(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1270 – 1284 இன் தொடர்ச்சி)

1285. புத்தியற்பியல்

New physics

1286. புத்தினத் தோற்றவியல்

Neoendemics

1287. புயலியல்

Cyclonology

1288. புயனிலை யியல்

புயல்கணிப்பு வானியல் என்றும் சமநேர வானிலை ஆய்வியல், சமநேர வானிலையியல், தொகுப்பு வானிலையியல் என்றும் குறிப்பிடுகின்றனர்.

 Synoptic என்றால் இலத்தீனிலும் கிரேக்கத்திலும்  ஒருங்கே பார்த்தல் எனப் பொருள். வானிலையை ஒருங்கே பார்த்துப் புயல் நிலையைக் கணிப்பதால் புயல்கணிப்பு வானியல் என்கின்றனர். புயல்கணிப்பியல் / புயல் வானிலையியல்  > புயல் + நிலையியல் >புயனிலையியல் – Synoptic Meteorology எனச் சுருக்கமாகக் கூறலாம்.

மேல்+நிலை(ப்பள்ளி)>மேனிலை(ப்பள்ளி) ஆவதுபோல் புயல்+நிலை>புயனிலைஆகும்.

Synoptic meteorology (2)

1289. புரதப் பொறியியல்

Protein Engineering

1290. பகுதி உளவியல்

Faculty புலம் என்றும் உடலியலில் புலன் என்றும் குறிக்கப் பெறுகிறது. புலம் என்பது பல்கலைக்கழகத்தில்/கல்விநிலையத்தில் ஒரு பிரிவை/பகுதியைக் குறிக்கிறது. புலம் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் பல்கலைக்கழகத்தில் உள்ள புலத்துறை சார்ந்து கருதிப் பார்ப்போம். எனவே, புல உளவியல் என்று குறிப்பிடாமல் நேடியாகவே பகுதி எனக் குறித்துப் பகுதி உளவியல் என்று குறித்துள்ளேன்.

Faculty Psychology

1291. பாய்ம நிலையியல்

நிலை நீரியல், நிலை நீர்மவியல், நீர் நிலையியல், நீர்நிலையியல், நீர்ம நிலை இயல், நீர்ம நிலையியல் எனப் பலவாறாகச் சொல்லப் படுகின்றது. சில இடங்களில் நீர் இருக்கும் குளம் முதலான நீர்நிலைகளைக் குறிப்பதாகத் தவறாகப் பொருள் கொள்ளவும் நேரிடும். இங்கே நீரைக் குறிக்காமல் நீரின் பாயும் திறனைக் குறிக்கிறது. எனவே பாய்ம நிலையியல் என்பதே சரியாகும்.

Hydrostatics

1292. புலப்புவியியல்

Field geology

1293. புலனியல்

Esthesiology

1294. புலனுறுப்பியல்

Esthematology

1295. புல்லியல்

Agrostology

1296. புவி அரசியல்

Geopolitics

1297. புவி இயற்பியப் பொறியியல்

Geophysical Engineering

1298. புவி இயற்பியல்

Geo physics

1299. புவி உயிரியல்

Geobiology

1300. புவி உள்ளகவியல்

சூழ்நிலவியல் என்றும் நிலத்துள்ளகவியல் என்றும் கூறுகின்றனர். நிலத்துள்ளகவியல் என்பதே பொருந்தி வருகிறது. அதையே புவி உள்ளகவியல் எனக் குறித்துள்ளோம்.

Plutology(2)

(தொடரும்

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000