(தமிழ்ச்சொல்லாக்கம் 41- 53 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

54. அந்நியாபதேசம் – முன்னிலைப் புறமொழி

சாகூதம் – உள்ளுறை

அவ்வளவில் அச்சபையருகிலிருந்தோர் தருவின் மீதிருக்கும் குயிலின் இனிய குரற் கேட்டலும், அதனை முன்னிட்டுக் கூறியதாக அரசனைக் குறித்து, ‘ஒ! குயிற் பிள்ளாய்! சுருதிக்கு இதமில்லாமலே கடினமாகக் கூவுகின்ற நீசமாகிய காக்கையின் சம்மந்த மில்லாவிடின் நீ சிறப்படைவாயன்றோ’ என்று முன்னிலைப் புறமொழியாக (அந்நியாபதேசம்)வோர் செய்யுளைக் கூறினர்.

உள்ளுறைப் (சாகூதம்) பொருளினையுடைய அவ்வுரையைக் கேட்ட ‘சடபிஞ்ஞர்’ – புத்தர்கள், மிதியுண்ட அரவு சீறியெழுந்தாற்போலும் வெகுண்டெழுந்து சமய தருக்கத்திற்குத் தாமே முன்னிட்டு வாதிக்கத் தொடங்கினர். –

நூல்        :               சிரீ சங்கர விசயம் (1879) பக்கம் – 6

நூலாசிரியர்         :               தொழுவூர் வேலாயுத முதலியார் (இராமலிங்க அடிகள் மாணவர்)

55. சத்து – இருப்பு

முக்தியின் அவசுத்தையில் மனம், புத்தி முதலியவை நாசமடைந்துவிடுமானால் ஆத்ம விநாசத்திற்கும் முக்திக்கும் பேதமென்ன? ஞானமற்ற ஆத்மாவோ ஆத்மாவேயல்ல, ஞானத்தினாலேயே அதன் சத்தை (இருப்பு) சொல்லப்படுகின்றது.

நூல்        :               சீவாத்துமா (1881) பக்கம் – 10

நூலாசிரியர்         :               பிரம்மோபாசி

56. சடமதியுள்ளவர் – புல்லறிவாளர்

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்