(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1040 – 1043 இன் தொடர்ச்சி)
1044. நுண்ணுயிரி நுட்பியல் | Microbial technology |
1045. நுண்ணூசி ஈர்ப்பு உயிர்மி யியல் | Fine needle aspiration cytology |
1046. இயலறிவு உளவியல் folk என்றால் நாட்டுப்புறம், நாட்டார், மக்கள், மக்களினம் எனப் பொருள்கள். இங்கே மக்களின் இயல்பான அறிவைக் குறிக்கிறது. எனவேதான் இவ்வியலின் மற்றொரு பெயர் Commonsense Psychology என்பதாகும். பகுத்தறிவு உளவியல் என்று சிலர் குறிப்பிட்டாலும் பொதுவாக இயலறிவு உளவியல் என்றே குறிப்பது சிறப்பாகும். | Folk psychology / Commonsense Psychology |
1047. நுண்பயிரியல் | Microphytology |
1048. மெய்ம்மி நோயியல் | Histo pathology |
1049. நுரையீரலியல் pulmō என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நுரையீரல். | Pulmonology |
1050. நுரையீரல் இயக்கவியல் | Pulmonary Mechanics |
1051. நூல் இயல் | Bibliology |
1052. நெஞ்சக வியல் kardía என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நெஞ்சு. | Cardiology |
1053. நெடுங்கணக்கியல் ஒரு மொழியில் அம்மொழி முறைக்கேற்ப வரிசைப்பட அமையும் எழுத்துகளின் வரிசையே நெடுங்கணக்கு எனப்படும். இதனை அகர வரிசை என்றும் கூறுவர். தமிழில் அடிப்படை எழுத்துகளான உயிரெழுத்து (12), மெய்யெழுத்து (18), ஆய்த எழுத்து (1) ஆகிய மட்டும் குறுங்கணக்கு என அழைக்கப் பெறும். இத்தொகுப்பில் உயிர் மெய் எழுத்தும்(216) சேரும் பொழுது நெடுங்கணக்கு எனப் பெறும். | Alphabetology |
1054. நெடுஞ்சாலைப் பொறியியல் | Highway Engineering |
1055. நெறிமுறை யியல் aretḗ என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் அறநெறி/ நெறிமுறை. | Aretaics |
1056. நேரியத் திணையியல் | Linear Topology |
1057. நேரியல்சாரா ஒளியியல் | Nonlinear optics |
1058. நேரியல்சாரா ஒலியியல் | Nonlinear acoustics |
1059. நேர்இறக்கையின இயல் | Orthopterology |
1060. நேர்கோட்டு ஒளியியல் காண்க: நேர்கோட்டு ஒலியியல் | Ray optics |
1061. நேர்கோட்டு ஒலியியல் / வடிவ ஒலியியல் Ray – கதிர் என்னும் அடிப்படையில் கதிர் ஒலியியல் என்றும் கூறுகின்றனர். ஆனால் அந்நேர் பொருளை விட நேர்கோட்டு ஒலியியல் என்பதுதான் சரியான விளக்கமாக அமையும். எனவேதான் வடிவ ஒலியியல் என்றும் கூறப்படுகிறது. | Ray acoustics / Geometrical acoustics |
(தொடரும்)
No comments:
Post a Comment