(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  914 – 927   இன் தொடர்ச்சி)

928. நடுநிலை நுட்பியல்

Neutral technology

929. நடைமேடைப்பொறியியல்

Pavement Engineering

930. நடையியல்

Phrenology(2)

931. நத்தையினவியல்

Malacology(1)

932. நம்பிக்கையியல்

pistis என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நம்பிக்கை.

Pistology

933. நரம்பிய மரபியல்

Neuroethology

934. நரம்பியக் கதிரியியல்

Neuroradiology

935. நரம்பியங்கியல்

Neurophysiology

936. நரம்பியல்

Neurology

937. நரம்பு உயிரிஇயல்

Neurobiology

938. நரம்பு உளவியல்

Neuropsychology

939. நரம்பு நிணநீரியல்

(endocrinology –அகச்சுரப்பி யியல், நாளமில்சுரப்பி யியல், நிணநீரியல்  என அழைக்கப் பெறுகின்றது. சுருக்கமான நிணநீரியல் என்பதே இங்கே பயன்படுத்தப் பெற்றுள்ளது.)

Neuroendocrinology

940. நரம்பு நோயியல்        

Neuropathology

941. நரம்பு மருந்தியல்

Neuropharmacology

நல இயல்

hygiène என்னும் ஃபிரெஞ்சுச் சொல்லின் பொருள்  நலம் பேணல்.

Hygiology

942. நல இயற்பியல்

Health physics

943. நல உளவியல்

Healthy Psychology

944. நலிவியல்

Astheniology 

945. நலிவு பரப்புருவியல்

 

காண்க : வலிவு பரப்புருவியல்

Weak Topology

946. மணவுணர்வியல்

Olfactology–மோப்பவியல், மணவுணர்வியல், மோப்பவுணர்வறிவியல், மோப்ப இயல், நறுமண இயல், மண ஆய்வியல், மணவியல்   என்கின்றனர். நறுமண இயல், மண ஆய்வியல், மணவியல் என்னும் பொழுது நறுமண வகைகளைப் பற்றிய இயல் எனக் கருதக் கூடும். மணவியல் என்றால் திருமணம்பற்றியது என்றுகூட எண்ணத் தோன்றலாம்.  இத்துறை, மணங்களை உணர்வது தொடர்பான அறிவியல். எனவே, மணவுணர்வியல் பொருத்த மானதாக உள்ளது.

மோப்பம் தொடர்பானவை சரிதான். Olfactus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் முகர்தல். இது முகரப்படும் மணத்தையும் பின்னர்க் குறித்தது.

ஆனால், மோப்பம் பிடித்துத் துப்பு துலக்குவது தனித்துறை. எனவே அது தனியாகக் குறிக்கப்பட்டுள்ளது.

எனவே,

மணவுணர்வியல்– Olfactology(1) 

மோப்பவியல் – Olfactology (2) எனலாம்.

Olfactology(1)/Osphresiology(1)

947. மீ உளவியல்   

Metapsychology  – ஊக உளவியல், உள அதீதம், இயல்கடந்த உளவியல், நனவுமன ஆய்வியல்,  செயல்முறையினின்று விலகிய உளவியல் எனப் படுகின்றது. உள அதீதம் என்பது இலங்கைச் சொல்லாட்சி. அதீதம் என்றால் கடந்தது, எட்டாதது எனப் பொருள்கள்.

செயல்முறை கடந்த உளவியல் என்பதால்

மீ உளவியல்    – Metapsychology

Metapsychology

(தொடரும்

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000