(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 536 – 543 இன் தொடர்ச்சி)
544. கிளைப்பாட்டியல் காண்க: இனமரபு முறைமையியல்-Phylogenetic systematics | Cladistics |
545. கிளைமொழியியல் | Dialectology |
546. கிறித்துவியல் | Christology |
547. கீன்சியப்பொருளியல் Keynesian Economics – கீன்சியப் பொருளியல், கெய்னீ சியன் பொருளியல் எனஇரு வகையாகக் கூறப்படுகிறது. யகரத்திற்கு அடுத்து னகரம் வராது. எனவே, கீன்சியப் பொருளியல் என்றே கையாள்வோம். | Keynesian Economics |
548. குகைஉயிரியியல் | Biospeleology |
549. குகையியல் Speleo – என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் குகை. | Speleology / Spelacology / Spelaeology |
550. குடலியல் Entero – என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குடல். | Enterology |
551. குடல்சுரப்பியியல் Enter= குடல்; adenology = சுரப்பியியல்; | Enteradenology |
552. குடல் நோயியல் | Coloproctology |
553. புழுவியல் Helminthology – புழுவியல், குடற்புழு அறிவியல், குடற்புழு நோயியல், குடல் புழுவியல், புழுவளி விளக்கம் எனப் படுகிறது. சுருக்கமாக நாம் புழுவியல் – Helminthology எனலாம். hélminthos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் குடற்புழு. | Helminthology |
554. குடிமை யியல் | Civics |
555. குடியேற்ற வியல் குடியேற்றம் என்னும் பொருள் கொண்ட பழங்கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானதே Ekistics. | Ekistics |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
No comments:
Post a Comment