(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 664 – 672 இன் தொடர்ச்சி)
673. சிற்றின்பவியல்
érōs, érōtos என்னும் பழங்கிரேக்கச் சொற்களின் பொருள் காதல். பாலியல் விழைவு, சிற்றின்பம் தொடர்பான வற்றைக் குறிக்கப் பயன் படுத்தப்படுகின்றன. | Erotology |
674. சீனவியல் | Sinology |
675. சுதைப்புல இயல் சுண்ணாம்புத் தளத்தைக் குறிப்பிடும் Karst என்னும் செருமானியச் சொல்லில் இருந்து உருவானது. | Karstology |
676. சுமேரிய இயல் | Sumerology |
677. சுரங்கப் புவியியல் Mining Geology– சுரங்க நிலவியல், கன்னுதற் புவிச்சதிதவியல், கன்னுதற் புவிப்பொதியியல் எனப் படுகிறது கன்னுதல் என்றால் சுரங்கப்பணி, திரளுதல், பழுத்தல் எனப் பொருள்கள். இலங்கையில் சுரங்கப் பணியைக் கன்னுதல் என்றே பயன்படுத்துகின்றனர். இதனடிப்படையில் பின்னிரு சொற்களும் உருவாகியுள்ளன. சரிதவியல் என்பது பிழையாகச் சதிதவியல் என வந்துள்ளது. நிலவியல் என்றே geology என்பதைப் பலரும் குறிக்கின்றனர். நிலவியல் என்றால் நிலவு இயல் என்று பொருள் கொள்ளப்படும். நில இயல் அல்லது நிலத்தியல் நிலயியல் என்பனவே சரியாக இருக்கும். எனினும் புவியியல் என்பது பரவலாகப் பயன் படுத்துவதால் சுரங்கப்புவியியல் – Mining Geology எனலாம். | Mining Geology |
678. சுரங்கப் பொறியியல் | Mining Engineering / Mine Engineering |
679. சுரப்பட்டை இயல் quina என்னும் இசுபானியச் சொல்லின் பொருள் சுரப்பட்டை. இதனை ஒலிபெயர்ப்புச் சொல்லாகப் பலரும் கொய்னா இயல் என்றே குறிப்பிடு கின்றனர். | Quinology |
680. சுரப்பி நீரியல் | Hormonology |
681. சுரப்பி யியல் | Adenology |
682. சுரும்பிசை யியல் – Dronology இசையில் மீண்டும் மீண்டும் நீண்ட வண்டு/சுரும்பு ஓசைகளைப் பயன்படுத்துவது குறித்து ஆராயும் துறை. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
No comments:
Post a Comment