(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1044 – 1061 இன் தொடர்ச்சி)
1062. நேர்நிலை ஒப்பமைவியல் | Simplical homology |
1063. நேர்ம இனமேம்பாட்டியல் | Positive Eugenics |
1064. நொதி நுட்பியல் | Enzyme technology / Fermentation technology |
1065. நொதிப் பொறியியல் | Enzyme Engineering |
1066. நொதிவினையியல் | Enzyme kinetics |
1067. நொதி யியல் நொதித்தலியல், நொதிப்பியல், நொதிப்பியியல்; நொதியியல், நொதியச் சக்தியியல், நுரைக்கச்செய்தல் சாசுத்திரம், ஊக்கிப்புரதவியல் எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. சுருக்கமான நொதியியல் – Zymology / Enzymology என்பது இங்கே ஏற்கப்பட்டுள்ளது. Fernent என்றால் நொதிப்பு அல்லது புளிப்பம் எனப்பொருள். எனவே, Fermentology என்பதும் நொதியியல் எனப்படுகிறது. | Zymology / Enzymology / Fermentology |
1068. நோயறி புள்ளியியல் காண்க: நோயறிதலியல்- Diagnostics | Diagnostic statistics |
1069. நோயறிதலியல் diagnosis என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கும் பிரெஞ்சுச் சொல்லிற்கும் நோயியல்பு எனப் பொருள். நோயியல்பை அறியும் இயல் நோயறிதலியல். | Diagnostics |
1070. நோயியல் | Pathology |
1071. நோய் உடம்பியியல் | Patho Physiology |
1072. நோய்க்காரண இயல் பழங்கிரேக்கத்தில் nosos = நோய், + aitia = காரணம் | Nosetiology |
1073. நோய்க் குறியியல் | Symptomology/ Symptomatology |
1074. நோய்சார் பொருளியல் | Economics of disease |
1075. நோய்த் தொற்றியல் | Disease epidemiology / Infectiology |
1076. நோய்த் தீர்வியல் ákos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் தீர்வு/ மருந்து. | Acology |
1077. நோய் நீக்கியல் | Aceology |
1078. நோய்மி எதிர்ப்பியல் | Opsonology |
1079. நோய்ம மரபியல் | Bacterial genetics |
1080. நோய்ம யியல் பழங்கிரேக்கத்தில் bacteria என்றால் குச்சி எனப் பொருள். குச்சி வடிவத்தில் உள்ள இதனைக் குச்சியம் என்கின்றனர். நுண்ணிய அளவில் உள்ளதால் நுண்மி என்றும் நுண்ணிய உயிரி என்றும் சொல்வோர் உள்ளனர். இதற்கிணங்க நுண்மியியல் எனலாம். நோய்மிக்குக் காரணமான இதனை நோய்மம் எனக் குறிப்பிட்டு நோய்ம யியல் என்றும் சொல்லலாம். | Bacteriology |
(தொடரும்)
No comments:
Post a Comment