(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  683 – 705 இன் தொடர்ச்சி)
706. சூழமைவியல் சூழல் மேம்படும் போது அதற்கேற்ப மனிதச் செயல்பாடுகளிலும் முன்னேற்றம் காண்பது குறித்த அறிவியலையும் euthenics என்றுதான் கூறுகின்றனர். இதையே மரபணு இணக்கச் சூழலியல் என்கின்றனர். இதனைச் சுருக்கமாகச் சூழமைவியல் – Euthenics (2) எனலாம்.Euthenics (2)
707. செதிற்பூச்சி யியல்Coccidology
708. செதுக்கியல்Anaglyptics 
709. செப்ப  உடம்பி யியல்Physiology Of Repair
710. செம் புள்ளியியல் classical  – ஒப்புக் கொள்ளப்பட்ட சிறப்புடைய, சாசுத்திரிய, செம், சிறப்பான, செவ்வியல், தொன்மை, மரபு வழி எனப்பல பொருள்கள் உள்ளன. மரபு வழியிலான செம்மையைக் குறிப்பதால் செம் புள்ளியியல் எனலாம்.Classical Statistics
  711. செம் பொருளியல் செம்மை எனக் குறித்திருந்தைச் சுருக்கிச் செம்/செவ் என புணர்ச்சி விதிக்கிணங்க மாற்றியுள்ளேன். எ.கா. செம்மை+பொருள் = செம்பொருள் செம்மை + தமிழ் = செந்தமிழ்.  Classical Economics
712. செம்பொருள் ஒட்பவியல் சிலர்  Virtue-விழுமம் எனக் கையாளுகின்றனர். Axiology / Timology – விழுமவியல் எனப்படுவதால் விழுமம் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது.Virtue Epistemology
713. செயன்முறைப் புள்ளியியல் காண்க:  செயன்முறைப் பொருளியல்  Practical Statistics
714. செயன்முறைப் பொருளியல் ‘ல்’ அடுத்து ‘ம்’ வரிசை வராது. வரும் இடங்களில் ‘ன்’ ஆக மாறும். நல் + முறை = நன்முறை என்பதுபோல். எனவே, செயல்முறை என்பதைச் செயன்முறை எனக் குறித்துள்ளேன்.Practical Economics
715. செயற்கைக் கருத்தரிப்பு நுட்பியல்Assisted Reproductive Technology
716. செயற்கைப் பல்லியல்Prosthodontics/ Prosthodontia
717. செயற்கைப் பற்பதியவியல்Oral Implantology
718. செயன்மைஉளவியல்Act Psychology
719. செய்கையியல் (சைகையியல்) Pasimology/Dactylology –கைம் முத்திரையியல்/ சைகையியல், சைகைத் தொடர் பியல்/ கைவிரல்-சைகைத் தொடர் பியல்  எனக் கூறப்படுகின்றது. செய்கை என்பதுதான் சைகை என்றாயிற்று. எனவே, சுருக்க மாக இதனைச் செய்கை யியல் என்றே கூறலாம்.Dactylology / Pasimology
720.  செய்கோள்  வானிலையியல்Satellite Meteorology
721. கருவி ஒலிப்பியல் Instrumental Phonetics செய்முறை ஒலியியல், பொறி முறை ஒலியியல் எனப் படுகின்றது. கருவிசார் ஒலிப் பியல் என்பதால் கருவி ஒலிப்பியல் – Instrumental Phonetics எனக் குறிக்கப்பெற்றுள்ளது.          Instrumental Phonetics

(தொடரும்)  

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000