(வெருளி நோய்கள் 1466 -1470: தொடர்ச்சி)

  1. நிலவறை வெருளி-Fistulaphobia/Botophobia/Troglophobia/ Bathysiderodromo phobia தரைப்பகுதிக்குக் கீழ் அமைந்துள்ள நிலவறை, நில நீள் பாதையில் செல்லும் ஊர்திகள் மீதான அளவுகடந்த பேரச்சம் நிலவறை வெருளி.
  2. அடக்கம் செய்வதற்கு முன்னர் இறந்தவர்கள் உடல்களை நிலவறையில் வைக்கும் வழக்கத்தாலும நிலவறைபற்றிய மிகுந்த அச்சம் கொள்வோர் உள்ளனர்.
    சுற்றடைப்பு வெருளி வேறு, இது வேறு. எனினும் சுற்றடைப்பு வெருளி உள்ளவர்களுக்கு நிலவறை வெருளி வர வாய்ப்புள்ளது.
    Fistula என்றால் இலத்தீனில் நிலத்தடி இருப்புப்பாதை எனவும் பொருள்.
    Boto என்றால் ஆழமான/தாழ்வான எனப் பொருள்.
    Troglo என்றால் குகை/சுரங்கை/தரை அடி அறை எனப் பொருள்.
    bathy + side + rodromo = ஆழத்தில் + கல் அல்லது இரும்பில் அமைந்த + வழித்தடம். எனப்பொருள். எனவே, நிலத்தடிப் பாதைகளைக் குறிக்கிறது. நிலத்தடியில் செல்லும் பெருந்தொடரி முதலானவைமீதான பேரச்சமும் இதில் அடங்கும்.
    00

மாற்றுணா/நிலாச்சோறு (potluck) விருந்து தொடர்பான அளவு கடந்த பேரச்சம் நிலாச்சோறு வெருளி.
தனித்தனியே உணவுவகைகளைக் கொண்டுவந்து சேர்த்துப் பகிர்ந்து மற்றவர் உணவை உண்ணுதல் மாற்றுணா விருந்து எனப்படும். பெரும்பாலும் சோறு முதலான மைய உணவு பொதுவாகவும் துணை உணவுகள் பங்கு கொள்வோராலும் அளிக்கப்படுகின்றன.
மொய்விருந்து என்னும் பொருள் கொண்ட potlatch என்னும் (வட அமெரிக்க நாட்டின் மரபு மக்களின்) விருந்து முறையில் இருந்து potluck வந்ததாகச் சிலர் கூறுவர். 16 ஆம் நூற்றாண்டில் தாமசு நசே(Thomas Nashe) என்னும் ஆங்கிலப் படைப்பாளர் எதிர்பாராத அல்லது அழையாத விருந்தாளி வரும்பொழுது வீட்டில் உணவு இருப்பதைப் பொறுத்து அவருக்கான சாப்பாடு அமைவதைக் குறிப்பதற்காகப் பானையின் நற்பேறு என்னும் பொருளில் பானைப்பேறு / potluck எனக் குறிப்பிட்டுள்ளாராம். இருப்பினும் 1930இல் கூட்டுப் பகிர்வு முறையில் அளிக்கப்படும் விருந்து ஆகிய பகிருணா இவ்வாறு potluck என அழைக்கப்பட்டதாம். கூட்டுணா, பகிருணா, மாற்றுணா என எப்படியும் இந்தக் ‘கொடு-பகிர்’ உணவு முறையைச் சொல்லலாம். எனினும் முதலிரண்டும் வேறு நேர்வுகளிலும் பயன்படுத்தப்படுவதால் மாற்றுணா எனலாம்.
தமிழ் நாட்டில் சில கோயில்களில் ஒவ்வொருவரும் அவரவர் வாய்ப்பு நலனுக்கேற்பக் கடவுளுக்குப் படையல் கொண்டுவந்து தான் கொண்டுவந்ததை விட்டு விட்டு அடுத்தவர் கொண்டு வந்ததை எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. செல்வர் சிறப்பான உணவு வகை கொண்டு வந்திருந்தாலும் அடுத்தவர் எளிய உணவு கொண்டு வந்திருந்தால் அதைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் இப்போது உணவு வகைகளுக்கு மாற்றாகக் கனி வகைகளைக் கொண்டு வரும் பழக்கம் உள்ளது. என்றாலும் இப்பொழுது அருகிக் காணப்படும் வழிபாட்டு முறையாக மாறிவிட்டது.
குடியிருப்புப் பகுதிகளில் அல்லது அலுவலகங்களில் இவ்வாறு ஒவ்வொருவர் ஒவ்வோர் உணவு வகையைக் கொணர்ந்து பொதுவில் வைத்து அனைவரும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் இப்பொழுதும் உள்ளது.
சித்திரை முழு நிலவு நாளன்று நிலாச்சோறு என்று அவரவர் தேங்காய்ச் சோறு, எலுமிச்சைச் சோறு, புளிச்சோறு முதலானபிசைந்த உணவு வகைகளைக் கொண்டு வந்து கூட்டாகப்பகிர்ந்து உண்ணும் பழக்கமும் இப்பொழுது மறைந்து வருகிறது. தமிழ் மரபின் படியான நிலாச்சோறு இங்கே கையாளப்பட்டுள்ளது.
00

தர நிலையில் இ(சி) பெறுவது குறித்த அச்சம் நிலை இ(c ) வெருளி.
Cee என்பது ஆங்கில எழுத்து C யைக் குறிப்பது. இங்கே நிலை C யைக் குறிக்கிறது.
தேர்ச்சியிலோ தரப்பாட்டிலோ முதல் நிலை பெறாமல் மூன்றாம் நிலை பெறுவதால் ஏற்படும் பெருங்கவலையையும் இதன் விளைவு குறித்த பகுத்தறிவிற்குப் பொருந்தா அச்சத்தையும் குறிக்கிறது.
00

தேர்ச்சித் தரத்தில் நிலை ஈ(D grade) பெறுவது குறித்த பேரச்சம் நிலை ஈ(d) வெருளி.
Deephobia வில் உள்ள Dee என்பது ஆங்கில எழுத்து D-யைக் குறிப்பது.
இந்நிலை சராசரிக்குக் கீழான நிலையை / கீழ்ப்பட்ட தேர்ச்சி நிலையைக் குறிப்பது. அடுத்து தோல்வி(எப்) நிலை வந்து விடுமோ என்ற பெருங்கவலைக்கும் பேரச்சத்திற்கும் ஆளாகி நிலை ஈ(D) வெருளி வந்து விடுகிறது. இதனை நான்காம் நிலை அல்லது கீழ்நிலை என்றும் குறிக்கலாம்.
00