(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1567-1576 இன் தொடர்ச்சி)
1577. முனைய வானிலையியல் Polar என்றால் துருவம் என்கிறோம். முனையம் என்பது ஏற்றதாக இருக்கும். | Polar meteorology |
1578. முன்வைப்பு வரைவியல் | Presentation Graphics |
1579. மூ மானிடவியல் | Protoanthropology |
1580. மூ தொல்லியல் | Protoarcheology |
1581. மூ விலங்கியல் | Protozoology |
1582. மூக்கியல் rhinós/rhís என்னும் பழங் கிரேக்கச் சொற்களின் பொருள் மூக்கு. nāsus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் மூக்கு. | Nasology / Rhinology |
1583. மூச்சியல் | Respirology |
1584. மூச்சுக் குழலியல் bronchus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குரல்வளை. | Bronchology |
1585. மூச்சுப்பாதை நோயியல் pneumologia என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நுரையீரல்/ மூச்சுப் பை. | Pneumology(1) / Pneumonology |
1586. மூடிடத் தட்பியல் குகை, மனை முதலிய சிற்றிடங்களில் நிலவும் தட்பவெப்ப நிலை குறித்தது. அடைவெளி அமைதியியல் எனப் பொறியியல் நுட்பியல் துறையில் குறிக்கப்பெறுவதை இணையக் கல்விக்கழகக் கலைச்சொற்கள் அகராதி கூறுகிறது. அமைதியியல் எனக் குறிக்கப்படுவதன் காரணம் தெரியவில்லை. அடைபகுதிக்குள் காற்றுநிலை அமைதியாக இருக்கும் எனக் கருதியோ வேறு காரணம் கருதியோ குறிக்கப் பட்டிருப்பினும் பொருந்தவில்லை. காண்க : தட்பியல்-Climatology | Cryptoclimatology |
(தொடரும்)
No comments:
Post a Comment