(வெருளி நோய்கள் 306 – 310 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 311 – 315
311. இயற்பொருள் வாத வெருளி – Hylephobia(2)
வலிப்பு வெருளி – Hylephobia (1)
வலிப்பு நோய் குறித்த அளவு கடந்த பேரச்சம் வலிப்பு வெருளி.
இயற்பொருள்வாதம் தொடர்பான தேவையற்ற பேரச்சம் இயற்பொருள் வாத வெருளி
hyle என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் காடு. எனவே, காடுகளின் வெருளி என்கின்றனர். Hylophobia என்பதுதான் அடவிவெருளி / காடு வெருளி/ கானக வெருளி. அவ்வாறே நாம் வரையறுத்துக் கொள்வதுதான் குழப்பமின்றி இருக்கும்.
தத்துவத்துறையில் hyle என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் இயற்பொருள் வாதம் என்ற அடிப்படையில் இயற்பொருள் வாத வெருளி என்கின்றனர். மருத்துவத் துறையில் வலிப்பு வெருளி என்கின்றனர்.
00
312. இயெலுடா வெருளி-Zeldaphobia
புனைவுரு கதைப்பாத்திரமான இயெலுடா(Zelda) குறித்த அளவுகடந்த பேரச்சம் இயெலுடா வெருளி.
புதின எழுத்தாளர் பிரான்சிசு சுகாத்தர் ஃபிட்டுசெராலுடு(Francis Scott Fitzgerald) என்பாரின் மனைவி, புதின ஆசிரியரும் நாட்டிய நங்கையுமான இயெலுடா ஃபிட்டுசெராலுடு(Zelda Fitzgerald) ஆவார். இவரது பண்புநலன்களால் ஈர்க்கப்பட்டு இக்கதைப்பாத்திரத்திற்கு இவர் பெயரைச் சூட்டிஉள்ளனர்.
00
- இயென்னா மோர்கன் வெருளி – Jennamorganphobia
புனைவுரு இயென்னா மோர்கன்((Jenna Morgan) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இயென்னா மோர்கன் வெருளி.
இயென்னா மோர்கன் (Jenna Morgan) ஆர்தர் படப்புத்தகங்கள், அசைவூட்டப்படங்கள் ஆகியவற்றில் இடம் பெறும் புனைவுருப் பெண் பாத்திரம்.
00
- இயேசு வெருளி – Jesusophobia
இயேசுநாதர் மீதான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் இயேசு வெருளி.
கிறித்துவச் சமயத்திற்கும் கிறித்துவருக்கும் எதிரான பேரச்சமும் பெருங்கவலையும் இதனைச் சார்ந்ததே. கிறித்துவெருளி (Christophobia), கிறித்துவர் வெருளி (Christianophobia) ஆகியவற்றுடன் தொடர்புடையதே.
00
- இயேனட்டு பெரிலிசுடைன் வெருளி – Janetperlsteinphobia
புனைவுரு இயேனட்டு பெரிலிசுடைன் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இயேனட்டு பெரிலிசுடைன் வெருளி.
இயேனட்டு பெரிலிசுடைன், ஆர்தரின் அசைவூட்டப் படத்தில் வரும் புனைவுரு. அருனாலுடின் அனைத்தையும் அறிந்த, ஒரே உறவினர் இவர்தான். இவர் நிறைய தற்பெருமை பேசுபவராகவும் உள்ளார். இதனால் இவர்மீது எரிச்சலுற்று வெருளியாக மாறுகிறது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment