(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1452 – 1464 இன் தொடர்ச்சி) |
1465. மறையிடர் பொருளியல் Risk – ஆபத்து,ஆபத்து காரணி, இழப்பு, இடர், அபாயம், அபாய நேர்வு, கெடு, கேடு, இன்னல், இடையூறு, இக்கு எனப் பல வகையாகக் குறிக்கப் பெறுகிறது. அதில் ஒரு இக்கன்னா இருக்கிறது எனப் பேச்சு வழக்கில் இயல்பாக உள்ள ‘இக்கு’ என்பதை நான் முதலில் பயன்படுத்தினேன். இதே சிந்தனை கொண்ட மற்றொருவரும் இச்சொல்லைப் பயன்படுத்தி வந்தார். இருப்பினும் இக்கு என்பதைக் கலைச்சொல் வடிவமாகப் பெரும்பான்மையர் கருதவில்லை. எனவே, வெளிப் படையாகத் தெரியாமல் எதிர்நோக்கப்படும் இடரை மறை இடர் என ஒருவர் குறிப்பிட்டதைப் பார்த்தேன். மறைஇடர் வரலாம், வராமலும் போகலாம். இச்சொல்லையே ஏற்றதாகக் கருதி இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இடர்ப்பு என்ற ஒற்றைச் சொல்லையும் நான் முன்னர்ப் பயன்படுத்தியுள்ளேன். | Risk bearing Economics |
1466. மறைவளி மறைவளி (Krypton) என்பது மறை (Kr) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு வேதியியல் தனிமம் ஆகும். | Krypton |
1467. மன உடம்பியியல் | Psychophysiology |
1468. மன மருந்தியல் | Phsychopharmacology |
1469. மன வய இயல் அறிதுயிலுமை (அறிதுயில் கலை/hypnotism) சொல் அறிமுக மாவதற்கு முன்னர் 1843இல் இயேம்சு பிரெயிடு(James Braid) என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்டதே மனவய இயல்(Neurypnology) | Neurypnology |
1470. மனக் குமுகவியல் | Psychosociology |
1471. மனக் காட்சியியல் Noology noûs என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மனம். |
1472. மனநடத்தையியல் | Cognitology |
1473. மனநடையியல் | Nomology |
1474. மனித உடம்பியியல் | Human Physiology |
1475. மனிதமரபியல் | Human Genetics |
1476. மனிதநேயஉளவியல் | Humanistic psychology |
(தொடரும்)
No comments:
Post a Comment