(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1225 – 1240 இன் தொடர்ச்சி) |
1241. பார்ப்பியல் neos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்கள் இளமை, புதிய. Neossos என்பது இளம்பறவை எனப் பொருள். “மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே” என்னும் தொல்காப்பியப் பொருளதிகார நூற்பா(548) மூலம் தொல்காப்பியர் பறவை களின் இளமைப் பெயராகப் பார்ப்பு எனக் குறிப்பிடுகிறார். எனவே, பார்ப்பியல் எனலாம். | Neossology |
1242. பார்வல் வானிலையியல் தொலைக்கண்டுணர்வி(Radio Direction And Ranging-RADAR), வானொலி அலைகள் அல்லது நுண் அலைகளைப் பயன்படுத்தித் தொலைவில் உள்ள போர் விமானங்கள், கப்பல்கள் முதலான நடமாட்டத்தைக் கண்டுணரும் கருவியமைப்பாகும். பருந்துகளும் பறந்து செல்ல இயலா உயரத்தில் இருந்து தொலைவில் உள்ள எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்டுணர்ந்துள்ளனர் தமிழர்கள். இதனைப் பார்வல் என்றனர். ‘பார்வல்’ என்றால் தொலை உணர்வுப் பார்வை வல்லமை மிக்க அமைப்பு. எனவே. ‘இராடார்’ என்பதற்கான ஒற்றைச் சொல்லாக இதனைக் கையாளலாம். இன்றைய அறிவியல் நுட்பக் கருவி செய்வதை அன்றைக்கு ஆட்கள் செய்துள்ளனர். எனினும் அதற்குத் துணைக்கருவிகள் இருந்திருக்க வேண்டும். அவை பற்றிய விவரம் தெரியவில்லை. | Radar Meteorology |
1243. பார்வையியல் | Optics/Optology |
1244. பாலங்களியல் | Gephyrology |
1245. பாலணுவியல் | Gametology |
1246. பாலியல் | Sexology |
1247. பாலினக் கருத்தியல் | Gender ideology |
1248. பாலூட்டிஇயல்/ பாலூட்டியல் | Mammalogy / Mazology |
1249. பாலூட்டியின உயிரியல் | Therology |
1250. பாலையியல் | Eremology |
1251. பால்கனிய அரசியல் | Balkan politics |
1252. பால்நோயியல் கலவிமேகவியல், பால்வினை நோய் இயல், பால்வினை மருத்துவம், மேகநோய் ஆய்வு நூல், மேகநோய்ச் சிறப்பு மருத்துவத் துறை எனப்படுகின்றது. ஆணின் பிறப்புறுப்பில் புண்களை உண்டாக்கும் ஒரு பால்வினை நோய் குறித்த அறிவியல். இவற்றுள் தீய நீரால் உண்டாம் நோய்வகையைக் குறிக்கும் மேகநோய். (மேகம் + நோய்) என்பதும் தமிழ்ச்சொல்லே. மேகத்திலிருந்து நீர் வெளிப்படுவதுபோல் இந்நோயினால் ஏற்படும் புண்ணிலிருந்து நீர் வெளிப்படுவதால் மேகநோய் என்பர். பால்வழி பரவும் நோய் / sexually transmitted disease (பா.ப. நோ./S.T.D.) எனவும் இதனைக் குறிப்பர். (பால் என்பது பாலுறவைக் குறிக்கிறது.) கலவியால் ஏற்படுவதால் கலவி மேகவியல் எனக் குறிக்கின்றனர். எனினும் பால்வினை நோய்களைப் பொதுவாகக் குறிப்பிடும் வகையில் பால்வினைநோயியல் > பால்நோயியல் – Venereology எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது. | Venerology/ Venereology |
(தொடரும்)
No comments:
Post a Comment