ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 641 – 657 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 623 – 640 இன் தொடர்ச்சி) |
641. சமநிலையற்ற வெப்ப இயங்கியல் | Nonequilibrium thermodynamics |
642. சமநிலையியல் ísos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் சமம். | Isostatics |
643. சமய ஒழுக்கவியல் | Religious ethics |
644. சமய விழாவியல் Heortology – விழா இயல், சமய விழாவியல், விழா விளக்கவியல் என மூ வகையாகக் கூறப்படுகிறது. விழாவியலில் சமய விழாவும் அடங்கும். விழா வளைசலியல் (Festive ecology) எனத் தனியாக விழா குறித்த இயல் இருப்பதால் இதனைச் சமயவிழாவியல் என்றே சொல்வோம். சமயவிழாவியல் – Heortology விழா வளைசலியல் – Festive Ecology விழாச் சுற்றுப்புறவியல் என்றால் விழாத என்னும் எதிர்மறைப் பெயரெச்சத்தின் ஈறு கெட்டதாகப் பொருளாகும். ஒற்றெழுத்து மிகாமல் குறிக்கப் பெற்றால்தான் விழவு அஃதாவது விழா எனப் பொருளாகும். | Heortology |
645. சமயக் குமுகவியல் | Sociology Of Religion |
646. சமயப் பகுத்தறிவியல் | Rational Theology |
647. சமையலியல் mágeiros என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் சமையல். | Magirology |
648. சவ்வுஇயல் membrāna என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் சவ்வு. | Membranology |
649. சவ்வூடுபரவல் இயல் | Osphresiology(2) |
650. சாடிங்கர் அலைவிசையியல் சுரோடிங்கர் எனச் சிலர் குறிக்கின்றனர். எருவின் சாடிங்கர் (Erwin Schrödinger) என்னும் ஆத்திரிய அறிவியல் நோபல் விருதாளர் பெயரில் குறிக்கப்பெறும் கண்டுபிடிப்பு. | Schrodinger’s wave mechanics |
651. சார்பிய அசைவியல் | Relativistic Kinematics |
652. சார்பிய மின்னியங்கியல் | Relativistic electrodynamics |
653. சார்பிய விசையியல் | Relativistic mechanics |
654. சார்பியல்சாரா விசையியல் | Nonrelativistic mechanics |
655. சார்பியல்சாராப் பகவுவிசையியல் | Nonrelativistic quantum mechanics |
656. சார்மப் பொருளியல் | Positive Economics |
657. வழியியல் hodós, என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் பாதை/ சாலை/வழி/ பயணம். பாதையியல் எனலாம். ஆனால், மூச்சுப்பாதை, உணவுப்பாதை, சிறுநீர்ப்பாதை முதலிய பாதைகள் தொடர்பாகத் துறைகள் உள்ளமையால் வழி என்பது பயன்படுத்தப்பட்டு வழியியல் எனப்படுகிறது. வழி என்பது ஒற்றைவழிப்பாதை யையும் குறிக்கும். சாலை வழியையும் குறிக்கும். மண்சாலை, கற்சாலை, காரைச் சாலை, கரிநெய்ச்சாலை (தார்ச்சாலை) முதலியவற்றின் அமைப்பு முதலியவற்றையும் குறிக்கும். Odology – சாலையியல் என முதலில் குறித்திருந்தேன். இதுவும் அதுவும் ஒன்று என்பதால் இதில் இணைத்து விட்டேன். | Hodology(2) / Odology |
(தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன், அறிவியல் வகைமைச் சொற்கள் 3000 |
No comments:
Post a Comment