(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 571 – 583 இன் தொடர்ச்சி)
584. குழு இயங்கியல் | Group dynamics |
585. குழுமநலன் பொருளியல் | Agglomeration Economics |
586. குளுமை இயற்பியல் | Cryophysics |
587. குளுமை மின்னணுவியல் | Cryoelectronics/ Cryotronics |
588. குளுமை வடிவியல் | Cryomorphology |
589. குளுமை யியல் | Cryology |
590. குறிசொல் லியல் mantia என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறி கூறல். | Parapsychology(2) / Mantology |
591. குறிப்பியல் crypto- என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மறை/உட்குறிப்பு. | Cryptology |
592. குறி யியல் sēmeîon என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் semaeo என்னும் புது இலத்தீன் சொல்லிற்கும் அடையாளம்/அறிகுறி எனப் பொருள்கள். Semiotics என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் குறிகள் பற்றிய இயல். எனவே, அறிகுறியியல்/குறியியல் எனப்படுகிறது. குறியமையவியல் எனச் சிலர் குறிப்பிடுவதைவிடக் குறியியல் சுருக்கமாக உள்ளது. நோய்க்குறி நூல், நோய்க் குணநூல் எனச் சில அகராதிகளில் காணலாம். Symptomology/ Symptomatology என்பது நோய் அடையாள வியலைக் குறிப்பதால் இவற்றை இங்கே குறிக்கத் தேவை யில்லை. அதனைக் குறிநுட்பியல் எனலாம். | Semiotics1, Semiology1
|
593. குறியீட்டியல் eikṓn என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் உருப்படம்/ குறியீடு. eikṓn>Icon | Iconology |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
No comments:
Post a Comment