அகரமுதல
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1121 – 1141 இன் தொடர்ச்சி) |
1142. பண்டைய மீனியல் | Paleoichthylogy |
1143. பண்டைய வானிலையியல் | Paleometeorology |
1144. பண்டைய விலங்கியல் | Palaeozoology/Paleozoology |
1145. பண்டைய நோயியல் | Paleopathology |
1146. பண்பாட்டியல் | Culturology |
1147. பண்பாட்டு இயங்கியல் | Cultural Dynamics |
1148. பண்பாட்டு மானிடவியல் | Cultural anthropology |
1149. பண்பாட்டுக் குமுகவியல் | Sociology of culture |
1150. பண்பாட்டு வளைசலியல் | Cultural ecology |
1151. பண்பார் உயிரியல் | Ctetology |
1152. பதனம் காண்க: Process Dynamics – வனைமுறை இயங்கியல் | Processing(2) (மீனியல்) |
1153. பதின் பாரம் | Metric ton |
1154. பத்தியவியல் | Sitology |
1155. பந்தனவியல் இணைத்தல், கட்டுதல் தொடர்பான அறிவியல். பந்தனம் என்றால் கட்டுதல் எனப் பொருள். இணைத்தலியல் என்றாலோ பிணைத்தலியல் என்றாலோ முறையே Topology, Connectology என்பனவற்றைக் குறிக்கும். எனவே, பந்தனவியல் எனக் குறித்துள்ளேன். Zygology-சினைமுட்டையியல் என்றும் குறித்திருந்தேன். சரி பார்க்கும் பொழுது இதற்கான மூலக்கோப்பு கிடைக்கவில்லை. உறுதிப்படுத்த இயலாமையால் நீக்கிவிட்டேன். | Zygology |
(தொடரும்)
No comments:
Post a Comment