28 May 2026
வெருளி நோய்கள் 1481-1485
- நிறுத்திட வெருளி – Tingchechangphobia நிறுத்திடம் (parking lot/car park/car lot) குறித்த வரம்பற்ற பேரச்சம் நிறுத்திட வெருளி.
சுவர் சூழ்ந்த அறையில் அல்லாமல் இரு புறம் திறந்துள்ள நிறுத்திடம்.
காண்க நிறுத்தக வெருளி – Tingchechekuphobia
1482. நிற்பு வெருளி-Stasibasiphobia/ Stasiphobia/ Stasophobia
நிற்றல் குறித்த அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் நிற்பு வெருளி.
நிற்பு வெருளியில் நடப்பதையும் நடை வெருளியில் நிற்பதையும் சேர்த்தே கூறுகின்றனர்.
நிற்க இயலாமல் போகும்பொழுது பாதுகாப்பின்மை குறித்த அச்சம் உருவாகி மருட்சியை உண்டாக்குகிறது. நிற்க இயலாமல் போகும் பொழுது கீழே விழுந்து அடிபடலாம், ஊர்திகளில் சிக்கலாம், மரணமடையலாம் என்றெல்லாம் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு பேரச்சம் கொள்வர்.இயலாமைக்கு மருந்து கவலையல்ல. அந்த இயலாமையைப் போக்குவதே. எனவே இது நடை வெருளி(Ambulophobia) போன்றதே. வீழ்பு வெருளி(Basophobia/Basiphobia)யுடனும் தொடர்பு உடையது.
stasi என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நிற்றல், bas என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அடிஎடுத்து வைத்தல்.
00
- நினைவிழப்பு வெருளி – Amnesiphobia
நினைவிழப்பு அல்லது மறதி குறித்த அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் நினைவு வெருளி.
கிரேக்கத்தில் a என்பது இல்லை என்பதையும் mnes நினைவையும் குறிக்கின்றன. எனவே இணைந்து நினைவின்மையைக் குறிக்கின்றன.
00
- நினைவுவெருளி-Mnemophobia
நினைவுகளால் ஏற்படும் தேவை யற்ற மிகையான பேரச்சம் நினைவு வெருளி.
குறிப்பாகக் கடந்தகாலக் கெட்ட நினைவுகளால் வருத்திக்கொண்டு அளவு கடந்து பேரச்சம் கொள்வர். கடந்தகால நல்ல நினைவுகளை மறந்தும் போவர். தீய நினைவுகள் வாட்டுவதால் மனக்குழப்பம் ஏற்பட்டு அல்லலுறுவர்.
நினைவு இழப்பது நினைவிழப்பு ஆகிறது. நினைவிழப்பு வந்து விடுமோ என்றும், சிறிய நினைவிழப்பையும் பெரிதாக எண்ணியும், இயல்பிற்கு மீறி ஏற்படும் பேரச்சம்
mnem என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் நினைவு.
00
- நினைவூட்டு வெருளி – Reminderphobia
நினைவூட்டு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நினைவூட்டு வெருளி.
நினைவூட்டு மணி அடித்தாலோ செய்தி வந்தாலோ அறிவிக்கை வந்தாலோ பதற்றத்திற்கு உள்ளாவோர் உள்ளனர்.
நினைவூட்டு என்பது குறித்த செயலைக் குறித்த காலத்தில் செய்ய வேண்டும் என நினைவூட்டும் நற்செயலே. ஆனால், நினைவூட்டு வருவதற்கு முன்னரே அது குறித்து எண்ணித் தேவையற்ற கவலைகொள்வோர் உள்ளனர்.
சிலருக்கு நினைவூட்ட வேண்டும் என்று தேவையற்ற பேரச்சம் வருவதுண்டு.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5
No comments:
Post a Comment