07 May 2026
(வெருளி நோய்கள் 1371 -1375: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1376 -1380
- தொயாட்டா வெருளி – Toyotaphobia
தொயாட்டா வண்டிகள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தொயாட்டா வெருளி.
ஊர்தி வெருளி(ochophobia) உள்ளவர்களுக்கு வர வாய்ப்புள்ளது.
00
- தொப்பி வெருளி – Kapelaphobia
தொப்பி குறித்த வரம்பற்ற பேரச்சம் தொப்பி வெருளி.
Kapela என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தொப்பிகள் எனப் பொருள்.
00
- தொலை இயக்கி வெருளி – Tilecheiristiriophobia
தொலை இயக்கி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தொலை இயக்கி வெருளி.
தொலைக்காட்சி, வானொலி, குளிரி, வாயில், ஊர்தி எனப் பலவற்றை இயக்க அல்லது திறக்க அன்றாடம் பயன்படுத்துவது தொலை இயக்கியாகும். தொலை இயக்கியைச் சரியாகப்பயன்படுத்தாமல் அல்லது அதில் பழுது இருந்தால் தொலைக்காட்சி முதலியவற்றில் பழுது ஏற்படலாம் எனப் பெருங்கவலை கொள்வர்.
Tile + cheiristirio என்பதற்குக் கிரேக்கத்தில் தொலை + இயக்கி எனப் பொருள்.
00
- தொலை நோக்கி வெருளி – Telescopophobia
தொலை நோக்கி குறித்த வரம்பற்ற பேரச்சம் தொலை நோக்கி வெருளி.
வானம் குறித்தும் வானத்திலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள், உலவிகள், உழலிகள் மீது அச்சம் உள்ளவர்களுக்குத் தொலைநோக்கி மீதும் காரணமற்ற பேரச்சம் வர வாய்ப்புள்ளது.
00
- தொலைக்காட்சி நிகழ்ச்சி வெருளி – TVshowphobia
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தொலைக்காட்சி நிகழ்ச்சி வெருளி.
தொலைக்காட்சியில் வழக்கமாக ஒளிபரப்பும் தொடர்கள், திரைப்படங்கள் தவிர, நாட்டியம், இசை, நகைச்சுவை, விளையாட்டு, சந்திப்பு, போட்டி முதலான பல தொடர் நிகழ்ச்சிகளும் ஒளி பரப்புகின்றனர். இவை இளந் தலைமுறையினரைக் கெடுக்கின்றன, பொய்யான செய்திகளைப் பரப்புகின்றன, குடும்பத்தினருடன் பார்க்க இயலாக் காட்சிகளை ஒளிபரப்புகின்றன என்ற பல காரணங்களுக்காகத் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
சிலருக்குக் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள் அல்லது அலைவரிசைகள் மீது மட்டும் அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் இருக்கும்.
காண்க: தொலைக்காட்சி வெருளி(Proscriptiophobia / Shijiphobia / Televisiophobia)
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5
No comments:
Post a Comment