(வெருளி நோய்கள் 311 – 315 : தொடர்ச்சி)

புனைவுரு இயேன் இரீடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இயேன் இரீடு வெருளி.
ஆர்தர் என்பது மார்க்கு பிரவுன்(Marc Brown), கேத்தி வா(Kathy Waugh) ஆகியோரால் உருவாக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர்.
இதில் வரும் இயேன் இரீடு மீதான பேரச்சத்தையும் அதனால் வரும் வெருளியையுமே குறிப்பது இது.
00

புனைவுரு இரஃபேல்(Raphael) குறித்த வரம்பற்ற பேரச்சம் இரஃபேல் வெருளி.
பதினகவை சடுதிமாற்ற நிஞ்சா கடலாமைகள்(Teenage Mutant Ninja Turtles) உலகில், இரபேல் பெரும்பாலும் பூச்சிகள் மீது கடுமையான வெறுப்பைக் கொண்டவராகச் சித்தரிக்கப்படுகிறார். சில சமயங்களில் தீவிர அருவருப்பும் வெறுப்பும் கொண்டவராகக் காட்டப்படுகிறார். இவரால் எதிர்க்ப்படும் பூச்சிகளைக் கண்டு அச்சம் கொண்டும் பூச்சி மீதான வெறுப்பைப் பார்த்தும் வெருளி கொள்கின்றனர்.
00

இரட்டைப்படை எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் இரட்டைப்படை எண் வெருளி.

இரட்டைப்படை எண் வரும் நாளில் முதன்மைப் பணியை ஆற்றாதிருத்தல், இரட்டைப்படை எண் வீட்டிற்குக் குடிபோகாமல் இருத்தல் என எல்லா நேர்வுகளிலும் இரட்டைப்படை எண்களை இவர்கள் தவிர்ப்பர்.

omalos + numerus ஆகிய கிரேக்கம் + இலத்தீன் சொற்களுக்கு இரட்டைப்படை எண் எனப்பொருள்.

00

எண் இரண்டு குறித்த காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் இரண்டாம எண் வெருளி.
இரண்டு இரண்டாக உள்ள இணை, இரு கூறாக உள்ள பகுப்பு, இருமை வாதம் முதலியன மீதும் இத்தகையோருக்குப் பேரச்சம் வரும்.
00

இரண்டாம் நிலை குறித்த வரம்பற்ற பேரச்சம் இரண்டாம் நிலை வெருளி.
Deftero என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் இரண்டாவது.
00

(தொடரும்)