Tuesday, June 14, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 141 – 150

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்  138 – 140 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

141. ஆசாரம்          —        ஒழுக்கம்

142. வியவகாரம்  —        வழக்கு

143. பிராயச்சித்தம்        —        கழுவாய்

144. பிரத்தியட்சம்           —        கண்கூடு

145. வானப்பிரசுத்தநிலை      —        புறத்தாறு

146. சுதந்தரம்       —        உரிமை

147. அவயவம்       —        உறுப்பு

148. அமிர்தம்         —        சாவா மருந்து

149 நீதி         —        நடுவு

150. முத்தி பெறுதல்       —        வீடுபேறு

நூல்   :           திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் (1904). தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும் : கோ. வடிவேலு செட்டியார் (சென்னை இந்து தியலாசிகல் ஐசுகூல் தமிழ்ப் பண்டிதர்).

பேராசிரியர்         :           டாக்டர் தெ.பொ.மீ. அவர்களின் ஆசிரியர்

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச் சொல்லாக்கம்

Sunday, June 12, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 138 – 140

 

அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்  133 – 137 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

138. Great world’s Fair – உலகத்துப் பெருஞ்சந்தை

இந்துமதத்தையும் இந்துக்களின் தத்துவ ஞானத்தையும் பிற தேசங்களிலுள்ளவர்ளுக்குக் கற்பிக்க வேண்டுமென்ற அவா இவருக்கு மிக விருந்தது. இவ்வெண்ண மேற்கொண்டு 1893 ஆம் வருடத்தில் இந்தியாவினின்றுங் கிளம்பி அமெரிக்கா கண்டத்தை நோக்கிச் சென்றார். சிக்காகோ என்னும் நகரத்தையடைந்து ஆங்கு நடந்த ‘உலகத்துப் பெருஞ்சந்தை’ (Great World’s Fair)க்குச் சென்றனர். உலகத்திலுள்ள மதங்கட்கான சபையில் இவரை இந்து மதத்திற்கும் வேதாந்த நிலைமைக்கும் பிரதிநிதியாக அங்குள்ளர் ஒப்புக் கொண்டனர். 1894ஆவது வருடம் முழுவதும் ஆங்காங்குப் பிரசங்கங்கள் செய்தனர். 

நூல் : மகாசன மண்டலி (1904) பக். 3637)

நூலாசிரியர் : டி.ஏ. சுவாமிநாத ஐயர் (ஆர்யா பத்திரிகை ஆசிரியர்)

139. TRANSLATER – மொழிபெயர்ப்பாளர்

முதன்முதலில் அவர் செங்கற்பட்டுக் கலெக்டர் ஆபீசில் டிரான்சுலேட்டராய் (மொழிபெயர்ப்பவராய்) அமர்ந்தார். படிப்படியாய் உத்தியோகத்திலுயர்ந்து. சீக்கிர காலத்திலேயே நெல்லூர் சில்லாவிற் பிரதான சிரேசுதேதாராயினர்.

மேற்படி நூல் : பக் 155

140. Mortgage – பொந்தகம், ஒற்றி

Mortgage பெந்தனம், ஒற்றியென்பவை முறையே பெந்தகம், ஒத்தியென வழக்கச் சொற்களாகிவிட்டன. இவைகளைப் பற்றி இங்கிலிசு கவர்ண்மெண்டார் 1798-௵லத்திய 1-ஆவது ரெகுலேசன், என்றும், 1806-௵லத்திய 17-ஆவது ரெகுலேசன் என்றும், இருவகைச் சட்டங்கள் ஆதியில் ஏற்படுத்தியிருந்தார்கள்.

இதழ் :           விவகார போதினி (1904) புத்தகம் – 1 இலக்கம் – 1, பக், 12

ஆசிரியர்    :           எ. நடேசபிள்ளை (திருவாரூர் டிசுட்ரிக்ட் முன்சீப் கோர்ட்டு பிளிடர்)

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Friday, June 10, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 133 – 137

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்  129-132 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

133. பட்சி

பட்சி – பட்சமுடையது (பட்சம் – இறகு)

நூல் : குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் (1904)

நூலாசிரியர் : வித்துவான் – காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு

134. ஆறு பகை

காமம் – ஒரு பொருளின் மீது செல்லும் விருப்பம், குரோதம் – அப்பொருள் கிடையாத போதுண்டாகும் கோபம், உலோபம் – தானும் அநுபவிக்காமல் பிறர் கொடாமலிருக்கும் குணம், மோகம் – மாதர் மீதுண்டாகுமிச்சை, மதம் – செருக்கு, மாற்சரியம் – பொறாமை, இவ்வாறும் பிறவிக்கேதுவாய், ஆன்மாக்களுக்குத் துன்பம் விளைத்தலால் இவற்றை ஆறு பகை என்றார். இவற்றை வடநூலார் அரிசட் வர்க்கம்’ என்பர்.

மேற்படி நூல் : பக்கம் 105, 106

135. மீகான்

மீகான் – கப்பலோட்டுகிறவன். இச்சொல், மேலிடத்துள்ளானெனப் பொருள்படும். மீயான் என்பதன் மரூஉ வென்றாயினும், மீகாமன் என்பதன் விகாரமென்றாயினும், மியான் என்ற பெயர் பகுதி விகுதிகளினிடையே குச்சளியை பெற்றதென்றாயினும் கொள்க.

மேற்படி நூல் :

136. Parliment – பாராளுமன்று

ஒராத காட்சி பல உண்ட கண்கள் தேக்கு; மந்தப் பாராளு மன்று தனைப்

பார்த்த கண்ணோ தேக்காது.

நூல் : விவேக ரச வீரன் கதை (1904)

நூலாசிரியர் : பாலசுப்பிரமணிய பிள்ளை

137. Train – ஆவிவண்டி

தெம்சு நதிக்கீழ் ஆவி வண்டி

சேர்கின்ற தாங்கிலரின்

வம்சப்பேர் எக்காலும்

மாறா அடையாளம்.

ஆவிக்கப்பல் மேலோட

ஆவி வண்டி கீழோட

மேவச் செய் ஆங்கிலர்வி

சித்திரத்தை யாதுரைப்பேன்?

நூல்⁠ :விவேக ரச வீரன் கதை (1904)

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச் சொல்லாக்கம்

Wednesday, June 8, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 129-132

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்  124-128 தொடர்ச்சி)

(சொல்மொழிமாற்றம்பெற்றசுவடுகளைஅடையாளங்காட்டும்சுரதாவின்அரியதொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம்பார்வையில் பட்டவற்றை) தேடித்தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

129. இரசாயன நூல் – பொருட்டிரிவு நூல்

யாம் மதநூலைக் குறித்துச் சொல்லிய நியாயமே யிவற்றிற்கெல்லாம் பொருந்தும். நூலென்னும் பெயர்க்குச் சில வுளவே யன்றி முறை வழுவாது எளிதிற்றெளிவாக விளங்கும்படி யெழுதிய நூல்கள் அரிதினுமரிதா யிருக்கின்றனவே. தற்காலத்தாசிரியர் ஒருவர், இரசாயன நூல் என்பதனைப் பொருட்டிரிவு நூலெனப் புதுப்பெயரிட்டழைத்தனர். (ஞானபோதினி – Sept. 1902)

இதழ் :           யதார்த்த பாசுகரன் (1902) சம்புடம் – 1. இலக்கம் – 5. பக், 136.

இதழாசிரியர்       :           வி. முத்துக்குமாரசாமி முதலியார் பி.ஏ., சென்னை.

130. கர்வம் – தற்பொழிவு

தற்பொழிவும் டம்பமும் – பூமியிலுள்ள பல சாதிகளில் இந்துக்களே அதிக அகந்தைக்காரர். ஆனால் சீனர் இவர்களைவிட சாசுத்தி அகந்தைக்காரர் என்று தெரிய வருகிறது. ஐரோப்பியரை வெளியூர் மிலேச்சர், அன்னியப் பிசாசுகள் என்று அவர்கள் சொல்லுவார்கள். ஆனால் அவர்களைக் கைகொடுத்தாட்டி அவர்களோடு குந்திச் சாப்பிடுவதால் தாங்கள் தீட்டுபட்டுப் போகிறோம் என்பதைச் சீனர் உணர்கிறதில்லையாம். இவ்வித கருவம் சீனப் படிப்பாளிகளிடத்தில் அதிகமாய் உண்டு. தாங்கள் கற்றுணர்ந்த ஒன்பது கலைஞானங்கள் நீங்கலாக வேறு கலைகள் இல்லவே யில்லையென்பது அவர்கள் சாதனை. இந்துப்பண்டிதரைப்போல ஒரு வார்த்தைக்காக ஐம்பது வீண் நியாயங்கள் கொண்டு வந்து அவர்கள் வழக்காடுவார்கள்.

நூல்   :           சீனம், சீனருடைய சித்திரப்படச் சரிதைகள் (1902) பக். 57.

(குறிப்பு       :           நூலின் முதல் பக்கம் கிடைக்காததால் ஆசிரியர் பெயர் குறிக்கவில்லை).

131. விரதம் – காப்பது

இப்போது செய்யும் விரதானுட்டானங்களெல்லாம் ஒவ்வொரு கடவுளுக்குரிய, திதி, வாரம், நட்சத்திரங்களில், உபவாசம், பால், பழம், பலகாரம், அவிசு, ஏகவார போசனஞ் செய்தலே அனுசுட்டானமாக இருக்கிறது. இப்படிச் செய்வதில் அந்தந்தக் கடவுளுக்குரிய வந்தனம், வழிபாடு, சபம், தியானம், அக்கடவுளுக்குரிய புராண சிரவணம் ஒன்றும் செய்கிறதில்லை. ஆகார பேதங்களும் நீராகாரமும் பல காரணங்களால் ஏற்படும். அவை எல்லாம் விரதங்களாகா.

விரதம் என்னும் பதத்திற்குக் காப்பது விரதமென்பது பொருள். அதாவது இன்ன காரியத்தை யின்ன விதமாகவே செய்து முடித்த பிறகு போசனம், தைலம், தீட்சை, இவைகளைச் செய்து கொள்ளுகிறதென்று நியமித்து, நியமித்தபடியே செய்து முடிப்பதே விரதமென்பார்கள்.

நூல்   :           சைவ சித்தாந்தப் பிரசங்கக் கோவை (1902) விரதமான்யிம், பக்கம்-7

சொற்பொழிவாளர்       :           சோ. வீரப்ப செட்டியார் (நாகை வெளிப்பாளையம் சைவ சித்தாந்த சபைச் சொற்பொழிவு)

132. Junction – சேர்க்கை

சென்னப்பட்டணத்திலிருந்து தென் மேற்கே தூத்துக்குடிக்குப் போகிற தென் இந்தியா இரயில்வேத் தொடரில், விழுப்புரம் சங்சன் (சேர்க்கை) சுடேசனுக்கும், மாயூரம் சங்சன் (சேர்க்கை) சுடேசனுசக்கும் உள்ள இரயில்வே.

நூல்   :           சிவசேத்திர யாத்திரானுகூலம் (1903) பக், 1

நூலாசிரியர்         :           சாலிய மங்கலம் மு. சாம்பசிவ நாயனார்.

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Tuesday, June 7, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1713-1719 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1712 இன் தொடர்ச்சி)
713. வானகத் தொல்லியல்Astroarcheaology
1714. வானக
Astro – வான், விண், அசுரோ, சோதிடம், உடு எனக் கூறப்படுகின்றன. அசுரோ என்பது ஒலிபெயர்ப்புச் சொல். சோதிடம் தமிழ்ச்சொல்லல்ல. உடு என்பதற்கு விண்மீன் என்பது பொருள். எனவே, இந்த இடத்தில் உடு என்பது பயன்படுத்தப்பட வேண்டா. வானின் அகத்தே உள்ள பொருள்கள் என்னும் பொருளில் வானகம் எனலாம். முன்னொட்டுச் சொல்லிற்கு வானக  – Astro என்று குறிக்கலாம்.    
Astro  
1715. வானிலையியல்  
Neteorology – வானியல், வானிலையியல் எனச் சில அகராதிகளில் குறிக்கப் பெற்றுள்ளன. Meteorology என்னும் சொல் எழுத்துப் பிழையாக  Neteorology என்று ஒன்றில் இடம் பெற்று அதுவே பிற அகராதிகளிலும் பதிவாகி யுள்ளது. வானம் என்பதைப் புவிக்கு வெளியிலுள்ள பகுதி எனக் கருதிப், புவிவெளியியல் என்று சொல்வோரும் உள்ளனர். வானிலுள்ள கோள்கள், உலவிகள், உழலிகள் முதலான வான்பொருள்கள் குறித்தவற்றை வானியல் எனலாம். வானில் அமையும் மழை, வெயில், தட்ப வெப்பம் முதலான நிலைகளைப்பற்றிய அறிவியல் வானிலையியல் என்பது பொருத்தமாக இருக்கும்.   இதனைக் காலநிலை யியல் என்கின்றனர் சிலர். இவ்வாறு கூறுவது  Climatology  என்ற எண்ணத்தை விளைவித்துக் குழப்பத்தை ஏற்படுத்தும். வானிலையால் அமையும் காலநிலைச் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு இது. எனவே, காலஅமைப்பியல் எனலாம் எனக் கருதிப் பார்த்தோம். இதைவிட நேரடியாக வானிலையியல் என்பதே ஏற்றதாக இருக்கும் என்பதால் வானிலையியல் எனக் குறித்துள்ளோம்.
Meteorology
1716. வானக இயற்பியல்Astrophysics
1717 வானிலை ஒளியியல்Meteorological Optics
1718. வானூர்தி வித்தை
aerial-acrobatics என்னும் இரு சொற்களின் இரு பகுதி ஒட்டுச்சொல்.
Aerobatics
1719. வானூர்திப் பொறியியல்Aeronautical Engineering       +++++++++      

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Monday, June 6, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 124-128

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்  118 -123 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

124. Hero – பெருமான்

125. Heroine – பெருமாட்டியார்

இந்துக்கள் அதிர்ட்டவசமென்றும், திசாபலம் இராசி நட்சத்திரங்களின் பலமென்றும், ஊழ்வினைப் பலமென்றும் பலவகையில் இந்நடவடிக்கைகட்கு நியாயம் சொல்வதால், கவி எடுத்துக்கொண்ட பெருமான், பெருமாட்டியார் (Hero, Heroine) பெருமை இவ்வித இவ்வித சம்பவங்களால் அலங்கரிக்கப்பட்டு விசித்திரமாவது பற்றி, இதை ஒரு அணியென வகுத்தல் தமிழாசிரியர் பெற்றியாம்.

மேற்படி நூல் : பக்கம் : 414

126. சூரிய நாராயண சாத்திரியர் -பரிதிமாற்கலைஞன்

இதுகாறும் புலவர் குழாம் பயின்றுவரும் இடைநிலை யிலக்கியங்களொடு மறுதலைப்பட்ட இலக்கணங்களை யுடையதென இந்நூல் சிற்சிலவிடங்களிற் புலப்படினும் நூற்கருத்துணரு முன்னர் இதனையன்னதென்கறி சுழற்க. நூலினை முற்றுமுணர்ந்த பின்னரும் இந்நூல் புரையுடைத்து இந்நூல் தக்கின்று என வாளாது கூறலிற் பெரும் பயனின்றாம். இவ் விக் காரணங்களான் இஃது அப்பெற்றித்தெனச் சிறியேனைத் தெருட்டா வழி.

இனி யிந்நூலினை வெளிப்படுத்தும் வழி எனாதுண்மைப் பெயரை மறைத்துப் பரிதிமாற்கலைஞன் எனப் புனைவுப் பெயர் நிறுத்தி வெளிப்படுத்துகின்றேன்.

நூல்   :           தனிப்பாசுரத் தொகை பக்கம் : 8. (5-12-1899)

நூலாசிரியர்  :  பரிதிமாற் கலைஞன் (வி. கோ. சூரிய நாராயண சாத்திரியார், பி.ஏ.) –

127. Aquvarium – நீர்நிலைக் கண்ணாடிக் கூடு

நீர்நிலைக் கண்ணாடிக் கூடு (Aquarium) – நீரில் வாழும் சிறு பூண்டுகளும் செந்துக்களும் வாழும்படி கண்ணாடியினால் செய்யப்பட்டு நீர் பெய்யப்பட்டுள்ள கூடு.

நூல்   :   (வித்தியா தீபிகை என்னும்) கல்வி விளக்கம் (1899) பக்கம் – 73.

மொழி பெயர்ப்பாளர்கள்  : எசு. வி. கள்ளப்பிரான் பிள்ளை. சி, அப்பாவு பிள்ளை. வி. பி. சுப்பிரமணிய முதலியார்.

128. Light House – விளக்குக் கூடு

விளக்குக் கூடு கப்பலோட்டிகளுக்குக் கண்ணொளி போன்றது. இது அவர்கள் கப்பலை இரவுக் காலத்தில் பரந்த கடலில் செலுத்தி வரும்போது வழியில் இருளில் மறைந்து கிடக்கும் பாறையில் தாக்கியாகிலும், மணற்றிடரில் செருகியாகிலும் அழிந்து போகாதபடி காக்கின்றது. அதாவது விளக்குக்கூடுள்ள விடத்தைச் சுற்றிலும் மேற்கண்ட அசந்தற்பங்கள் இருக்கின்றனவென்று எச்சரிக்கை செய்கின்றது போலாம். பண்டைக் காலத்தில் இக்கூடுகள் அபுரூபமாயிருந்தன. முதலில் 2200 – வருடங்களுக்கு முன்பு பாரோசு (Pharos) என்பவர்களால் அலெக்சான்டிரியாவில் கட்டப்பட்டிருந்தன வென்று சரித்திரஞ் சொல்லுகின்றது.

இதழ் :           சீவரத்நம் (1902) வகை – 1, மணி – 1, பக்கம் – 15.

இதழாசிரியர்    :  டி.ஆர்.சந்திர ஐயர், சென்னை,

Saturday, June 4, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 118 – 123

 அகரமுதல


(தமிழ்ச்சொல்லாக்கம்  111-117 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைதேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

118. ஆண்டிமொனி – நிமிளை

அச்செழுத்து எப்படி உண்டாகிறது?

நாலு பங்கு ஈயத்துக்கு ஒரு பங்கு நிமிளை (ஆண்டிமொனி) கூட்டுவார்கள்.

நூல்   :           மூன்றாம் சுடாண்டர்டு புத்தகம் – பதப்பொருளும் வினா விடையும் (1897)

நூலாசிரியர்         :           எத்திராச முதலியார்.

119. அம்போதரங்கம் – நீரின் அலை

அம்போதரங்கம் (நீரின் அலை) அல்லது அசையடி – இது கடல் அலைகள்போல அடிகள் அளவடியாய்ப் பெருத்தும், சிந்தடியாய்ச் சிறுத்தும், குறளடியா யதனினும் சிறுத்தும் தாழிசைக்குப் பின் வருவது; நாற்சீராலாகிய ஈரடியால் இரண்டும், ஒரடியால் நான்கும், முச்சீரடியால் எட்டும், இரு சீரடியால் பதினாறுமாக வருவது சாதாரணம்.

நூல்   :           தமிழ் இலக்கணத் தெளிவு (1897) பக். 273.

நூலாசிரியர்         :           சோசப், பி.ஏ., முதுநிலை விரிவுரையாளர், (இ)ராசாமுந்திரி கல்லூரி.

120. அனுடம்          –           பனை

121. கேட்டை         –           துளங்கொளி

122. ஆயிலியம்     –           கட்செவி

123. மிருகசீரிடம் –           மான்றலை

மேற்படி நூல்        :           பக்கம் – 334.

(குறிப்பு       :           இச்சொல்லாக்கங்கள் அடிக்குறிப்பில் உள்ளவை)

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்