04 May 2026
(வெருளி நோய்கள் 1356 -1360 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1361 -1365
- தேவதாரு வெருளி – Pefkophobia
தேவதாரு(pine tree) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தேவதாரு வெருளி.
மர வெருளி(Dendrophobia) உள்ளவர்களுக்குத் தேவதாரு வெருளி வர வாய்ப்பு உள்ளது.
00
- தேவதை வெருளி – Angelophobia
தேவதைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தேவதை வெருளி.
மேலுலக வெருளி(Ouranophobia/Uranophobia), வானூர்தி வெருளி (Pteromerhanophobia/Feijiphobia) பறத்தல் வெருளி(aviatophobia / aviophobia / aerophobia) ஒளி வெருளி(photophobia) உள்ளவர்களுக்குத் தேவதை வெருளி வர வாய்ப்புள்ளது.
00
- தேவாலய வெருளி-Ecclesiophobia
கிறித்துவத் திருக்கோயில் தொடர்பான தேவையற்ற மிகையான பேரச்சம் தேவாலய வெருளி.
இதன் காரணம், திருக்கோயில் கட்டம் மீதான அச்சமாகவும் இருக்கலாம். திருக்கோயில் நடைமுறையாகவும் இருக்கலாம்.
ecclesi என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தேவாலயம்.
00
- தேவு தாத்தா வெருளி – Grandpadavephobia
புனைவுரு தேவு தாத்தா(Grandpadave) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தேவு தாத்தா வெருளி.
தொலைக்காட்சித் தொடரான ஆர்தரில் இடம் பெறும் புனைவுரு பாத்திரம் தேவு தாத்தா. கதை நிகழ்வுகளை மெய்யென நம்பி, தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாகி வெருளி நோய்க்கு உள்ளாகின்றனர்.
00
- தேள் வெருளி-Skorpiophobia தேள்மீதான தேவையற்ற பேரச்சம் தேள் வெருளி.
எல்லாத் தேள்களின் நச்சுத் தன்மையும் மனிதரைக் கொல்லக் கூடியது அல்ல. எனினும் தேள்கடியால் மனிதர்கள் இறந்த செய்திகளை அறிந்தவர்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் தேள் இருப்பதாக அறிந்தாலும் அல்லது வேறு பகுதியில் தேள் இருப்பதாக அறிந்தாலும் தேவையற்ற அளவுகடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
காண்க: சிலந்தி வெருளி(Arachnophobia)
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5
No comments:
Post a Comment