(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1301 – 1313  இன் தொடர்ச்சி)

1314. புவியக இயங்கியல்

Geodynamics

1315. புவியியல்

Geology

1316. புவிவள  நுட்பியல்

Earth resources technology

1317. புள்ளிகணத் திணைஇயல்

Point set topology

1318. புள்ளியிய உளவியல்

Statistical Psychology

1319. புள்ளியிய வயணஇயல்

Statistical Methodology

1320. புள்ளியியல்

புள்ளி இயல், புள்ளி விவரங்கள் இயல், புள்ளித் தொகுப்பியல், புள்ளிவிவர வியல், புள்ளிவிவரம், புள்ளி விளக்கம், புள்ளிவிவர அறிவியல் எனப்படுகின்றது.

தமிழில் புள்ளிவிவரம் / புள்ளி விளக்கம், புள்ளியியல் எனத் தனித்தனியே குறிப்பிடினும் ஆங்கிலத்தில்  Statistics என்னும் ஒற்றைச் சொல்லாலேயே இரண்டையும் குறிக்கின்றனர். புள்ளிவிளக்க அறிவியலை நாம் தமிழில் சுருக்கமாகப்

புள்ளியியல் – Statistics  எனலாம்.

Statistics

1321. புற உயிரியல்

Exobiology– புறமண்டிலவியல், புறவெளி உயிரியல் எனப் படுகின்றது. புறவெளியில்/புற மண்டிலத்தில் உள்ள உயிரிகள் குறித்த இயலைச் சுருக்கமாகப் புற  உயிரியல்  எனலாம்.

Exobiology

1322. புற ஏவியல்

ballista என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஏவு/எறி.

Exterior Ballistics

1323. புறஉறுப்பு நோயியல்

Acropathology

1324. புறக் கோளியல்

Exoplanetology

1325. புறப் பொருளியல்

Economics, external

1326. புறமண இனஉறுப்பியல்

Praxeology என்பதைத் தத்துவத் துறையிலும் பாலியல் துறையிலும் உற்பத்தி உறவியல் என்று குறிப்பிடுகின்றனர். இது திருமண உறவிற்குப் புறம்பாக இனப்பெருக்க உறுப்புகளைப் பயன்படுத்துவது குறித்த இயலாகும். எனவே, சுருக்கமாக (உற்பத்தி உறவியல் என்று சொல்லாமல்) புறமண இன உறுப்பியல் எனலாம்.

Praxeology(2)

1327. புறவடிவ நகர்வியல்

Morphotectonics

1328. புறவெளித் தொல்லியல்

Exoarcheology(2)

1329. புற்களியல்

grāmen என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் புல்.

Graminology

(தொடரும்

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000