(வெருளி நோய்கள் 191 -195 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 196 -200
196. அயலிந்தியர் வெருளி-Mikatikoindicaphobia
அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் (NRI) தொடர்பில் ஏற்படும் தேவையற்ற அச்சம் அயலுறை இந்தியர்கள் வெருளி. சுருக்கமாக அயலிந்தியர் வெருளி எனலாம்.
வெளிநாட்டிலிருந்து செல்வம் திரட்டி வந்து, இங்கே நம் தொழிலைச் சிதைப்பார்கள், செல்வத்தைத் தேய்ப்பார்கள், செல்வாக்கை ஒடுக்குவார்கள், வளர்ச்சியை அழிப்பார்கள் என்றெல்லாம் தேவையற்ற கவலையும் அளவு கடந்த வெறுப்பும் கொள்வர்.
வெளி நாடுகளில் அங்குள்ள தாய்நாட்டாருக்கு அயலிந்தியர் தங்கள் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு முதலானவற்றைப் பறிக்கின்றனர் என்ற வெருளியும் உள்ளது.
00
197. அயல்மனை வெருளி – Expellophobia
அயலார் வீடுகளுக்குச் செல்வதற்கு ஏற்படும் அளவு கடந்த பேரச்சம் அயல்மனை வெருளி.
அடுத்தவர் வீடுகளில் கழிவறைக்குச் செல்வதற்குக் கூச்சம் கலந்த அச்சம் சிலருக்கு ஏற்படும். கழிவறை தூய்மையின்மையாக இருக்கும் என்ற கவலையிலும் சிலருக்கு அடுத்தவர் இல்லத்தில் அல்லது வெளியிடங்களில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்த பேரச்சம் வரும். கழிவறைகளில் கூடுதல் நேரம் இருப்பவர்களும் நோயுற்று இருப்பவர்களும் அடுத்தவர் இல்லக் கழிவறைகளுக்குச் செல்ல அஞ்சுவர். தம் வீட்டுக் கழிவறைகளைப் பயன்படுத்த இவர்களுக்கு அச்சம் இருப்பதில்லை.
பொதுவாக இதனை அயல்மனை வெருளி என்னும் பொருளில் கையாண்டாலும் அயல் மனையில் உள்ள கழிவறைக்குச் செல்ல ஏற்படும் பெருங்கவலை என்பதால் கழிவறை வெருளி எனவும் சொல்லலாம். ஆனால், பிறர் வீடுகளுக்குச் சென்றால் சீட்டாட்டம் ஆட நேரிடும் என அளவுகடந்த பேரச்சம் கொள்வதையும் Expellophobia என்றுதான் கூறுகின்றனர். எனவே, பொதுவாக இதனை அயல்மனை வெருளி எனலாம்.
Expello என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் வெளியேற்று.
00
198. அயல்மொழி பெயர்ப்பு வெருளி – Lingojamphobia
அயல்மொழி பெயர்ப்பிற்கான இலிங்கோசம் தளம்(www.lingojam.com) தொடர்பான அளவுகடந்த பேரச்சம அயல்மொழி பெயர்ப்பு வெருளி
Lingo என்றால் அயல்மொழி எனப்பொருள்.
00
199. அயல்மொழி வெருளி – Xenoglossophobia
அயல்மொழி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அயல்மொழி வெருளி.
xeno என்னும் கிரேக்கச் சொல்லிற்கு அயல்நாட்டிற்குரிய என்றும் glosso என்னும் கிரேக்கச் சொல்லிற்கு மொழி என்றும் பொருள்.
00
200. அயல்யாழ் வெருளி – Citharaphobia
அயல்யாழ்(guitar) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அயல்யாழ் வெருளி.
செவ்விசை(Classical guitar), செழுமிசை(Folk guitar), மின்(Electric guitar), மீளொலி(Resonator guitar) முதலான பலவைக அயல்யாழ்கள் உள்ளன. ஒட்டு மொத்தமாக அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வகைகள் மீது பேரச்சம் இருக்கலாம்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment