(வெருளி நோய்கள் 301 – 305 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 306 – 310
- இயந்திரன் வெருளி – Robophobia
இயந்திரன்(robot) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இயந்திரன் வெருளி.
இயந்திரங்கள் மனிதர்கள்போல் செயற்படுவதால் அதுகண்டு அச்சம் கொள்கின்றனர். எந்திரன் மனிதர்களின் வேலைகளைப் பறிப்பதாக எண்ணி அதனாலும் கவலையும் பேரச்சமும் கொள்கின்றனர்.
செக்கு, சுலோவியா சொல்லான (Czech and Slovak) robota என்பதிலிருந்து Robo சொல் உருவானது.
00
- இயல் வானிலை வெருளி – Serenophobia
இயல் வானிலை(Fair Weather) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இயல் வானிலை வெருளி.
சூரியனுக்கும் காலநிலை மாற்றத்திற்கும் தொடர்பு உள்ளதால், இது சூரிய வெருளியுடன் (heliophobia) தொடர்புடையது.
Sereno என்னும் இலத்தீன் சொல்லிற்கு இயல் வானிலை எனப் பொருள். மப்பும் மந்தாரமும் அற்ற நிலையைக் குறிக்கும்.
00 - இயல்பு வெருளி – Nomiedophobia
இயல்பு நிலை குறித்த வரம்பற்ற பேரச்சம் இயல்பு வெருளி.
மக்களிடம் இயல்பாக உள்ள ஆர்வம், சுவை, நம்பிக்கை, பழக்க வழக்கம் உள்ள இயல்பான மனிதன் மீதான அளவுகடந்த பேரச்சத்தை இது குறிக்கின்றது. இயல்பான நிலையில் உள்ளவர்கள் சலிப்பிற்கு உரியவர்கள் என இவர்களைக் கண்டு வெறுப்போரும் அஞ்சுவோரும் உள்ளனர்.
இதனைச் சிலர் அறிவுத் துறைகள் வெருளி என விளக்கியுள்ளனர். Ologypediaphobia என்பதுதான் அறிவியல் துறைகள் வெருளி.
Normie என்றால் இயல்பான நிலை எனப் பொருள். இச்சொல்லில் இருந்து உருவானதே Nomiedo(phobia).
00
- இயற்பாட்டு வெருளி – Naturophobia
இயற்கையாக அமையும் வானிலை, மூடுபனி, இடி, சுழற்காற்று, அலை ஓட்டம், நில அரிப்பு, நில நடுக்கம், எரிமலைச் சீற்றம், நில நடுக்கம், கடல்கோள் முதலான நிகழ்வுகள் அல்லது பேரழிவுகள் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் இயற்பாட்டு வெருளி.
இயற்கைச் சீற்றங்கள், இயற்கையால் ஏற்படும் சீர்குலைவுகள் வரும் என முன் எச்சரிக்கை தெரிவிக்கும் பொழுதே மக்களுக்குப் பெருங்கவலையும் பேரச்சமும் ஏற்பட்டு வெருளிக்கு ஆளாகின்றனர்.
00
- இயற் பொருள் வெருளி – Physophobia
இயற் பொருள் குறித்த வரம்பற்ற பேரச்சம் இயற் பொருள் வெருளி.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment