
729. செவ்வாயியல் Árēs என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் செவ்வாய்க் கோள். | Areology |
730. செவ்வியற்பியல் செம்மை எனக் குறித்திருந்தைச் சுருக்கிச் செம்/செவ் என புணர்ச்சி விதிக்கிணங்க மாற்றியுள்ளேன். எ.கா. செம்மை+பொருள் =செம் பொருள்; செம்மை + தமிழ் = செந்தமிழ். | Classical physics |
731. செவ்விசையியல் காண்க: செவ்வியற்பியல் | Classical Mechanics |
732. செறிபொருள் இயற்பியல் | Condensed Matter Physics |
733. சொந்த மனவியல் idio- என்றால் ஒருவருக்குச் சொந்தமான எனப் பொருள். | Idiopsychology |
734. சொல்லாடலியல் Pun என்பது சிலேடை முதலிய சொல்லாடல்களைக் குறிக் கிறது. | Punnology |
735. சொற்களியல் | Onomasiology |
736. சேர்மானவியல் | Combinatorics |
737. சேர்வுசார் திணையியல் | Combinatorial Topology |
738. சோவியத்தியல் காண்க: கிரெம்லினியல் | Sovietology |
739. சொல்திரிபு உருபனியல் | infectional morphology |
740. சொல்லியல் | Lexicology / Semantology |
741. சொல்லிலக்கண வியல் | Accidence |
742. சொற்கிளைமொழியியல் | Lexical Dialectology |
743. சொற்கோவைப்புள்ளியியல் | Lexico statistics |
744. சொற்பொருளியல் | Semasiology |
745. ஞாயஏரணவியல் Alethiology என்பது ஏரணவியலில்(Science of Logic) ஞாயஏரணவியல் என்றும் சரி தவறு ஆய்வியல் என்றும் குறிக்கப் பெறுகிறது. எது சரி, எது தவறு என்பதைக் குறிப்பிடுவதுதானே ஞாயம். ஏரணவியலில் உண்மை குறித்த ஆய்வுத்துறை என்பதால் ஞாயஏரணவியல் என்கிறோம். ஞாயம் என்றால் உண்மை என்று பொருள். alḗtheia என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் உண்மை. இதனால் ஆங்கிலத்தில் Truthology-உண்மையியல் என்கின்றனர். ஞாயஏரணவியலும் உண்மையியலும் வெவ்வேறு என எண்ணப்படக் கூடாது. | Alethiology / Alethology/ Truthology |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
No comments:
Post a Comment