(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1587-1600இன் தொடர்ச்சி)

1601. மூலக்கூற்று நச்சியல்

Molecular Toxicology

1602. மூலக்கூற்று நோயியல்

Molecular Pathology

1603. மூலிகை யியல்

Herbology

1604. மூளைநோயியல்

Brain Pathology

1605. மூளையியல்

Encephalology

1606. மரபுப்பேற்றியல்

Mendelian genetics

1607. மெய்யியல்

Philosophy – அறிவார்வம்,  உடல் அறிவு முதலியவற்றின் தத்துவங்களை அறிவிக்கும் நூல், கரணம், கெற்பு,  ஞானம், தத்துவம், தத்துவசாசுத்திரம், தத்துவநூல், பட்டாங்கு, பிரகிருதி, மெய்ந்நூல், மெய் யியல், மெய் அறிவியல், மெய்ப்பொருளியல், மெய்ம வியல், மெய்இயல், மெய் யறிவியல், மெய் விளக்கவியல், மெய்யுணர்வு எனப் பலவாறாகக் கூறப் படுகின்றது.

பொதுவாக மெய்ப் பொருளியல் எனப்படுவதால் அதன் சுருக்கமான மெய்யியல் – Philosophy இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது.

Philosophia என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அறிவின் மீதான அன்பு என்பதாகும். இதனையே அறிவார்வம் என்கின்றனர்.

Philosophy

1608. மெய்ம்மிஇயல்

histós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மெய்ம்மி.

Histology

1609. மெய்ம்மி ஆக்கஇயல்

Stœchiology

1610. மெய்ம்மி உடம்பியியல்

Histophysiology என்பதையும் உடலியல் என்கின்றனர். இது உடலிலுள்ள உயிர்மி, மெய்ம்மிகள்பற்றிய ஆராய்ச்சி இயல். எனவே உயிர்மி மெய்ம்மி இயல் என்று பொருளாகிறது. சில துறைகளில் இச்சொல் இயங்கியல் என்னும் பொருளிலும் கையாளப் படுகிறது.

Histós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மெய்ம்மி.  மெய்ம்மி  உடம்பியியல் எனலாம்.

Histophysiology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000