(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1531-1550 இன் தொடர்ச்சி)
1551. முடுக்கிய  வரைவியல் 
முனையம் முடுக்கப்பட்ட வரைவியல் துறை,  முடுக்கு வரைகலைத் துறை என்கின்றனர். இச்சொல் கணிப்பொறித் துறையைச் சேர்ந்தது. எனவே, Port -துறைமுகம் என்று பொதுச்சொல்லில் குறிப்பது பொருந்தாது. முனைப்புள்ளியைக் குறிக்கும் இதனை முனையம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
Accelerated Graphics Port  
1552. முட்டையியல்
Oology முட்டைஇயல், புள்முட்டை ஆய்வு எனக் கூறப்படுகிறது. புள் என்றால் பறவை. Promorphology என்பது பிறப்பிற்கு முந்தைய வடிவியல் என்று முட்டை ஆய்வைக் குறிக்கிறது. Ovology  என்பது முட்டையின் தோற்றம், அமைவு முதலிய ஆய்வைக் குறிக்கிறது. பொதுவாக நாம் முட்டையியல் – Oology / Promorphology / Ovology என்றே கூறலாம். Promorphology2  என்பது (கரிம வடிவங்களின்) படிக இயல் என்றும் குறிக்கப்பெறுகிறது.
Oology / Promorphology / Ovology   
1553. முட்தோலியியல்  
Echino என்பதன் ஒரு பொருள் முள்ளெலி, முள்ளம்பன்றி போன்ற முள்ளுடைய தோலைக் குறிக்கும்.
Echinology
1554. முதலீட்டு நுட்பியல்Investment Technology
1555. முதனியியல்
primate என்னும் ஃபிரெஞ்சுச் சொல்லின் பொருள்கள் முதலிடம்/ முதன்மை/உயர்வு/ சிறப்பு  என்பனவாகும். முதல் தோற்றமாகக் கருதப்படும் பாலூட்டி வகையான குரங்கினத்தை இப்பொருளில் முதனி எனக் குறிப்பிடு கின்றனர். முதனி குறித்து ஆராய்வது முதனி யியல்.   உயர்வு என்னும் பொருளின் அடிப்படையில் உயர்நிலைப் பாலூட்டியியல் என்றும் கூறுகின்றனர். சுருக்கச் சொல்லான முதனியியல் என்றே குறிப்பிடுவோம்.
Primatology
1556. முதியோர் கல்வியியல்  
andro- +‎ (ped)agogy என்பதன் கூட்டுச்சொல். andro = மனிதன்/ஆடவர். pedagogy = கற்பிப்பியல்/ஆசானியல். கூட்டுச் சொல்லாக இந்த இடத்தில் முதியோர் கல்வியியல் என்னும் பொருளில் பயன் படுத்தப்பட்டுள்ளது.  
Andragogy

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000