(வெருளி நோய்கள் 1351 -1355 : தொடர்ச்சி)

தேநீர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தேநீர் வெருளி.
தேநீர் அருந்துவதால் செரிமானப் பாதிப்பு ஏற்படும், பித்தம் மிகுந்து நலக்கேடு வரும், உண்பதற்கு ஒரு மணி நேர இடைவெளியின்றி முன்போ பின்போ தேநீர் அருந்துவது உடலுக்குக் கேடு என்பன போன்ற காரணங்களால் தேநீர் குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
sagiou என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தேநீர் எனப் பொருள்.
காண்க: தேநீர் ஆக்க வெருளி(fronsophobia
00

தேநீர்க் குவளை குறித்த வரம்பற்ற பேரச்சம் தேநீர்க் குவளை வெருளி.
இந்தியாவில் தீண்டாமையின் குறியீடாகத் தேநீர்க்குவளை உள்ளது. எனவே, ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தேநீர்க் குவளை வெருளி ஏற்படுகிறது.
குவளை வெருளி(cuppaphobia) உள்ளவர்களுக்குத் தேநீர்க் குவளை வெருளி வரும வாய்ப்பு உள்ளது.
Flitzani என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் குவளை பொருள்.
sagiou என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தேநீர் எனப் பொருள்.
00

தேநீர்ப் பை குறித்த வரம்பற்ற பேரச்சம் தேநீர்ப் பை வெருளி.
காண்க: தேநீர் ஆக்க வெருளி(fronsophobia), தேநீர் வெருளி(Sagiouphobia)
00

தேரைஅல்லது தேரையினம் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் தேரை வெருளி
தேரை(10) என்னும் உயிரினமும் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
bufo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் தேரை.
00

தேர்வு, சோதனை, கூறாய்வு முதலானபற்றிய அளவுகடந்த பேரச்சம் தேர்வு வெருளி.
கூறாய்வு வெருளி என முதலில் குறிப்பிட்டிருந்தேன். தேர்வு வெருளி என இப்பொழுது குறித்துள்ளேன்.
தேர்வு வெருளி தன்னம்பிக்கையைத் தகர்க்கிறது. சில நேரம் தற்கொலைக்குத் தூண்டுதலாகவும் அமைகிறது.
தேர்வில் வெற்றியை இலக்காகக் கொண்டு முயல வேண்டும். அதே நேரம், தோல்வி வந்தாலும் தாங்கும் மனப்பக்குவம் வேண்டும். எனினும் பிறர் கேலிக்கு ஆளாக நேரிடும், குடும்பத்தினர், ஆசிரியர் ஆகியோரின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும், பிறர் ஏளனமாக எண்ணுவர் என்பன போன்ற கவலைகளாலும் அச்சத்தாலும் தோல்வியை எதிர்கொள்ளும் மனஉறுதியை இழந்து விடுகின்றனர். இதனால் தோல்வி வெருளி வருகிறது.
00