(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1424-1433 இன் தொடர்ச்சி)
1434. மர வளைசலியல் Dendroecology – மரவரை சுற்றுப்புறவியல் எனக் குறிக்கப்படுகிறது. வரலாற்று சுற்றுச்சூழல் செயல்முறைகளை பகுப்பாய்வு செய்ய மரக்காலவியலைப் பயன்படுத்தும் அறிவியல் என்றும் கடந்தகால, நிகழ்கால வனச்சூழல் மாறுபாடுகளை மதிப்பிடுவது என்றும் இவ்வறிவியல் குறித்து விளக்கு கின்றனர். மரத்தின் அடிப் படையிலான புறவியல் என்பதாலும் ecology / வளைசலியல் என நாம் வரையறுத்துள்ளதாலும், மர வளைசலியல் – Dendroecology எனலாம். | Dendroecology |
1435. மரவரைத் தொல்லியல் மரவரை என்பது மரத்தில் உள்ள காலங்காட்டும் வளையத்தைக் குறிப்பது. | Dendroarcheology |
1436. மரவளைய நீரியல் | Dendrohydrology |
1437. மரவியல் | Dendrology/ Treeology |
1438. மரியாளியல்/ பெண்தெய்வஇயல் முழுமை பகுதித் தொடர்பியல் என்றும் சில அகராதிகளில் குறிக்கப் பெறுகின்றது. முழுமையும் பகுதியுமாக முரண்பாடான சொற்களை இணைத்துள்ள இவ்விளக்கம் சரியில்லை. | Mariology |
1439. மருத்துவ அளவீட்டியல் | Posology |
1440. மருத்துவஆய்வக நுட்பியல் | Medical laboratory technology |
1441. மருத்துவ ஒழுக்கவியல் | Deontology(3) |
1442. மருத்துவ நுண்ணுயிரியல் | Medical microbiology |
1443. மருத்துவ மின்னணுவியல் | Medical Electronics |
1444. மருத்துவ, மணத்தாவர உயிரிய நுட்பியல் | Biotechnology of medical and aromatic plants |
1445. மருத்துவக் குமுகவியல் | Medical sociology |
1446. மருத்துவப்படிம இயல் | Imageology |
1447. மருத்துவப்பூச்சி யியல் | Medical Entomology |
1448. மருத்துவ வேதிப் பொறியியல் | Medical Chemical Engineering |
1449. மருந்தளவியல் | Dosology |
1450. மருந்தாக்கயியல் | Pharmaceutics |
1451. மருந்தியல் phármakon என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மருந்து. | Pharmacology/ Latrology |
(தொடரும்)
No comments:
Post a Comment