(வெருளி நோய்கள் 291 – 295 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 296 – 300
296. இடை ஓய்வு வெருளி – Relaxationphobia
இடை ஓய்வு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இடை ஓய்வு வெருளி.
Relaxation என்றால் பணிக்களைப்பால் பணிக்கு இடையே சற்று எடுக்கும் ஓய்வு. இதனை இளைப்பாறுதல் என்பதே சரி.ஆனால், இறைப்பாறுதல் என்பதைத் தூக்கம் என்னும் பொருளிலும் அதன் அடிப்படையில் மீளாத் தூக்கம் அடைதல் என்னும் பொருளிலும் பயன்படுத்துகின்றனர். எ.கா. மேரியம்மாள் கருத்தருடைய இளைப்பாறுதலுக்குள் நுழைந்தாள்.
எனவேதான் இடை ஓய்வு எனக் குறித்துள்ளேன்.
00
297. இடைக்கோட்டு வெருளி – Bindaphobia
இடைக்கோடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இடைக்கோட்டு வெருளி.
நீளமான வரிகளை மடக்கி எழுதும்போது உடைபடும் சொல்லைக் குறிப்பதற்கோ இரு சொற்களை இணைத்துக் காட்டுவதற்கோ கையாளப்படும் முறையை இடைக்கோடு இடல் அல்லது பிணைக்கோடு இடல் (Hyphenation) என்பர். நிறுத்தற்குறிகளில் ஒன்றான இதை ‘ – ‘ எனக் குறிக்கின்றனர்.
அந்தந்தமொழி மரபுகளுக்கேற்ப இடைக்கோடு இடுவது பின்பற்றப்படுகிறது.
00
298. இடைவிலகல் வெருளி – exterviaphobia
இடைவழியிலிருந்து விலகுவது குறித்த அளவுகடந்த பேரச்சம் இடைவிலகல் வெருளி.
ஒரு திட்டம் அலலது ஒரு பணி அல்லது ஒரு செயற்பாட்டிலிருந்து இடையில் விலக நேரிடுவது குறித்த வெருளியுமாகும்.
பள்ளியிலிருந்து மாணாக்கர்கள் கல்வியாண்டு இடையில் நிற்பது அவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஏற்படும் பெருங்கவலையைவிடக் கல்வியாளர்களுக்கும் அரசிற்கும் பெருங்கவலையறிப்பதாக உள்ளது.
exter என்றால் கிரேக்கத்தில் வெளிப்புறம் என்றும் via வழி என்றும் பொருள்.
exter என்றால் இலத்தீனில் தன்னியல்பான எனப் பொருள். இலத்தீனிலும் via என்றால் வழி என்றுதான் பொருள்.
00
299. இணைய அமைப்பு வெருளி – Forumphobia
இணைய அமைப்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் இணைய அமைப்பு வெருளி.
ஒரு பொது நோக்கத்திற்காக அமைக்கப்படும் மன்றம்,அவை,பேரவை என எந்த ஒரு குழுவும் அமைப்புதான். எனினும் இங்கே இணையப்பயன்பாடு தொடர்பான இணைய அமைப்பே குறிக்கப் பெறுகிறது.
இணைய அமைப்பில் இணைந்திருப்பதால், தேவைய்ற் சிக்கல் அல்லது அவப்பெயயர் அல்லது மானக்கேடு அல்லது இழுக்கு ஏற்படுமோ எனச் சிலர் வெருளிக்கு ஆளாகின்றனர். இது தேவையான எச்சரிக்கை உணர்வைத் தருவதே. எனினும் அளவுகடந்து போகும் பொழுது வெருளியாகிறது.
00
300. இணைய வணிக வெருளி – EBayphobia
இணைய வணிகம்(Ebay) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இணைய வணிக வெருளி.
இணைய வணிகம்(Ebay) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இணைய வணிக வெருளி.
இபே அல்லது ஈபே என்பது வலைவழி வணிக நிறுமம். உலகிலே பலவகைப் பொருட்களுக்கான மிகப்பெரிய இணையச் சந்தை இதுவே. யாரும் இபேயில் பெருட்களை விற்கவும் வாங்கவும் முடியும். பிறர் ஏமாற்றப்பட்ட செய்திகளைக் கேள்விப்பட்டுப் பொருளின் தரம், மாற்றுப்பொருளை அனுப்பல், தரங்குறைந்த பொருட்களை அனுப்பல் முதலான கவலைகளால் பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
இணைய வணிகத்தில் ஈடுபடும்போது மோசடிப் பேர்வழிகள் குறித்த எச்சரிக்கையும் தேவை. பகுத்தறிவிற்கு ஒவ்வாத கவலைகளும் கூடா.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment