(தமிழ்ச்சொல்லாக்கம் 57 – 70 தொடர்ச்சி)
(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
71. தேகச்சுமை — உடற்பொறை
72. பச்சிமம் — மேற்றிசை
73. புளினம் — மணல்மேடு
74. மரணதினம் — உலக்குநாள்
75. மன்மதன் — ஐங்கணைக்கிழவன்
76. முத்தம் — உதடு
77. யோகநித்திரை — அறிதுயில்
78. இலாபம் — ஊதியம்
79. வாமம் — இடப்பக்கம்
80. விசம் — கடு
81. விருத்தாசலம் — முதுகுன்றம்
82. வேதவல்லி — மறைக்கொடி
83. வேதியர் — மறைவாணர்
நூல் : சிவராத்திரி புராணம் (மூலம்) (1881)
(யாழ்ப்பாணத்திலிருந்த காசி-அ. வரதராச பண்டிதர்)
அரும்பிரயோகவுரை : மா. நமசிவாயம்பிள்ளை. (சிவாநந்த சாகர யோகீசுவரர் அவர்களின் மாணாக்கர் மதராசு ரிவினியூபோர்டு ஆபீசு (செட்டில்மெண்ட்டு) கிளாருக்கு
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
No comments:
Post a Comment