(வெருளி நோய்கள் 316 – 320 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 321 – 325
- இரத்தக் காட்டேரி வெருளி – sanguivoriphobia
இரத்தக்காட்டேரி குறித்த அளவுகடந்த பேரச்சம் இரத்தக் காட்டேரி வெருளி.
இரத்தக்காட்டேரிகள் குறித்துத் திகில் படங்களில் பார்ப்பவர்கள், இரத்தக்காட்டேரி குறித்த படம், காட்சி, செய்தி முதலியவைபற்றிப் பேரளவு அச்சம் கொள்கின்றனர்.
தமிழ் நாட்டவர் அணங்கு வெருளி என்றும் சொல்லலாம். அணங்கு தெய்வப் பெண்ணாகவும் கொலை செய்பவளாகவும் இரு வகைகளில் குறிக்கப் படுகின்றது. எனவே, அணங்கு குறித்தும் காரணமற்ற பேரச்சம் உள்ளது.
00
- இரத்துபரன் வெருளி – Ratburnphobia
புனைவுரு இரத்துபரன்(Ratburn) குறித்த வரம்பற்ற பேரச்சம் இரத்துபரன் வெருளி.
ஆர்தர் அசைவூடடப் படத்தில் உள்ள பாத்திரம்.
00
- இரவு மேசை வெருளி – Naitosutandophobia
இரவு மேசை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இரவு மேசை வெருளி.
இரவுமேசை என்பதை இடக்கரடக்கல் சொல்லாகக் கருதலாம். இரவு நேரத்தில் அறைக்குள்ளேயே சிறுநீர் கழிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கழிகலனையே குறிக்கிறது. இதனை அறை மிடா, சிறுநீர் மிடா chamber pot/chamberpot, piss pot என்றும் குறிப்பர். பெரும்பாலும் கட்டிலுக்கடியிலும் சிறுபான்மை அறையின் மூலையிலும் இதனை வைத்திருப்பர். சிறுநீர் நாற்றத்தால் பெருவெறுப்பும் பேரச்சமும் கொள்கின்றனர்.
நேர் பொருளாக இல்லாமல் உரிய பொருளாக இரவுக் கழிகலன் வெருளி என்று சொல்லலாம். ஆனால் தவறாகக் குறித்துள்ளதாகக் கருதுவர். எனவேதான் இடக்கரடக்கடலாக இரவு மேசை என்றே குறித்துள்ளேன்.
சிறைச்சாலைகளிலும் சீர்திருத்தப்பள்ளிகளிலும் இரவுக் கழிகலன் பயன்பாடு உள்ளது. ஆனால், சிறுநீர் கழிப்பதற்காக மட்டுமல்லாமல் மலம் கழிக்கவும் பயன்படுத்துகின்றனர். இதனால் நாற்றம் பொறுக்க முடியாமல் வெருளி கொள்கின்றனர்.
Naitosutando” (ナイトスタンド) என்பது பெரும்பாலோர் பயன்படுத்தும் “nightstand” என்பதன் சப்பானிய ஒலிபெயர்ப்புச் சொல். ஆனால் உண்மையான சப்பானியச்சொல் “naito teburu” (ナイトテーブル). என்பதாகும்.
அகராதிகளில் பொதுவாக இரவு மேசை எனக் குறித்திருப்பதாலும் மேசைக்கான படமே வெளியிட்டுள்ளமையாலும் நான் முதற்பதிப்பில் மேசை படத்தையே வெளியிட்டிருந்தேன். இருப்பினும் இக்கருத்திற்கு உடன்படாமையால் மேலும் ஆராய்ந்து பார்தது உரிய படங்களை இப்பதிப்பில் வெளியிட்டுள்ளேன். உரிய விளக்கத்தையும் அளித்துள்ளேன்.
00
- இரவு விளக்கு வெருளி – Yedengphobia
இரவு விளக்கு குறித்த வரம்பற்ற பேரச்சம் இரவு விளக்கு வெருளி.
“yèdēng” (夜灯) என்பது ஒரு சீனச்சொல். இதன் பொருள் இரவு விளக்கு, இரவு ஒளி என்பன வாகும். பொதுவாகச் சுற்றுப்புற ஒளிக்காக அல்லது அறை ஒளிக்காகப் பயன்படுத்தப்படுவது.
இரவு வெருளி, இருட்டு வெருளி முதலியவற்றிற்கு எதிர்நிலையானது இது.
00
- இரவு வெருளி – Noctiphobia
இரவு குறித்த அளவுகடந்த பேரச்சம் இரவு வெருளி.
இருட்டு குறித்து அஞ்சுபவர்களுக்கு – இருட்டு வெருளி உள்ளவர்களுக்கு – இரவு வெளி வருவதுண்டு.
பொதுவாக இரவு நேரங்களில் திருட்டு, கொள்ளை, கொலை, கற்பழிப்பு முதலிய பல குற்றங்கள் நடப்பதால், இரவு கண்டு அச்சம் கொள்வோர் உள்ளனர்.
nocti என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இரவு
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment