(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1551- 1556 இன் தொடர்ச்சி)
1557. முதுஉப்பல் அண்டவியல் | Old Inflationary Cosmology |
1558. முதுமை மருத்துவம் gêras என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் முதுமை. | Geriatric Medicine |
1559. மூப்பியல் Geronto என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் முதியவர்/மூப்பு. | Gerontology / Gerology |
1560. முத்தயியல் phílēma என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் முத்தம். | Philematology |
1561. முப்பருமானவியல் solid என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள்கள் திடப்பொருள், முப்பருமானம். | Stereology |
1562. மும்மை ஒப்புமையியல் வெப்பம், உந்து, நிறை மாற்றம் இவற்றிடையே உள்ள (heat, momentum, and mass transfer) ஒப்புமை குறித்தது. எனவே, மும்மை ஒப்பியல் எனலாம். | Colburn Analogy |
1563. முரணியல் heresio- என்பதன் பொருள் திரிபு. நிறுவப்பட்ட நம்பிக்கை களுக்கு அல்லது முறைமை களுக்கு முரண்பட்டவற்றைக் கூறும் கோட்பாடு என்பதால் முரணியல் எனக் குறித் துள்ளேன். | Heresiology 1 |
1564. மதவெறியியல் hæresy என்னும் பிரெஞ்சு முதலான சொல்லின் பொருள் கோட்பாட்டு முறைமை. மதக் கோட்பாட்டைக் குறிக்கிறது. மத வெறி குறித்த ஆராய்ச்சியைப் பற்றிய துறை. மத வெறியை ஆராயும் பொழுது மதத்திற்கு எதிரான கருத்துகள்பற்றிய ஆய்வும் இடம் பெறும். | Heresiology 2 |
1565. முருகியல் முருகு என்றால் அழகு என்றுதான் பொருள். அழகானவனை முருகன் என்பதும் அதனால்தான். அழகு குறித்த இயல் முருகியல் எனப்படுகிறது. | Aesthetics |
1566. முழுமனஉளவியல் Gestalt என்னும் செருமானியச் சொல்லிற்கு வடிவம் எனப் பொருள். Gestalt என்பதற்கு முழுமை என்றும் பொருள். முழுமன உளவியல் என்பதில் இருமுறை மனம்(உள்ளம்) வருவதால் முழுநிலை உளவியல் என மாற்றியுள்ளேன். பொதுமை உளவியல் என்றும் குறிப்பிடுகின்றனர். | Gestalt psychology |
(தொடரும்)
No comments:
Post a Comment