(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1411 – 1423 இன் தொடர்ச்சி)

1424. மரபு உளவியல்

Genetic Psychology

1425. மரபு நுட்பியல்

Genetic Technology

1426. குடிவழி யியல்

மரபுவழியியல், கொடிவழி, குலவழி, குலமரபு, கால்வழியியல், மரபுவரிசை யியல்,  குடிமரபியல், மரபியல் எனக் கூறுகின்றனர். Genetic-மரபியல் எனப்படுவதால் அதனை நீக்கி விடலாம்.  குடிமரபியல், மரபு வழியியல் என்றாலும் குழப்பம் வரலாம். கொடிவழி, குலவழி, கால்வழி என்பன ஒத்த பொருளுடை யனவே. எனினும் எளிமையாகக் குடி வழி > குடிவழியியல் எனலாம்.

Geneology/ Geneaology/Genealogy

1427. மரபுஉயிரியநுட் பியல்

Traditional Biotechnology

1428. பரவணி விசையியல்

Hereditary Mechanics மரபுசார் விசையியல்  எனப்படுவது சரிதான். எனினும் Genetic என்பதை மரபு எனக் குறிப்பிடுவதால் வேறு சொல்லைப் பயன்படுத்தலாம்.

Hereditary – மரபு வழி, பரம்பரை, பரம்பரையான, பரம்பரைவழி, மரபுப்பேறு, மரபுரிமையாக வருகிற, மரபுரிமையான, மரபுவழிசார், மரபுவழியான எனப் பல பொருள்கள் உள்ளன. வழிவழியாக வரும் முறைமையைக் குறிக்கப் பரவணி என்றும் பயன்படுத்தி யுள்ளனர். எனவே,

பரவணி விசையியல் – Hereditary Mechanics எனலாம்.

Hereditary Mechanics   

1429. மரபுத்தொடரியல்

Idiomatology

1430. மரபுப்பொறியியல்

Genetic Engineering

1431. மரபுவழிஒட்பவியல்

Genetic Epistemology

1432. மரவரியியல்

Dendrochronology – கால இடைவெளி அளவியல்,  மரக்கால முறையியல், மரஉருவள வியல் எனப் படுகின்றது. மர வளர்ச்சியை உணர்த்தும் அதன் மூலம் அதன் ஆண்டு முதிர்வைக் குறிக்கும் மர உள்வளையங்களை முதிர்வளை என ‘அனைவருக்குமான அறிவியல் தமிழ்’ நூலில் குறித்துள்ளேன். மலையாளத்தில் இதனை ஆண்டுவளையங்கள்(வருசவலயங்கள்) என்றே குறிக்கின்றனர். மரத்தில் ஆண்டுதோறும் உருவாகும் வரி அடிப்படையிலான ஆராய்ச்சியைக் குறிப்பதால் மரவரியியல் – Dendrochronology எனலாம்.

Dendrochronology

1433. மரவரை புவிவடிவியல்

Dendrogeomorphology

(தொடரும்

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000