(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1330 – 1340 இன் தொடர்ச்சி) |
1341. பெரும்பாய்வியல் | Macrorheology |
1342. பெரு வாழ்வியல் | Macrobiotics |
1343. பெருங்கழுத்திஇயல் | Nessology |
1344. பெருமூளையியல் | Cerebrology |
1345. பெரும்பரப்புப் புவியியல் | Areal Geology |
1346. பேச்சிழப்பியல் aphasie என்னும் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் பேச்சற்ற. | Aphasiology |
1347. பேச்சுக்குறையியல் laleein என்னும் பண்டைய கிரேக்கச் சொல்லின் பொருள் பேச்சு. ஆதலின் பேச்சு நோயியல் என்கின்றனர். இத்துறை பேச்சுக் கோளாறுகளையும் குறை பாடுகளையும் ஆராயும் மருத்துவத்துறை. எனவே, பேச்சுக்குறைஇயல்>பேச்சுக் குறையியல் எனக் குறித்துள்ளோம். சிலர் குறிப்பதுபோல், பேச்சியல் என்றால் சொற்பொழிவு குறித்த துறை எனத் தவறாகக் கருதப்படும் என்பதால் இவ்வாறு பயன்படுத்துவதே சரியாக அமையும். | Lalopathology |
1348. பேயியல் | Ghostology / Demonology |
1349. பேரண்ட இயல் | Macrocosmology |
1350. பேரண்ட இயற்பியல் | Macroscopic physics |
1351. பேரளவுக் குமுகவியல் | Macro sociology |
1352. பேராயிரம் | Million |
1353. பெரு வளைசலியல் | Macroecology |
1354. பேரளவுப் பொருளியல் | Macro Economics |
1355. பேரொலியியல் Macrosonics– பேரொலியியல், பெரு ஓசையியல், பெரு வீச்சு ஓசையியல், பரு ஒலியியல் என ஒத்த பொருளில் கூறப் படுகின்றது. Macro என்பதைப் பெரு என்றே குறிப்பதாலும் உயிரெழுத்திற்கு முன்னர் பெரு, பேர் என மாறுவதாலும் ஆய்வு ஒலியைப் பற்றியதே என்ப தாலும் பேரொலியியல் – Macrosonics எனலாம். | Macrosonics |
(தொடரும்)
No comments:
Post a Comment